0,00 INR

No products in the cart.

ஏகாதசி!

சிறுகதைவசுராஜ்
ஓவியம் : லலிதா

ரவு சமையலுக்கான அடுப்படி வேலைகளை எல்லாம் முடித்த பத்மா மாமி, அடுப்பு, மேடை என ஒன்றுவிடாமல் துடைக்க ஆரம்பித்தாள். ‘‘வீட்டிலிருந்து வேலை பார்க்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள்… எந்த வேலையும் சரியான நேரத்துக்கு நடக்கவே மாட்டேங்குது” என முணுமுணுத்தபடி எதேச்சையாக காலண்டரை பார்த்தாள். ‘அடடா… நாளைக்கு ஏகாதசியாச்சே! பழம் வாங்கக்கூட மறந்து போச்சு. இந்த மனுஷனுக்கு தெரிஞ்சா, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சுடுவாரே’ என்று நினைத்தபடி தன்னையே நொந்து கொண்டாள்.

காதசி தினத்தில் மாமியும் அவளது கணவர் வெங்கடேசனும் பழம், பால், காபி மட்டும்தான் சாப்பிடுவார்கள். வெங்கடேசனுக்கு எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்தாகணும். ஏதாவது காரணம் சொன்னா ஏத்துக்க மாட்டார். “பெருமாளே, நாளைக்குக் காலையில பழம் விற்கும் வேலாயி இங்கே வரணும்” என்று வேண்டிக் கொண்டாள் மாமி. ஆனாலும் மனசுக்குள், ‘பெருமாள் எந்த வேலையைத்தான் பார்ப்பார்’ என்று அலுத்துக் கொண்டாள்.

பத்மா மாமியின் வேண்டுதலை, வேலாயியின் காதில் பெருமாள் சொல்லி விட்டாரோ என்னவோ, மறுநாள் காலை ஏழு மணிக்கே கூவிக்கொண்டு வாசலுக்கு வந்து விட்டாள். வேகமாக வாசலுக்கு வந்த பத்மா மாமி, அவளை அழைத்தாள். “வந்துட்டேம்மா”என்று சொல்லியபடி வாசலுக்கு வந்து கூடையை இறக்கினாள் வேலாயி. வெயிலில் அலைந்து கறுத்துப்போன முகம், நெற்றியில் பெரிய பொட்டு, ஒடிசலான தேகம். பார்க்கவே ரொம்ப பரிதாபமாக இருந்தது.

ஓவியம் : லலிதா

“இன்னிக்கு ஏகாதசி. நானும் எங்க வீட்டுக்காரரும் பழமும், பாலும்தான் சாப்பிடுவோம். நேத்தே வாங்க மறந்துட்டேன்” என்றாள் மாமி.

“இன்னிக்கு இந்தத் தெருவுக்கு நான் வரது வாடிக்கைதானே?” என்று சொல்லிச் சிரித்தாள் வேலாயி.

பழக்கூடையில் இருந்து நல்ல பழங்களைத் தேடித் தேடி எடுத்துக்கொண்டிருந்த மாமியிடம், “அது இன்னாம்மா ஏவாதசி? அமாவாசி மாதிரி அதுவும் மாசத்துக்கு ஒரு தபா வருமா?” என்று கேட்டாள் வேலாயி.

அதைக் கேட்ட பத்மா மாமி சிரித்துக்கொண்டே, “இல்லை வேலாயி… ஏகாதசி மாசத்துக்கு ரெண்டு தடவை வரும். இந்த நாள்ல விரதம் இருந்தா மனசுக்கும் உடம்புக்கும் நல்லது. மாசத்துல ரெண்டு நாள் வயிற்றைக் கொஞ்சம் காயப் போட்டா மாதிரியும் ஆச்சு, போற இடத்துக்குப் புண்ணியம் சேர்த்தா மாதிரியும் ஆச்சு” என்றாள்.

அதைக் கேட்ட வேலாயி, “அப்படின்னா எனக்கு ஏகப்பட்ட புண்ணியந்தான்னு சொல்லுங்க… பொங்குன சோறு, பாதி நாள் புள்ளைகளுக்கும், வூட்டுக்காரருக்குமே சரியாப் போயிடுது. மிஞ்சிப்போன நசுங்கிப்போன பழங்கதான் எனக்கு சாப்பாடே. அதுனால மாசத்துல பாதி நாள் எனக்கு ஏவாதசிதான் மாமி” என்று சொல்லிச் சிரித்தாள்.

அதைக்கேட்ட பத்மா மாமிக்கு, ‘சுரீ’ரென்று உரைத்தது. ‘ஏகாதசி விரதம் இருந்தால் புண்ணியம்னு சொல்றாங்க… பாதி நாள் வயிற்றுக்கே சோறு இல்லாத இவங்களுக்கு, எல்லா நாளும் ஏகாதசிதானோ!’ என நினைத்து, அவளைப் பார்த்து கும்பிட்டாள். மாமியின் கண்களுக்கு வேலாயி, அந்த அம்பாளாகவே காட்சி தந்தாள்.

ழங்களை எடுத்துக்கொண்ட மாமி, “உனக்கு வியாபாரம் சரியா ஆகலேன்னா இங்க வா, நானே எல்லாப் பழத்தையும் வாங்கிக்கறேன். அதுயில்லாம, உனக்குப் பணம் ஏதாவது அவசரமா தேவைப்பட்டா சொல்லு, தரேன்” என்றாள்.

அதைக்கேட்ட வேலாயி உடனே, ‘‘மாமி… கை, கால் நல்லா இருக்கும்போது உயைச்சி (உழைத்து)தான் சாப்பிடணும். மத்தவங்ககிட்ட கை ஏந்தக் கூடாது. என்னையெல்லாம் பார்த்து கும்பிடாதம்மா! மவராசி உன்னை மாதிரி நாலு ஜனம் என்னோட யாபாரத்துக்கு ஒதவினாப் போதும்… சந்தோஷம்தான்” என்றாள்.

வேலாயி என்ற அந்த தேவதை, பழக்கூடையோடு போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள் பத்மா மாமி.

1 COMMENT

  1. பழ வியாபாரி வேலாயி கஷ்டத்தை
    அறிந்த அடுத்த கணமே பத்மா மாமி மனமருகி கைகூப்பி அவளுக்கு வணக்கம் செய்தாள் ..இத்தகைய சூழலில் ” ஏகா தசி”அருமையான க தை எனலாம்.
    து. சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...