0,00 INR

No products in the cart.

ராதே ஷ்யாம்

பிரபாஸ்பூஜா ஹெக்டே நேர்காணல் :
– ராகவ் குமார்

அரபிக்குத்து பாடல் வாயிலா தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் நுழைந்த பூஜா ஹெக்டே,  மெகா ஸ்டார் பிரபாசுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடிக்கிறார். அழகான காதலை சொல்லும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்திருந்த பூஜாவை சந்திக்க சென்றோம். வெள்ளை நிற ஆடை அணிந்து தேவதை போல காட்சி தந்தார்.

ஹாய் பூஜா, எப்படி இருக்கீங்க? என்ன நீங்க மட்டும்… பிரபாஸ் சார் வரலியா?  

‘இப்ப வந்துருவார்’ன்னு சொல்ல மாட்டேன். எப்ப வருவார்ன்னு சொல்ல முடியாது. இதுதான் உண்மை. ஏன்னா, பொண்ணுங்க நாங்க கூட இப்பல்லாம் சீக்கிரம் டிரஸ் பண்ணிக்கிட்டு வந்துடுறோம்.  பிரபாஸ் சார் மாதிரி மெகா ஸ்டார்ஸ்லாம் எப்ப மேக்கப் பண்ணி முடிப்பாங்கன்னு சொல்ல முடியல.

பிரபாஸ் சார் வரட்டும்…  இப்ப நீங்க சொல்லுங்க. தமிழ் படங்களில் நடிக்கிறது எப்படி இருக்கு?

மனப்பூர்வமா சொல்றேன், தமிழ் மக்கள் ஒருத்தரை பிடிச்சுட்டா தங்கள் வீட்டு பொண்ணு மாதிரி கொண்டாடுறாங்க. பீஸ்ட் படத்தின் சாங் வெளியான பிறகு இதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் சார், பிரபாஸ் சார் மாதிரி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போது ரசிகர்கள் இன்னமும் நம்மகிட்ட நெருங்கிடறாங்க.

தென்னிந்திய மொழிகள் படங்களில் நடிக்கிறீங்க. இப்போ
‘ராதே ஷ்யாம்’ இந்தியாவில் பல மொழிகளில் ரிலீஸ் ஆகுது.  பேன் இந்தியா நடிகையா மாறிட்டீங்கதானே
? இந்த ஃபீலிங் எப்படி?

‘ராதே ஷ்யாம்’  படத்தின் டைரக்டர் ராதா கிருஷ்ணகுமார்  இந்த கதையை ஐந்து வருடங்களாக உருவாக்கி உள்ளார். இந்த படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் இத்தாலி, ஜார்ஜியா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் படாமக்கப் பட்டுள்ளன. உலகமெல்லாம் காதல் பொதுவானது என்பதால் ராதே ஷ்யாம் பேன் இன்டர்நேஷனல் படமாகிவிட்டது. இது எனக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் ஒரு நடிகையா பொறுப்புகளும் கூடுறதை உணர்கிறேன். ரசிகர்கள் ஓஹோன்னு கொண்டாடும்போது இன்னமும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது

உங்களுக்கும் பிரபாஸ்க்கும் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி எப்படி உள்ளது?

இந்த போஸ்டரை பார்க்கும்போது உங்களுக்கு என்ன மாதிரி எண்ணம் வருதோ அதுதான் எங்களுக்கான கெமிஸ்ட்ரி. இதை உருவாக்குவது ஓர் அழகான ஓவியத்தை தீட்டுவது போல. இந்த வேதியல் ஓவியத்தை தீட்ட டைரக்டர், கேமராமேன் என பலர் உழைத்து இருக்கிறார்கள்.”  (இப்படி பூஜா பேசிகொண்டிருக்கும்போதே பிரபாஸ் உரையாடலில் கலந்துகொள்கிறார்.) “என்ன சார்  பூஜா பேசினா பேசிக்கிட்டே இருப்பாங்களே! இப்படித்தான் சூட்டிங் ஸ்பாட்லயும் எதாவது கேள்வி கேட்டுகிட்டே இருப்பாங்க.” பிரபாஸ் கலாய்க்க தொடங்குகிறார்.

‘அப்படி என்னதான் பேசுவாங்க’ என்று நாம் கேட்பதற்குள் பூஜா இடைமறித்து “அதெல்லாம் கம்பெனி ரகசியம். வெளியில் சொல்லாதீங்க” என்கிறார். “நம்ம பூஜா ரொம்ப நல்ல பொண்ணு. மனசுல எதையும் வெச்சுக்க மாட்டாங்க” என்று பூஜாவை கூல் செய்கிறார் பிரபாஸ்.

பிரபாஸ் சார், ‘ராதே ஷ்யாம்’ படம் எப்படி?

மிக உணர்வுபூர்வமாக இருக்கும். இக்கதையின் பின்புலம் இத்தாலியில் நடக்கிறது. அதுவும் 1970களில் நடக்கிறது.70களின் இத்தாலியை காட்சியில்  கொண்டு வர பலர் உழைத்து இருக்கிறார்கள். டைரக்டர்
ராதா கிருஷ்ணகுமாரின் எண்ணங்களுக்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா உயிர் கொடுத்திருக்கிறார்.  படத்தை திரையில் பார்க்கும்போது வேற லெவல் விஷ்வல் ட்ரீட்டாக இருக்கும். காலத்திற்கும் காதலுக்குமான போருக்கு முடிவே கிடையாது என்பதை வலியுறுத்தும் படம் இது.

காதல் தாண்டி இந்த படத்தில் வேற என்ன இருக்கிறது?

நிறைய இருக்கிறது. குறிப்பாக நாம் நம்பும் கைரேகை பற்றியது. கைரேகை  மீது உள்ள நம்பிக்கை; அதற்கும் நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களுக்கும் உள்ள பினணப்பும் பற்றி இப்படம் சொல்கிறது.

பாகுபலியில் செந்தமிழில் சரித்திர மொழி.  ‘ராதே ஷ்யாமில்’  காதல் மொழி. எது சுலபமாக இருந்தது?

கண்டிப்பாக காதல் மொழிதான். இரண்டு படத்திற்குமே மதன் கார்கிதான் வசனம் எழுதி உள்ளார். பாகுபலியில் செந்தமிழ் பேச வைத்து கொஞ்சம் கஷ்டப்படுத்திட்டார்னே சொல்லணும். (சிரிக்கிறார்) இப்படத்தில் காதல் மொழி பேச வைத்து ரொம்பவே சந்தோஷப்படுத்திட்டார். தேங்க்ஸ் டு மதன் கார்கி.

நிறைய மொழிகளில் நடிக்கிறீர்கள். ரசிகர்களின் ரசிப்பு நிலை எப்படி இருக்கிறது?

ரசிகர்கள் மொழிகளின் எல்லை தாண்டி ரசிக்க ஆம்பித்து விட்டார்கள். பாகுபலி கூட இதற்கு சரியான உதாரணம்.

எப்ப கல்யாணம் செய்துக்க போறீங்க? பூஜா மேடம்தான் கேட்க சொன்னாங்க என்று நாம் ஒரு பிட்டை போட…

“ஹலோ என்னை ஏன் மாட்டி விடுறீங்க? எனிவேஸ், ரசிகர்கள் சார்பா,  நானே பிரபாஸ்கிட்ட கேட்கிறேன். எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க பிரபாஸ்?”

“இன்னமும் என் மனசுக்கு பிடித்தமான, நான் கற்பனை செய்து வைத்து இருக்கும் பெண்ணை சந்திக்கவில்லை. சந்தித்ததும் கல்யாண சாப்பாடுதான். அந்த அதிர்ஷ்டசாலி பெண்மணி யாரோ?

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...