0,00 INR

No products in the cart.

தைப்பூச சிறப்புகள்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க…

பொதுவாக, பெளர்ணமி திருநாள் தெய்வ வழிபாட்டிற்கும், அமாவாசை தினங்கள் பிதுர் வழிபாட்டிற்கும் உரியது. பெளர்ணமியோடு சேர்ந்து வரும் சில சிறப்பு நட்சத்திரங்கள் மகிமை பெற்றவையாகும். இப்படிப் பெளர்ணமியோடு சேர்ந்து வரும் மாசி மகம், பங்குனி உத்திரம் போன்று, தை மாத பூச நட்சத்திர நாளும் முருகக் கடவுளுக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முருகக் கடவுளுக்கு உகந்த திருநாளான தைப் பூசத்தில் முருகனை அவனது நாமங்கள் கூறி வழிபட, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். காலையில் எழுந்து நீராடி பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேற்றி நைவேத்தியங்கள் படைத்து விநாயகர் அகவலோடு, முருகனுக்குரிய சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனை பூஜிக்க வேண்டும். இதனால் வல்வினைகள் அகலப் பெற்று, வாழ்வில் வளம் பெறலாம்.

இல்லங்களில் பூஜை முடித்து, அருகிலிருக்கும் ஆலயங்கள் சென்று கந்தக் கடவுளை தரிசனம் செய்வது பெரும்பேறு! ஆலயம் செல்வோர் முருகக் கடவுளுக்குப் பிரியமான இளநீர், பால், பஞ்சாமிர்தம் இவற்றால் அபிஷேகம் செய்தால் முருகனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைந்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார், தம் ஸித்தி விளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பழனியில் தைப்பூசம் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாள் தேரோட்டம். முருகன், வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் வீதிகளில் தேரில் பவனி வருகிறார். தைப்பூசத்தன்று அலகு குத்தல், சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, பால் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி எடுத்து பக்தர்கள் வருவார்கள்.

லங்கையில் தைப்பூசம் யாழ்ப்பாண ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பனவற்றடன் வயலுக்குச் சென்று, கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி, ஒருவர் தேங்காய் உடைக்க, மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத் தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு, குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

மலேசியா, பினாங்கு தண்ணீர்மலை கோயிலில் தைப்பூசத் திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். தைப்பூசத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநிலம், அரசுப் பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறது.

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செய்வர். சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல்தான் மூலவர்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

தைப்பூசத் திருநாளிலே…!

தைப்பூசம் – இந்தியாவில் மட்டுமல்லாது; வெளிநாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தைப்பூசத்தைக் கொண்டாடுவது ஆரம்பமாகி விட்டதென அநேகக் குறிப்புகளும், கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில், ‘பொருந்திய தைப்பூச மாடி உலகம் பொலிவெய்த’ என்று பாடியுள்ளார்.

முருகன் கோயில்களுக்கு காவடி மற்றும் பால்குடம் ஏந்தி பக்தர்கள் அன்றைய தினம் வருவதுண்டு. விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் இன்று கோயில்களில் நடைபெறும்.

வடலூரிலுள்ள, ‘சத்ய ஞான சபா’வில் ஜோதி தரிசனம் காண இன்று ஏராளமான மக்கள் கூடுவர்.

மலேசியாவின் பத்துமலைக் கோயில் தைப்பூசத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். வெளிநாட்டில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானது பத்துமலைக் கோயில். இது, கோலாலம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுண்ணாம்புப் பாறைகளாலான மலைக்குள் வரிசையாக அமைந்துள்ள குகைக் கோயில்கள் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. வெளிநாட்டு பக்தர்கள் இந்நாளில் லட்சக்கணக்கில் பத்துமலைக்கு வருவார்கள்.

கோலாலம்பூர், மகாமாரியம்மன் கோயிலில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு பாத யாத்திரையாக பத்துமலையை அடைய எட்டு மணி நேரமாகும். வருபவர்கள் சுங்கை பத்து ஆற்றில் நீராடி, மலைக் கோயிலுக்கு 272 படிகள் ஏறிச் செல்வார்கள். உலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140 அடி) ஆகும். இன்று அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதுண்டு.

தைப்பூச விரதம் மற்றும் வழிபாடு, தொட்டதையெல்லாம் துலங்க வைக்குமென்பது நம்பிக்கை. சீனர்களுக்கு முருகக் கடவுள் மீது மிகுந்த பக்தி உண்டு.

விரதம் இருக்கும் முறை :
திகாலையில் எழுந்து நீராடி, திருநீறு மற்றும் ருத்திராட்ச மாலையணிந்து சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வணங்கி வழிபடல் வேண்டும். நாள் முழுவதும் உணவருந்தாமல் விரதமிருப்பது அவசியம். இயலாதவர்கள் பால் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்தால், வேண்டுவதை நிறைவேற்றுவது தைப்பூச விரதம்.

முருக பக்தர்கள் சஷ்டி கவசம், திருப்புகழ் பாடல்களைப் பாராயணம் செய்து விரதமிருந்து பாத யாத்திரையாக கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள்.

 • முருகப்பெருமான், தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக பழனியில் இன்று கொண்டாடப்படுகிறது.
 • தேவ குரு பிரகஸ்பதியின் நட்சத்திரத் திருநாள் இன்று.
 • சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடி, தரிசனமளித்த நன்னாள் இதுவே.
 • சிவ பக்தனாகிய இரண்யவர்ம அரசன், நடராஜப் பெருமானை நேரில் தரிசித்து, ஆசி பெற்ற நாள் இது.
 • வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஜோதியில் ஐக்கியமான பொன்னாள் இன்று.

   காவடிகளின் வகைகள் :
 • பால் காவடி – பால் நிரம்பிய இரு சொம்புகளை நன்கு கட்டி, காவடியின் இருபுறத்திலும் தொங்கவிட்டு தோள் மீது வைத்து வருவது.
 • மச்சக் காவடி – மீனுள்ள குளத்து நீரைக் குடத்தில் சுமந்து வருவது.
 • பறவைக் காவடி – முதுகில் அலகு குத்தியவர், பறவை போன்று கைகளை விரித்திருக்க, தொங்கியவாறு ஒரு வாகனத்தில் வருவது.
 • தீர்த்தக் காவடி – தாமிரபரணி, காவிரி போன்ற நீர்நிலைகளின் தண்ணீரைக் குடத்தில் நிரப்பி சுமந்து வருவது.
 • தேன் காவடி – தேன் நிரம்பிய சொம்புகளை இருபுறமும் காவடியில் கட்டித் தோளில் வைத்து வருவது.
 • சர்க்கரைக் காவடி – நிறைய சர்க்கரையை மூட்டையாகக் கட்டி காவடியில் சுமந்து வருவது.
 • மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி.
 • அலகு குத்து – நாக்கு, கன்னம், கைகள், உடலின் பிற பகுதிகள் போன்ற இடங்களில் சிறிய மற்றும் பெரிய வேல் ஊசியைக் குத்தி வருவது; முதுகில் கொக்கிகளை மாட்டி சிறு ரதம் போன்றவற்றை இழுத்து வருவது.

முருகப்பெருமான் மூல மந்திரம் :
கந்தகுரு கவசத்தில் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகளால் பாடப்பட்ட மந்திரத்தை மனதார ஜபிக்க, நல்லதே நடக்குமெனக் கூறப்பட்டு வருகிறது.
அம்மந்திரம்,
‘ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் சௌம் நமஹ:’
‘ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீ ரடிய ரெல்லாம்.’
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
– ஆர்.மீனலதா, மும்பை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...