0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

டீ.வி.யில ஒரு விளம்பரம் பார்த்திருப்பீங்கநடிகர் பிரபு கண் கலங்கி விடை கொடுக்க, மணப்பெண்ணோ, ‘ஸ்மைலி’ சின்னம் காட்டி சிரிங்கப்பா!’ என்று சைகை செய்வார்.

ந்த விளம்பரம் பார்த்துக்கொண்டிருந்த என் தோழி, கனகா அழுதே விட்டார்.

கனகாவுக்கு, ‘அக்‌ஷயா’ என்றொரு மகள். ‘அபிநவ்’ என்றொரு மகன். இருவருமே அம்மாஅம்மா…’ என்று கனகாவின் காலையே சுற்றுச் சுற்றி வந்தவர்கள், அதாவது நேற்று வரை!

மகளுக்கு திடீரென்று நிச்சயம் ஆகி, திருமணமும் நடந்துவிட்டது.

அக்‌ஷயா தேனிலவில் இருக்க, கனகாவுக்கு இங்கே இருப்பே கொள்ளவில்லை.

எப்படி இருக்க? மாப்பிள்ளை அன்பா இருக்காரா? என்ன சாப்பிட்ட? கால் வலி இப்ப எப்படி இருக்கு?” போன்ற நூறு கேள்விகள் கனகாவைக் குடைந்தெடுக்கமகளோ, ‘அம்மா, இங்கே டவர் ரேஞ்ச் கிடைக்கலைஅப்புறம் பேசறேன்கூல்!’ என்று மெசேஜ் போடுகிறாள்.

இப்பல்லாம் அக்‌ஷயா பேச்சுல, ‘எங்க வீடு, எங்க ஏரியா, அவருக்குப் பிடிக்காதுபோன்ற வார்த்தைகள் வர்றபோதெல்லாம் கூடவே ஏதோ ஒரு வலி வருது” என்று மாய்ந்து போனாள் என் தோழி.

ஹலோ கனகாநாம்பளும் அதுபோன்ற ஷாக்கை நம்மைப் பெத்தவங்களுக்குக் கொடுத்தவங்கதானே? அதை மறந்துட்டீங்களே!” என்று தேற்றினேன்.

து முடிந்த சில மாதங்களில் கனகாவின் மகன் அபிநவ்வும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகவே, கனகா தரையிலிட்ட மீனாகத் துடித்துப்போனாள். தனிமையின் கொடுமை!

ஆரம்பத்தில், ‘அம்மா, ஐ மிஸ் யுவர் காளான் குழம்பு!’ என்று ஆரம்பத்தில் வீடியோ கால் செய்தவன், இப்போது வாரம் ஒருமுறை கனகா ஃபோன் செய்தாலும், தந்தி பாஷையில் பேச்சு முடிந்து போகிறதாம்!

எப்பவும் பிஸி! கால் யூ லேட்டர்!” என்று சொல்லி விடுகிறானாம்

து நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னைதான்!

பாலூட்டி வளர்த்த கிளிகள், கூட்டை விட்டுப் பறந்துபோனால், ‘இமோஷனல் வாக்யூம்’ ஒன்று நெஞ்சாங்கூட்டில் அடைத்துக்கொள்ளும். உண்மையே!

அதற்கு என்னதான் தீர்வு? ‘அட்டாச்ட் டிடாச்மென்ட்எனப்படும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் டெக்னிக்கை பயிற்சி செய்வதுதான்!

தாயும் பிள்ளையும் ஒன்றே ஆனாலும் வாயும் வயிறும் மட்டுமல்ல; மூளையும் எண்ண ஓட்டங்களும் வேறு. நமது விருப்பு வெறுப்புகளும் அனுபவங்களும் அவர்களுக்குப் பொருந்தாது. ஒரு காலத்தில், அவர்களது முன்னுரிமை வட்டத்தில் நாம் முதலிடத்தில் இருந்தது உண்மைதான். இப்போது, ‘ப்ரையாரிட்டி’ மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டால், வலி குறைந்துவிடும்.

நாம் கரிசனம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களை முடமாக்குகிறோம். அவர்களை, அவர்கள் வாழ்க்கையை வாழ விடுவதே இல்லை.

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது என்றால் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பது அல்ல; மாறாக உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சுமூகமான, மகிழ்ச்சியான வாழ்வுக்குத் துணை நிற்பது. அதேசமயம், அவர்கள் நம்மை நாடி வரும்போது, ‘உனக்காக நாங்கள் இருக்கிறோம்’ என்று அக்கறையுள்ள பெற்றோராக செயல்படுங்கள்.

கவே, அன்பு நெஞ்சங்களேநீங்கள் கொண்டாடும் எந்த உறவையும் பாசத்தில் கட்டிப் போடாமல், “போய் வா!” என்று அனுப்பி வையுங்கள். உண்மையான அன்பாக இருந்தால், அந்த ஆகர்ஷண சக்தி அவர்களை மீண்டும் உங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்! அப்படி அவர்கள் திரும்பி வரும்வரை, செய்ய நமக்கு என்ன வேலைகளா இல்லை? ஆயிரம் இருக்கே! துரத்துவோம் நமது மறந்துவிட்ட கனவுகளை, பொழுதுபோக்குகளைநட்புகளைசிறப்பான செயல்களை! ஞாபகமிருக்கட்டும்ஒட்டுங்கஆனா, ஒட்டாதீங்க!

 

2 COMMENTS

  1. பெற் ே றார்களின் பாசம் பி ள்னளகள் மீது மித மிஞ்சிய அளவில் இருப்பின் பிரச்சனைதான் ஏற்படும்.அதனால் ஒரு வார்த்தை தலையங்கத்தில் கூறியபடி இதர செயல்பாடுகளில் ஈடுபட்டால் பாசப்
    பிராப்ளத்திற்கு தீர்வு ஏற்படும்.
    து.சேரன்
    ஆலங்குளம்

  2. ஒரு வார்த்தையில் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ‘நச்’! பாலூட்டி வளர்த்த கிளிகள் எப்பவும் நம் மடியிலேயே அமர்ந்திருக்காது. றெக்கை முளைத்ததும் பறந்து சென்று தனக்கான கூட்டைக் கட்டி, குடும்பம் அமைத்து தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடும் என்பதை அருமையாக கூறியுள்ளார் ஆசிரியர். பாராட்டுக்கள்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும். அந்தப் பள்ளி, ஸாரி......

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...