0,00 INR

No products in the cart.

படிப்பா? புனிதமா? -வெடிக்கும் பிரச்சனை! ஆடையிலும் அரசியல்!

– அனுராதா சேகர்

‘ஹிஜாப்’ என்பது என்ன?
து ‘பர்தா’ அல்ல; தலையை மூடும் ஸ்கார்ஃப்! மதப் பண்பாட்டில் ஈடுபாடு மிக்க இஸ்லாமிய குடும்பங்களில், ஒரு பெண் பருவமடைந்ததும் இந்த ‘ஹிஜாப்’ அணிவிக்கப்படுகிறது. அது தலையை மட்டும் மூடாமல், தோள், மார்பு, இடை வரை மூடக்கூடிய மெல்லியப் போர்வை.

நம்முடைய ‘தாவணி’ போல ஒரு மேலாக்கு! பூப்படையும் சிறுமி, வளர்ந்து குமரி ஆகும்போது, அவளது அங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து, கண்ணியம் காக்கும் பாதுகாப்பான ஆடைதான்.

ஆனால் அதை அரசியலாக்கி, ஆதாயம் தேடுவது யார்? ஏன்?

  • டுப்பி மாவட்டம் குந்தாப்புரா, அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த பத்தாம் தேதி சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரவே, கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. காரணம் அன்று ‘ப்ரீ-போர்ட்’ பரீட்சைகள் ஆரம்பம்.

வயர்லெஸ் இயர்பீஸ், ப்ளுடூத்துடன் கூடிய மினியேச்சர் கேமரா சகிதம் ஐ.ஏ.எஸ். ஆபீசர் ஒருவர் பரீட்சையில் காப்பி அடித்து, சென்னையில் மாட்டிக் கொண்டது நினைவிருக்கக்கூடும். அதுபோன்று காப்பி அடிப்பதைத் தவிர்க்கவே, ஹிஜாப்பைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுத வருமாறு சொல்லியிருக்கிறார் முதல்வர். இதில் மத துவேஷம் எதுவுமில்லை என்கிறது நிர்வாகத் தரப்பு.

இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ – மாணவியர் காவித்துண்டு, தலைப்பாகை அணிந்து எதிர்வினைப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வன்முறை, போலிஸ் பாதுகாப்பு, சர்ச்சை என அதகளமானதோடு, “ஹிஜாப் எங்கள் அடிப்படை உரிமை” என மாணவிகள் வழக்குப் போட்டுள்ளனர்.

“மழலையர் பள்ளியிலிருந்து ஹிஜாப் அணிந்து வருகிறோம். கல்விக்கு இனணயாக ஹிஜாப்பை மதிக்கிறோம். ‘கல்வியா, ஹிஜாபா’ என்றால் ஹிஜாப்தான் முக்கியம்; புனிதத்தைக் காக்க, கல்வியைத் துறக்கத் தயாராக இருக்கிறோம்!” என்று ஆவேச முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக, காஷ்மீரத்தைச் சேர்ந்த அருசா பர்வேஸ் என்ற இளம்பெண் (12ம் வகுப்பில் 499/500 மதிப்பெண் பெற்று காஷ்மீர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்.) ஹிஜாப் அணியாமல் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
“ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. நான் ஓர் இஸ்லாமியப் பெண், இதயத்தால்; ஹிஜாப்பால் அல்ல!” என்று பதிவிட, அவரது தலையை வெட்ட வேண்டும் என்று ஹிஜாப் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

  • என் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரிகளுக்கு….
    வாக்காளர் அட்டை, மருத்துவக் காப்பீடு, விசா போன்றவற்றுக்கு புகைப்படம் எடுக்கும்போது ‘ஹிஜாப்’ இல்லாமல் புகைப்படம் எடுக்க சம்மதிக்கிறோம். சரிதானே?
  • விளையாட்டு, நீதிமன்றம், மருத்துவமனை, காவல்துறை, இராணுவம் என எங்கெல்லாம் சீருடை கட்டாயமோ, அங்கே ‘ஹிஜாப்’புக்கு அனுமதியில்லை. அதுவும் ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்!

இதுபோல, வகுப்பறையிலும் வகுக்கப்பட்ட உடை விதிகள் என்னவோ அதை மாணவ – மாணவியர் அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதுதானே நியாயம்? ஜாதி, மத, இன, பாகுபாடு ஏதுமில்லாமல், ‘கல்வி’ மற்றும் அது சார்ந்த நற்பண்புகளை, வாழ்வியல் கோட்பாடுகளை ஆழமாக, அறிவார்த்தமாகக் கற்க வேண்டிய பருவம் அது அல்லவா?

‘ஹிஜாப் கண்டிப்பாக அணிவோம்’ என்றால், அதற்கான பிரத்யேகப் பள்ளிகளை நாடலாமே?

  • அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், ஹிந்து ஜாக்ரன வேதிகே போன்ற அமைப்புகள் ஒருபுறம், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஒருபுறம் என தத்தம் அரசியல் ஆதாயத்துக்காக, காய்களை நகர்த்துகிறார்கள் எனத் தெரிந்தும் ‘பலிகடா’ ஆக நீங்கள் துணிவது ஏன்?
  • ‘ஹிஜாப்’ நிச்சயம் பாதுகாப்பான ஆடைதான்! அதை நீங்கள் வெளியிடங்களில் அணிந்து புனிதம் காப்பதை நாங்களும் நிச்சயம் வரவேற்கிறோம்.
  • ஏற்கெனவே சரியான கல்வி தரப்படாமலும், முன்னேற வகையில்லாமல், பல தலைமுறைகளாகப் பின் தங்கியிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். ‘ஹிஜாப்’ வருங்காலச் சந்ததியினர் வளமாக வாழ முட்டுக்கட்டையாகி விடக் கூடாது. நம்மை தவறாக வழி நடத்தவும் அனுமதிக்கக்கூடாது.
  • மீண்டும் சொல்கிறோம். உங்கள் ஒருங்கிணைந்த நலனில் அக்கறை கொண்டவர்கள் யாரும் “கல்லூரியை, கல்வியைப் புறக்கணியுங்க… படிக்க வேண்டாம்” என்று சொல்ல மாட்டார்கள். அப்படி யாராவது சொன்னால் முதலில் புறக்கணிக்க வேண்டியது அந்த நபரைத்தான்!

*******************

  • இந்த விவகாரத்தில் பல நடுநிலையாளர்களின் மனதில் எழும் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
  • “‘தாலி’ என்பது அடிமைச் சின்னம்” என்று முழங்கும் இந்து எதிர்ப்பு அரசியல் கண் (னி) மணிகள் இப்போது வாயே திறக்கவில்லை – ஏம்மா… ஏன்?

‘தாலி’ அடிமைச் சின்னம்; ‘ஹிஜாப்’ மட்டும் மத உரிமை, புனித அடையாளமா?

  • எப்படியாவது சூட்டைக் கிளப்பி, ‘பிரேக்கிங் நியூஸ்’ தேடும் ஊடகங்களே, நீங்கள் விளையாடுவது அப்பாவி இஸ்லாமியப் பெண்களின் எதிர்காலத்தோடு என்பதைத் தெரிந்தே செய்றீங்களே! எப்போ நிறுத்துவீங்க?
  • “மீடியா சப்போர்ட் இருக்கு” என தவறாக நினனத்துக் கொண்டு வாழ்க்கையைப் பின்னோக்கி நகர்த்தும் இஸ்லாமிய சகோதரிகள் எப்போது மீள்வார்கள்?
  • சிறுபான்மையினர் என்றால் ஒரு சட்டம், பெரும்பான்மையினர் என்றால் ஒரு சட்டம்… என பாரபட்சமான நிலைப்பாட்டைக் கையில் எடுத்து நம் ஒட்டுமொத்த நல்லிணக்கத்துக்கு வேட்டு வைத்து சுயலாபம் தேடும் அரசுகள் எப்போது திருந்தும்?

மருதாணி, மூக்குத்தி, பூ, பொட்டு, ருத்ராட்சம், விபூதி, தாயத்து போன்றவற்றை அணிய பல கிறித்துவக் கல்விக் கூடங்களில் தடை இருப்பதோடு அபராதமும் விதிக்கிறார்கள்…
அதை இந்துக்கள் இத்தனைக் காலம் பொறுத்துக் கொள்ளவில்லையா? நீங்கள் மட்டும் முரண்டு பிடிப்பது ஏன்?

*******************

  • ஹிஜாப் அணியுங்கள்… அல்லது அணியாதிருங்கள்…
    அது உங்கள் விருப்பம்! உரிமை! இஸ்லாமிய சகோதரிகளே… ஆனால், படிப்பைக் கைவிடாதீர்கள். அடுத்தக் கட்டமாக மத, வேஷதாரிகளை, சந்தர்ப்பவாதிகளை, முட்டுக்கட்டை மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்… அவர்களைத் தவிருங்கள்!

இல்லையேல்… நம்மால் வெளிச்சப் பகுதிக்குள் நுழையவே முடியாது… கூடவே… கல்வியும் அது தரும் தன்னம்பிக்கையும் கானல் நீராகவே ஆகிவிடும்! அடுத்த தலைமுறைக்கும் கடைசி வரை!

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...