0,00 INR

No products in the cart.

மார்கழி மகிமை!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

 • திருப்பதி வேங்கடாசலபதிக்கு திருவாதிரை நட்சத்திர நாளன்று வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
 • சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மார்கழி மாத திருவாதிரையன்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும். அன்று கங்கை இந்தத் தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம்.
 • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படுகிறது.
 • ஆண்டாள் திருப்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில்தான் பாடினார்.
 • மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி)யன்றுதான் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார்.
 • மார்கழி மாதம் முதல் புதன்கிழமையன்றுதான் குசேலர், கிருஷ்ணனை அவல் தந்து தரிசனம் செய்தார்.
 • ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த நடராஜர் ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட ‘மரகத நடராஜர்.’ இவர், வருடம் முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே இருப்பார். மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தின்போது ஒருநாள் மட்டும் மரகத பச்சை வண்ண நடராஜர் தரிசனம் கிடைக்கும். இக்கோயிலின் தல மரமான இலந்தை மரத்தின் அருகில் உள்ள லிங்கத்தில் ஒரு வரிசைக்கு 50 லிங்கம் என்று 20 வரிசைகளில் 1000 லிங்கங்கள் உள்ளதைப் பார்க்கலாம்.
 • சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரையன்று சிறப்பான விழா நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜருக்கு சித் சபை, கனகசபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து சபைகள் உள்ளன.
  – பி.மஹதி, ஸ்ரீரங்கம்

கல்யாணக் கிளி

ருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ஆண்டாள் சீர்வரிசை பெறுவாள். அதில் வெல்லம் சேர்ந்த கொண்டைக்கடலை, மணி பருப்பு, திரட்டுப்பால், பழ வகைகள் வைப்பார்கள். இதில் முக்கியமான சிறப்பு, ஆண்டாளின் இடது கையில் இருக்கும் கிளிதான். தினமும் ஒவ்வொரு புதுக்கிளி செய்து வைக்கிறார்கள். இதை வேறு எந்தத் திருத்தலங்களிலும் பார்க்க முடியாது. இந்தக் கிளியை, ‘கல்யாணக் கிளி’ என்று போற்றுகிறார்கள். இது ஆண்டாளுக்கு தூது சென்ற கிளி. சுக பிரும்ம ரிஷி, ரங்கநாதருக்கு கிளி ரூபத்தில் தூது சென்றதாகச் சொல்கிறார்கள்.

சுக பிரும்ம ரிஷி என்னும் கிளி, ஆண்டாளின் கையில் இருக்க அருள்புரிய வேண்டும் என்று வரம் கேட்கிறது. அதுதான் கல்யாணக் கிளி. ஆண்டாளின் கல்யாணம் தூது சென்று முடித்ததால் அதைக் கல்யாணக்கிளி என்கிறார்கள். இந்தக் கிளி பல இலைகளாலும் மலர்களாலும் உள்ள சில மெல்லிய மூங்கில் குச்சிகள் வைத்தும் வடிவமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தினமும் காலையில் பூஜையின்போது ஆண்டாளுக்கு இந்தக் கிளி சாத்தப்படுகிறது. (கையில்) மறுநாள் விஸ்வ ரூப தரிசனத்தின்போது எடுக்கிறார்கள்.
இப்போதெல்லாம் பக்தர்கள் கிளியை வாங்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இது கிடைப்பது கடினம்.

ஆகையினால், பூஜை சாமான்கள் விற்பவர்கள் பூஜை சாமானுடன் கிளியை அர்ச்சகரிடம் கொடுத்தும் பாதங்களில் வைத்து பூஜை செய்தும் கொடுப்பார்கள். இந்தக் கிளியை வீட்டில் வைத்து பூஜை செய்தால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு கல்யாணம் நடக்கும். திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

தயிர் கடையும் காரணம் (திருப்பாவை)

மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்டு, பகவானுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டியவர் ஆண்டாள் நாச்சியார். அவர் திருப்பாவையில், ‘வையத்து வாழ்வீர்கள்’ என்று தொடங்கும் இரண்டாம் பாசுரத்தில், ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என்று பாடுகிறார். அடுத்த சில பாசுரங்களிலேயே, ‘ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ’ என்கிறார்.

விரதம் இருப்போர் தயிர் கடைவது ஏன்? இது முரண்பாடு அல்லவா? இப்படி ஒரு கேள்வி நம் மனதில் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு நான்கு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சர்யார்கள்.

முதற் காரணம் : விரதம் இல்லாத குழந்தைகள், மூத்தோர் உள்ளிட்ட பிறருக்கு நெய், பால், தயிர், வெண்ணெய் வேண்டாமா? அதனால் தயிர் கடைகிறார்கள்.

இரண்டாம் காரணம் : கண்ணன் வந்து தேடும்போது வெண்ணெய் போன்றவை இல்லையென்றால் பகவத் அபசாரமும் அவனது தோழர்களுக்கு அவை கிடைக்காவிடில் பாகவத அபசாரமும் ஏற்பட்டு விடுமே. தெய்வக் குற்றமும் அடியார் குற்றமும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று கடைகிறார்கள்.

மூன்றாவது காரணம் : எவரும் எக்காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் தன் கடமையிலிருந்து தவறக் கூடாதாம். யசோதை தினமும் தயிர் கடைவதில் தவறவே மாட்டாளாம்.

நான்காவது காரணம் : ஓர் உட்பொருள் பகவத் சிந்தனை என்னும் மத்தினால் வேதம், மந்திரம், பாசுரம் (என்னும் தயிர்) என்னும் சாரங்களை கடையக் கடைய, நல்ல ஞானம், மோட்சம் பற்றிய ஞானம், நற்கதி ஆகியவை கிடைக்குமாம். வெறும் பாசுரமாக பொருளழியாமல் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு, இப்படி ஆழ்ந்து பார்க்கும்போது திருப்பாவை தித்திக்கும் அமுதமாகிறது.
– எஸ்.மாரிமுத்து, சென்னை

மார்கழி மகோத்ஸவம்:

ம் நாடு செல்வச் செழிப்போடு விளங்கியபோது, ரிஷி பத்தினிகள் மூலிகைகள், பல்வகை வண்ணப்பூக்கள், மருதாணிப் பொடி போன்ற உடலுக்கு நலம் தரும் பொருட்களால், வாசலில் கோலம் போட்டார்களாம். பிறகு, பிராணிகள், எறும்பு போன்றவை உண்பதற்காக பச்சரிசி மாவால் கோலம் போட்டார்கள். நமது நாட்டு செல்வச் செழிப்பை காட்டும் ஒரு நாட்டுப்புறப் பாடல் இங்கே :
‘தங்கப் பொடி நுணுக்கித் தரையில கோலமிட்டா
தரையாலே போறவங்க தங்கப் பொடி யாருதுன்னா,
தங்கப் பொடி எங்களது தடமோ சர்க்காருது
வெள்ளின் பொடி நுணுக்கி வீதியிலே கோலமிட்டா
வீதியில போறவங்க வெள்ளிப் பொடி யாரதுன்னா
வெள்ளிப் பொடி எங்களது வீதியோ சர்க்காருது’
தங்கப் பொடியும், வெள்ளிப் பொடியும் கோலப் பொடியாக இருந்ததென்றால் நாட்டின் வளம் எப்படி இருந்திருக்கும்!
– எஸ்.ராஜம், திருச்சி

எந்தெந்த நாட்களில் என்னென்ன பிரசாதங்கள் படைக்கலாம்?

 • ஞாயிறு – பாயசம்
 • திங்கள் – வெண்பொங்கல்
 • செவ்வாய் – சுத்த அன்னம்
 • புதன் – சர்க்கரைப் பொங்கல்
 • வியாழன் – தயிர்சாதம்
 • வெள்ளி – சுத்த அன்னம்
 • சனி – உளுந்து குன்னம்

நவக்கிரகங்களும், பிரசாதங்களும்!

 • சூரியன் – சூடான சர்க்கரைப் பொங்கல்
 • சந்திரன் – குளிர்ந்த பால் பாயசம்
 • செவ்வாய் – பொங்கல் நிவேதனம்
 • புதன் – புளியோதரை
 • குரு – தயிர் சாதம்
 • சுக்கிரன் – நெய் சாதம்
 • சனி – எள் சாதம்
 • ராகு – உளுந்து சாதம்
 • கேது – சித்ரான்னங்கள்
  – ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

வித்தியாசமான நைவேத்யம்!

திருச்சியில் உள்ள பூலோகநாத சுவாமி கோயிலில், பூமிக்குக் கீழே விளையும் உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வேர்க்கடலை போன்ற பொருட்களால் ஆன சமையல்தான் சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இரவு பூஜைக்குப் பிறகு சுக்கு கஷாயம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
– ஆர்.பத்மப்ரியா, திருச்சி

விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் பூவராக சுவாமி கோயில் உள்ளது. இங்கு கோரைக்கிழங்கு, மா, சர்க்கரை, பசு நெய், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்ப்பொடி கலந்த ‘முஸ்தாபி சூரணம்’ என்ற பிரசாதம் வழங்கப்படுகிறது. இது பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

நேரடி தரிசனம்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகிலுள்ள ஆலயத்தில் சிவபெருமானுக்குரிய ஆவுடையில் நிற்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கலாம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உத்ஸவமூர்த்தி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சன்னிதியில் சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.
– எஸ்.சித்ரா, சென்னை

கடவுள் வரம்

பிரார்த்தனையினால் வாக்கும் மனமும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஒரு பொருளை பிரார்த்தித்து கேட்டால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
திசை அறியும் கருவியின் நுனி எப்போதும் வடக்கு திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தை விட்டு விலகிப்போய் ஆபத்திற்கு உள்ளாகாது. அதுபோல், வாழ்க்கையாகிய கப்பலின் திசை கருவியாகிய மனிதனின் மனம் பரப்பிரம்மத்தையே நோக்கி எப்போதும் இருந்தால், அது ஒவ்வொரு ஆபத்தையும் தாண்டிப் போய் நன்மையையே பயக்கும். உலகப் பொருட்களை நாம் பகவானிடம் யாசிக்காமல், அவனது பாதக் கமலங்களில் சரணடையும் மனப்பான்மையை தந்தருள்வாயாக என்றும் மாயையின் வலையில் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
– சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்

1 COMMENT

 1. மார்கழி மகி மை மனதை குளிர வைக்கும்
  அற்புதமான ஆன்மிக கருத்துப்பெட்டகம். படிக்க படிக்க பக்தியின் சுவையினை பருகலாம். வாழ்த்துகள்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...