0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

பாட்டிலில் தண்ணீர் விற்பது போல, சீனாவில் சுத்தமான காற்றையும் பாட்டிலில் விற்கிறார்களாமே?
எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
மாங்க மிஸஸ் ராஜம்அந்தக் காலமும் வந்தாச்சு! தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடற நச்சுப்புகை கம் வாயுவால் தூசோ தூசு; மாசோ மாசு! அப்புறம், விற்காமல் என்ன செய்யும்? சுற்றுச்சூழல் மாசு விஷயத்தில் சீனா ஃப்ஸ்ட் ப்ளேஸ். அப்புறம் மாண்புமிகு பாரதம்தான்!

காத்து கெட்டுப்போச்சே!’ன்னு எல்லோரும் புலம்பிக்கிட்டு இருந்தப்ப, ‘மோசஸ் லேம்’னு ஓர் ஆளு, ச்சும்மா ஜோக் கிஃப்டா இருக்கட்டுமேன்னு ஆரம்பிச்சதுதான்,பாட்டில்ல காத்து; மூக்குல மாட்டு’ பிசினஸ்!

சுத்தமான காத்துகனடா நாட்டு மலை மேல பிடிச்ச காத்துஒரு பாட்டிலோட விலை 1800 ரூபாய் மட்டுமே. வாங்கம்மா வாங்க! வாங்க அய்யா வாங்க! ஆளுக்கு ஒண்ணு வாங்கி மாட்டுங்க. ஃப்ரீயா மூச்சு விடுங்க!’ன்னு ஆரம்பிச்சது. அது ஹிட் அடிச்சு, ‘வைடாலிடி’னு பெரிய கம்பெனியாவே மாறிடுச்சு! இந்தத் தொழிலோட பேரு ஏர்ஃபார்மிங்காம்!!

நாம்ப எப்படியோ தப்பிச்சுக்குவோம்னு வையுங்க! நம்பப் பேரப் பசங்க? வாட்டர் பாட்டில், ஏர் பாட்டில்னு அலைவாங்களோ? உஷ்இப்பவே மூச்சு அடைக்குதே! என்னக் கொடுமை சரவணா!

சில நண்பர்கள் கெட்டவர்கள்னு தெரிஞ்சும் அவர்களது நட்பினைக் கைவிட முடியவில்லையேமேடம்?
து.சேரன், ஆலங்குளம்
சேரன் ஸார்… ‘நண்பர்கள்’னு சொல்லிட்டீங்க! அப்புறம் அதுல ‘நல்லது’, ‘கெட்டது’னு எதுவுமிருக்குமா என்ன? ‘பக்குவமில்லாத’ நட்புனு வேணும்னா சொல்லலாம். பக்குவமில்லாத, பிரச்னைக்குரிய நபர்களின் அறிகுறிகள் சில
l பொய் பேசுவாங்க.
l கடன் கேட்பாங்க.
l சுயநலமா இருப்பாங்க.
l கஷ்ட காலத்துல காணாமப் போயிடுவாங்க.
l நீங்க ஜெயிச்சா பொறாமைப்படுவாங்க.
l உங்க ரகசியத்தை அம்பலமாக்குவாங்க.
lமட்டம் தட்டிப் பேசுவாங்க.
l முதுகுல குத்துவாங்க.
மொத்தத்துல உங்களை, யூஸ்’ பண்ணிக்குவாங்க! ஏதாவது பிரச்னையில மாட்டி விடுவாங்க.

இதெல்லாம் செய்யத் துணியாத பாஸிடிவ் நபர்களுடன் அதிகமாகப் பழகப் பழக, கூடா நட்புகள் தானாகவே விலகிவிடும்! ட்ரை பண்ணிப் பார்த்துட்டு, பலிச்சுதுன்னா, ஒரு ‘தாங்க்ஸ்’ போடுங்க!

மகாத்மா காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள்…?
வாசுதேவன், பெங்களூரு
யாரோ ஜப்பானிய அறிஞர் ஒருவர் பரிசளித்த அந்த பொம்மை, போதித்த தத்துவம், காந்திஜிக்கு மிகவும் பிடித்துப்போனதில் வியப்பில்லை. காந்தி புகழ் ‘மூன்று குரங்கு’களின் பெயர்கள் என்ன தெரியுமோ?

மிஜாரு (தீயதைப் பார்க்காதே!)
இவாஜாரு (தீயதைக் கேளாதே!)
சிகிஜாரு (தீயதைப் பேசாதே!)
அந்த மூணு மங்கீஸும் இப்ப, டெக் சவ்வி’ ஆயிடுச்சுங்களாம்!

தீயவற்றை, வ்யூ’ பண்ணாதே!
தீயவற்றை, லைக்’ பண்ணாதே!
தீயவற்றை, ஷேர்’ பண்ணாதே!
நல்ல போதனை! நாட்டுக்கே தேவையான, நச்’ போதனை! நடப்பு போதனை! நான் சொல்றது சரிதானே?

தங்கள் வீட்டில், வீட்டுத் தோட்டம்’ இருக்கிறதா மேடம்?
எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
(இருந்ததுஇப்போ துளசி, சாமந்தி போல, சில தொட்டிச் செடிகள் மட்டுமே)

சின்ன வயசுல மிகப்பெரிய தோட்டமிருந்த வீட்டில் வசித்தோம். ஸாரிதோட்டத்திலேயே வாழ்ந்தோம்னு சொன்னா, இன்னும் சரியா இருக்கும்.

தென்னை (இலங்கை செவ்வெளநி), கருவேப்பிலை, கொடுக்காபுளி, பாதாம், மா, வேப்பம், பப்பாளி என எல்லாமே இருந்தன.

l பப்பாளி மரத்தில் கீறினால் பால் வடியும். ஆணியால் எங்கள் பெயரை எழுதி வைக்க, அது வளர வளர எங்கள் பேரும் உசந்து போகும்! வாட் ஃபன்!

l பாதாம் கொட்டையைக் கல் கொண்டு, நேக்’காக இடித்து, பருப்பு சாப்பிடுவது ஒரு கலை! அதன் சாறு வெள்ளைச் சட்டையில் தெளித்துக் கறையாகும்ஹு கேர்ஸ். அது எங்களுடைய அன்றைய, பாதாம் பருப்பு!’

l நுணாம் பழத்தைக் காயாகப் பறித்து மண்ணில் புதைத்து, பழுக்கவிட்டுச் சாப்பிடுவோம். அதுதான் இப்ப, நோனி’ ஜூஸ்னு ஐந்நூறு ரூபாய்க்கு விற்கிறாங்க!

l கொய்யா, மாதுளைப் பிஞ்சுகளுக்கு பிளாஸ்டிக் உறை போடுவோம். அணில், வௌவால் ‘ஙே!’

l கொடுக்காபுளியை, கோணப் புளியாங்க’ என்றும் சொல்வதுண்டு. முள்ளு மரம்! சின்னக் கத்தியை வெச்சு முள்ளை செதுக்கிக்கிட்டே உச்சாணிக்குப் போய் கூடை நிறைய பழம் பறிப்போம்.

lகத்திரி, வெண்டை, பாகல், துவரை, அவரை, தக்காளி எனகாலையில முறம் நிறைய பறிச்சுக்கிட்டு வரும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.

lபூக்கள்? அது தனி சாப்டர்! குண்டுமல்லி, நித்யமல்லிக் கொடிக்கு, கவாத்து’ பண்றது, செம்பருத்திச் செடிகளுக்கு, ஒட்டு’ போடுவது, கொடி சம்பங்கிக்கு பந்தல் கட்டுவது என ஆல்வேஸ் பிஸி!

l கலர் கலரா டிசம்பர் பூ! எட்டு நிறமாவது இருக்கும்! கொசுக்கடி காலைப் பிடுங்கி எடுத்தாலும், பறிச்சு, கட்டி, அலட்டலாய்த் தலையில் சூடிக்கொண்டு போவோம்! அப்புறம், ஸ்கூல்ல பிடிச்ச மிஸ்ஸுக்கு அடர்த்தியா கட்டிய மல்லியோ, டிசம்பர் பூவோ கொண்டுபோய் கொடுத்து, காக்காய்ப் பிடிச்சதுண்டா கெஜலட்சுமி? நான் அதுல எக்ஸ்பர்ட்டாக்கும்! ஹிஹி…!

4 COMMENTS

 1. தங்கள் வீட்டில் வீட்டு தோட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில் மலரும் நினைவுகளாக இருந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தது. இப்படி தான் மேடம் எனக்கும். சொந்த வீட்டை விட்டு பேரக் குழந்தைகளை கவனித்து கொள்ள இங்கு வந்து ஃப்ளாட்டில் வசிக்கும் போது அவ்வப்போது ஃப்ளாஷ் பேக் வந்து போகும். ஆனால் பேரக் குழந்தைகளின் சிரிப்பு, பாசத்தில் நாங்கள் எங்களை மறந்து போகிறோம்.

 2. எனது கேள்வி உள்பட அனைத்து கேள்விகளும்,பதில்களும் சூப்பராக மனதைத்
  தாெ ட்டது.மேடத்தின் அறிவுத் தறனுக்கு வாழ்த்துகள்.வாழ்க பல் லாண்டு.
  து.சேரன்
  ஆலங்குளம்

 3. நானும் மேடத்தைப் போல் வாழை, தென்னை, பலா ,சாத்துக்குடி, செவ்வரளி, குண்டு மல்லி ,மல்லி, துளசி, கற்றாழை இன்னும் பல என்று தோட்டத்தோடு உறவு கொண்டிருக்கிறேன். அது வாழ்வில் இன்பம் பயப்பதாக உள்ளது.

 4. எனக்கும் இந்த தாவரங்கள் மீதெல்லாம்
  மிகவும் ஆசைதான். பாரிஜாதம்,பிங்க் ரோஸ்
  ரெட்ரோஸ்,துளசி,பேம்பு,மல்லி,பிச்சி,கொய்யா, வைத்திருக்கிறேன்.உங்கள் தோட்டத்தை
  பற்றி படித்ததும் சின்ன வயதில் கலர் கலராக கிறேந்திசெடி வைத்து அழகு பார்த்தது நினைவுக்கு வருகிறது. மிகவும்
  மகிழ்ச்சி.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...