0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி

த்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board on Culture) உறுப்பினராக நியமனம் செய்துள்ளது.

கலாசாரத்துறையின் கொள்கை முடிவுகளை வகுத்தல், தேசிய மற்றும் மண்டல் அளவில் புதிய திட்டங்களை உருவாக்குதல், அவற்றை செயல்படுத்துதல் போன்ற பணிகளில் இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும்.

மத்திய கலாசாரத் துறை அமைச்சர் தலைமையில் இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும். கலாசார ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்கும். சுதா ரகுநாதன் அவர்களுக்கு மங்கையர் மலரின் வாழ்த்துக்கள்.

செபியின் முதல் பெண் தலைவர்

செபி (SEBI- Securities and Exchange Board of India) பங்குச்சந்தைகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பு. 1988 ல் நிறுவப்பட்டது.

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்குவது. அதன் தலைவராக முதன் முதலாக ‘மாதவி புரி புச் (Madhabi Puri Buch)’ என்ற பெண்மணி நியமிக்கப் பட்டிருக்கிறார்.

அஹமதாபாத் IIM மில் MBA படித்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு  ICICI வங்கியில் தனது பணியை தொடங்கியவர் மாதவி, கார்ப்பரேட் பைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

பின்னர் ICICI வங்கி பங்குச்சந்தை பிரிவின் தலைமை மேலாளராக தேர்ந்த அனுபவத்துடன் செயலாற்றியவர். அதன் பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கே, க்ரேட்டர் பசிஃபிக் கேபிடல் (Greater Pacific Capital LLP) நிறுவனத்தில், வியாபார அபிவிருத்திப் பிரிவின் தலைவராக பணி செய்த பின், சீனாவில் ஷாங்காய் நகரில் ‘நியூ டெவலப்மென்ட்’ வங்கியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

செபி அமைப்பில் நிர்வாகக்குழுவின் முழுநேர உறுப்பினராக கடந்த 2017 ஏப்ரல் முதல் பதவி வகித்து வந்திருக்கிறார். தவிர, பங்குச் சந்தை சார்ந்த பல்வேறு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

செபியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அஜய் தியாகியின் பதவிக்காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவுக்கு  வந்துள்ளது. இதனையடுத்து செபியின் புதிய தலைவராக ‘மாதவி புரி புச்’  நியமிக்கப்பட்டுள்ளார்.

பழங்குடிப் பெண்களுக்கு புத்தகம் தரும் நூலகர் ராதாமணி

டமாடும் நூல் நிலையம் கேள்விப் பட்டிருக்கிறோம். நடமாடும் நூலகர் (Mobile Librarian) தெரியுமா? வாருங்கள், அவரை சந்திப்போம்.

கேரளாவில், வயனாடு மாவட்டத்தில், இருக்கும் 65 வயதுப் பெண்ணான ராதாமணி தான் அவர். அங்கு மொத்தக்காரா பகுதியில் உள்ள பிரதிபா பொது நூலகத்தில் லைப்ரேரியனாக வேலை பார்த்து வருபவர். இந்த நூலகத்தில் சுமார் 11,000 புத்தகங்கள் இருக்கின்றன.

மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தில், (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) வேலைக்குச் செல்லும் பெண்கள், மற்றும் கிராமப்புறங்களில், வயல் வேலை, கூலி வேலை செய்யும் பெண்கள், பழங்குடிப் பெண்கள் என்று எல்லாப் பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக, தினமும் 4 கிலோமீட்டர் நடந்து சென்று, புத்தகங்களை படிக்கக் கொடுத்து வாங்கி, அவற்றை சரியாக பராமரித்து, ஒரு உன்னதமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்  இவர்.

முதலில் அவர்களுக்கு தினசரிப் பத்திரிகைகள் படிப்பதில் மட்டும் தான் ஆர்வம் இருந்தது. ஆனால் ராதாமணி எடுத்த முயற்சியால் இப்போது நாவல்கள், கதை, பயணக் கட்டுரைகள் போன்ற பலவகை நூல்களையும் ஆர்வத்தோடு படிக்கிறார்கள் என்கிறார்.

கோவிட் சமயத்தில், இவரால் போக முடியவில்லை. அப்போது அந்த பெண்களே இவர் வீடு தேடி வந்து நூல்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்வார்களாம். தற்போது இருக்கும் 102 உறுப்பினர்களில் 94 பேர் பெண்கள்தான்.

சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் மிகவும் கொண்டிருந்த ராதாமணியை, அவரது தந்தை (எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தும்) ஆர்வத்தோடு படிக்க வைத்து ஊக்கம் தந்திருக்கிறார்.

ஏற்ற இறக்கம் நிறைந்த பாதைகளில், முன்பெல்லாம் 50 புத்தகங்கள் வரை எடுத்துச்செல்லும் இவரால் இப்போது 25 வரை மட்டுமே தூக்கிப் போக முடிகிறதாம்.

சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் இவரது கணவரும் வீட்டுப் பொறுப்புக்களில் உதவி செய்வதால் தன்னால் இந்தப் பணியை செய்ய முடிகிறது என்று கூறுகிறார்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
சருமத்தைக் காக்க! ஆரோக்கியமான உடல், பொலிவானமுகம், பளப்பளப்பான சருமம்பெற அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறை குடித்து வரவேண்டும். சருமம் பளப்பளப்பாக இருக்க ஆவாரம்பூ தேநீர் குடித்து வரலாம்....

நீங்கள் குரங்குக் குட்டியா? பூனைக் குட்டியா?

1
பகவானை அடைவதற்கு இரண்டு முறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை, மற்றொன்று பூனைக்குட்டி முறை. சமஸ்கிருதத்தில் இதை மர்க்கட கிசோர நியாயம், மார்ஜார கிசோர நியாயம் என்றும் கூறுவர். மர்க்கட கிசோர...

கவிதைத் தூறல்!

1
- நிலா, திருச்சி அஃறினண அறிவு சண்டை போட்டு எங்களிடம் பேச மறுக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் மரம் எங்கள் வீட்டில் பூக்கள் தூவுகிறது. .......................................................... அறியாமை கோயில் மரங்களில் ஆடும் சிறு மரத் தொட்டில்கள் அறிவதில்லை! குழந்தையுடன் ஆடும் அனாதை ஆசிரம தொட்டில்களை! .......................................................... முன்பே ஞாயிறு முழு ஊரடங்கால் சனிக்கிழமையே மரணம் வந்துவிடுகிறது! பிராய்லர் கோழிக்கு. .......................................................... பிரசாதம் குழந்தைகள் சாப்பிடும்போது சிந்தும் பால்சோற்று பருக்கைகள் பிரசாதமாகிவிடுகிறது எறும்புகளுக்கு! .......................................................... சூதாட்டம் நவீன சகுனிகள் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்கிறார்கள் ஆன் லைன் ரம்மி...

பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்!

0
ஜி.எஸ்.எஸ். பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ் 6 போப்கள், 13 பிரதமர்கள், 70 ஆண்டுகள். இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டனின் மணிமுடியையும் அரியணையையும் ஏற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பிரிட்டனின் சரித்திரத்திலேயே இவ்வளவு வருடங்கள் அரசாட்சி...