0,00 INR

No products in the cart.

சிறுதானிய மாவும்; பலகாரங்களும்!

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

‘‘கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாட்களில் என் மனதுக்குள் ஒரு மின்னல். நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளிலும் சிறுதானியங்களிலும் பல்வேறுவிதமான மாவு வகைகளைத் தயாரிக்கலாமே… அவற்றில் பல்வேறு வகையான பலகாரங்களையும் செய்து வாடிக்கையாளர்களுக்குத் தரலாமே’ என்று தோன்றியது. உடனே செயல்படத் தொடங்கினேன். இரண்டு ஆண்டுகள் கடந்து வந்துள்ளேன். ‘பாரம்பரிய அரிசி வகைகளிலும் சிறுதானியங்களிலும் இத்தனை மாவு வகைகளா?’ என்று எல்லோரும் வியந்து போயினர்’’ என்கிறார் திருச்சி, தில்லை நகரில் வசித்துவரும் ஜெயஸ்ரீ சுரேஷ். அவருடன் ஒரு சந்திப்பு…

முதலில் என்ன வகை மாவு தயாரிச்சீங்க?
சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றில் இட்லி, தோசை, இடியாப்பம், அடை மாவு வகைகளைத் தயாரித்து அனுப்பினேன். அவற்றை ஊற வைத்து அரைத்துத் தந்தேன். முதலில் திருச்சி டவுனில் மட்டும் ஆர்டர் தந்து கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்பி வைப்பேன். கம்பு, கேழ்வரகு, வெள்ளைச் சோளம், சிவப்புச் சோளம் போன்றவற்றில் தோசை மாவு அரைத்தும் அனுப்பி வைத்துள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனக்கும் உற்சாகமாகிப் போனது.

ஜெயஸ்ரீ சுரேஷ்

என்னென்ன அளவுகளில் மாவு அரைத்துத் தருவீர்கள்?
குறைந்தபட்சம் அரை கிலோ மாவு. அதிகபட்சமாக பத்து கிலோ மாவு வரை அரைத்துத் தருகிறேன். குதிரைவாலி, தினை, வரகு, சாமை போன்ற தோசை மாவுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு… எதிர்பார்ப்பு!

அடுத்து என்ன செய்தீர்கள்?
சிறுதானியங்களில் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி பெறவே, அடுத்து பாரம்பரிய அரிசி வகைகளின் மீது எனது கவனம் சென்றது. காட்டு யானம், கருங்குறுவை, குடைவாழை, கவுனி அரிசி, பூங்கார், கிச்சிலி சம்பா, மாப்பிள்ளைச் சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளில் பல்வேறு விதமான மாவு வகைகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். ஆப்ப மாவு, அடை மாவு, பணியார மாவு என்று முப்பத்தைந்து வகையான மாவு வகைகள் என்று அதை விரிவுபடுத்தினேன். அப்போதே ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பணியாரங்கள் தயாரித்துத் தரும் வேலையிலும் ஈடுபட்டேன்.

அந்த சமயம் தீபாவளி வந்தது. விதவிதமாக லட்டு தயாரிக்கத் தொடங்கினேன். பாரம்பரிய அரிசிகளில் எட்டு வகையான லட்டுகள் தயாரித்தேன். சிறுதானியங்கள் எல்லாவற்றையும் கலந்து, ‘மல்டி மில்லட்’ லட்டு தயாரித்தேன். கவுனி அரிசி அல்வா என்னுடைய தயாரிப்பில் மிக மிக ஹைலைட். காரணம், கோதுமை அல்லது மைதா மாவுகளில் தாராளமாக அல்வா தயாரிக்கலாம். ஆனால், அரிசி மாவில் அல்வா தயாரிக்க இயலாது. எனினும், கவுனி அரிசியில் மட்டும் அல்வா தயாரிக்க ஏதுவாக, கவுனி அரிசி மாவில், ‘க்ளூடன்’ எனப்படும் பசைத் தன்மை அமைந்துள்ளது. கவுனி அரிசி அல்வா கிளறி முடிக்கவே ஒன்றரை மணி நேரம் ஆகும். வெளியூர்களுக்கும் இதனைச் செய்து அனுப்புகிறேன்.

இவற்றுக்கு ஏதேனும் தரக்கட்டுப்பாடு உள்ளதா?
ண்டு. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புக் கழகத் துறையின் ஆய்வாளர்கள், நேரில் வந்து பரிசோதனை செய்து பார்த்துவிட்டே தரக்கட்டுப்பாடு நிர்ணயமும், சான்றிதழும் தருகின்றனர். FSSAI 2021 FOOD SAFETY CERTIFICATE எனப்படும் சான்றிதழை ஓஎம்ஜி (ONLY MILLET GRAIN) எனும் எனது புராடக்ட் பொருட்களுக்குத் தந்துள்ளனர். மார்க்கெட்டில் அந்தப் பெயரில்தான் எனது தயாரிப்புகளை அனுப்பி வைத்து வருகிறேன்.

இதில் என்ன மனநிறைவு உங்களுக்குக் கிடைத்துள்ளது?
நான் செய்யும் பணியாரங்கள் எதிலும் வெள்ளைச் சர்க்கரை எனப்படும் சீனி பயன்படுத்துவதில்லை. நாட்டுச் சர்க்கரை மட்டுமே பயன்படுத்துகிறேன். எண்ணெயைத் தவிர்த்து, நெய்தான் பயன்படுத்துகிறேன். அதனால் சுவையும் அதிகம். உடலுக்கும் நல்லது. குழந்தைகள், வயோதிகர்கள் இதை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காததால், சுகர் நோயாளிகளும் பயமின்றி இதைச் சாப்பிடலாம். அதில் ஒருவித மனநிறைவு. பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் போன்றவற்றை அவ்வப்போது வரும் ஆர்டர்களுக்குத் தேவையான அளவுக்கு இயற்கை விவசாயிகளிடம் இருந்தே நேரடி கொள்முதல் செய்து கொள்கிறேன். விளைச்சல் சீசன் இல்லாத நாட்களில் பொது மார்க்கெட்டில் வாங்கிக் கொள்கிறேன்.

இப்போது இதனைத் தனிநபராக நான் மட்டுமே செய்து வருகிறேன். இதில் இன்னும் நிறையப் பெண்கள் முன்வந்து இதனையே சிறு தொழிலாகவும் செய்து, வாழ்வில் நல்ல வருவாய் ஈட்டலாம். வாருங்கள் மங்கையரே…

1 COMMENT

  1. ஜெயஸ்ரீ சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். சிறுதானிய மாவுகளில் இவ்வளவு வெரைட்டிகளா என அசந்து போனோம்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...