0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

உங்களுக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீத தற்போதைய பாடகி, பாடகர் யார்? (மாட்டினீங்களா?!)
-சீனு சந்திரா, சென்னை

நான் எங்கே மாட்டினேன்? என்னைக் கவர்ந்த இரண்டு இளம் திறமைசாலிகளைப் பற்றி நாலு வார்த்தை நல்லதாய் எழுத ஒரு சான்ஸ் வருமான்னு தேடிக்கிட்டு இருந்தேன்… தொக்கா வந்து மாட்டினது நீங்கதான் சீனும்மா! “மயில் போல பொண்ணு ஒண்ணு, கிளி போல பேச்சு ஒண்ணு, குயில் போல பாட்டு ஒண்ணு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியலை”ன்னு ‘பாரதி’ படத்துல மு. மேத்தா எழுதியிருப்பாரு!

அது அச்சு அசல் இந்த சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பற்றிதான் போலும்! ‘மார்கழி வீதி பஜன்’ல பார்த்தேன்… இந்தக் காலத்துல இப்படியொரு பொண்ணான்னு வியந்து போனேன்…

அழகு + கலை + திறமை + பணிவு என செமையான காம்போ சிவஸ்ரீ. பாவமும், பக்தியும் கலந்த அவரது இசை ஒரு பொலைட் டிலைட்! கர்நாடக இசை மட்டுமில்லாமல், பரதம், ஓவியம், மாடலிங், பயோ இன்ஜினியரிங்னு அசத்தி வருகிறார்.

ளம் பாடகர்களில் ராகுல் வெள்ளால்! கலைமகளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிசய சிறுவன். பொடிப்பயலா இருந்தபோதே பொளந்து கட்டுவான்; இப்ப கேட்கணுமா? வாக் சுத்தி, லயசுத்தி, சுருதி சுத்தி உள்ள தெய்விகக் குரல்! “பிபரே ராம ரஸம்” கேட்டுப் பாருங்க… இதயத்துடன் நேரடி இணைப்பு தரும் அற்புத அனுபவம் கிடைக்கும்!!

பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவது போல், பெண்கள் ஆண்கள் பெயரில் எழுதுவதில்லையே?!
-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

துக்கு எழுதணும்? ஆண் எழுத்தாளர்கள், ஒரு கவர்ச்சிக்காகவும், ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் பெண் பெயரில் எழுதறாங்கன்னா, நாம்ப ஏன் அதைச் செய்யணும்? தேவையே இல்ல.

இப்போதுதான் யாருடைய துணையோ, நிர்பந்தமோ இல்லாமல் பெண்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவ உலகத்துக்குள் நுழைந்து எழுதத் தொடங்கியுள்ளனர். அதற்கான இடத்தையும் ஒவ்வொரு பெண் எழுத்தாளர்கள் போராடியே பெற்றுள்ளனர். அப்ப முகமூடி எதுக்கு மேடம்?

எனவே… வாழ்க்கையைச் சார்ந்த நல்ல விஷயங்களை யார் எந்தப் பெயரில் எழுதினால் என்ன? ரசிக்கத்தான் நியூட்ரலா நாம இருக்கோமே!

ஜே.கே. ரெளலிங்

(டெய்ல் பீஸ்:– ஹாரிபாட்டர்
கதைகளை எழுதிய ஜே.கே. ரெளலிங்,
முதலில் ‘தி குக்கூஸ் காலிங்’ என்ற
மர்மக் கதையை ‘ராபர்ட் கால்ப்ரைத்’
என்ற ஆண் பெயரில்தான்
எழுதினார் தெரியுமோ…? புகழ்
பெற்ற ஆங்கில நாவலாசிரியர்
‘ஜார்ஜ் இலியட்’ ஆண் அல்ல!
‘மேரி ஆன் கிராஸ்’ என்ற பெண்!!)


யாரைப் பார்த்தால் பரிதாபமா இருக்கிறது அனுஷா?

-சரஸ்வதி வெங்கட், சென்னை

தாங்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டு, தங்கள் பிள்ளைகளை அந்த அளவுக்கு அல்ல… எந்த அளவுக்குமே கொண்டு வர முடியாமல் தவிக்கும் சக்சஸ் ‘Daddy’களைப் பார்த்தால்…

கனுக்குப் பெரிய லெவல் என்ட்ரி தரணும் என்பதற்காக கோடிக்கணக்கில் பணம் கொட்டி படம் எடுக்கிறார்… நினைச்ச மாதிரி வரவில்லை, அப்படியே குப்பையில் போட்டுவிட்டு மறுபடி படம் எடுக்கிறார். படம் சங்கு!

அதோடு விட்டாரா? மறுபடி மகனுக்காக, மகனுடன் சேர்ந்து ‘மகன்’ எனும் தலைப்பை, ‘மகான்’ என மாற்றி படம் தயாரிக்கிறார். அந்தப் படமும் “என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க?”ன்னு அலறும் அளவுக்கு…
பரிதாப அப்பா 1 : – விக்ரம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிக் கொண்ட மகனை, எப்படியோ
மீட்டு வந்து, “ஐ.பி.எல் ஏலத்துல உட்காருடா!”ன்னு பொறுப்பா அனுப்பி வைச்சா, அந்தப் பிள்ளை பாட்டுக்கு செல்ஃபோனில் எதையோ நோண்டி சிரிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கு!
பரிதாப அப்பா 2:- ஷாருக்கான்!

டேய், மகனே… ஆம்பளப் பசங்களைக் காதலிக்கிற வேலை எல்லாம் மானக்கேடுடா!”ன்னு ஒரு கடுதாசி போட்டா, அதையும் இல்ல பப்ளிக்கா ஆக்கிட்டான் அந்தத் தவப்புதல்வன்!
பரிதாப அப்பா 3: இன்டியா சிமென்ட்ஸ் ஸ்ரீநிவாசன்!

 

2 COMMENTS

  1. யாரைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது.? என்றகேள்விக்கு அனுஷாவின் பதில் அசத்தலாகவும, நிதர்சன உண்மையையும் வெளிப்படுத்தியது.

  2. யாரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்ற கேள்விக்கு ஆசிரியையின் பதில் நச்சென்று இருந்தது . வெற்றியாளர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்த்தாலே போதும் தானே வாழ்க்கையில் உயர்ந்து விடுவார்கள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘டான்’ பார்த்தீங்களா அனு மேம்? -ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் சமீபகாலமா, எந்தப் படத்து வசனத்துக்கும் நான் இமோஷனல் ஆனதில்ல. எந்தப் படத்துக் காமெடியையும் கைதட்டி ரசிச்சதில்ல. இரண்டையும் ‘டான்’ படத்துல செஞ்சுட்டேன்! சூரியை அப்பாவாக ‘செட்-அப்’...

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது? -வத்சலா சதாசிவன், சென்னை ‘அதிசயப்...