0,00 INR

No products in the cart.

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்…
    – சேலம் சுபா

ல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப மாட்டார்கள். ஆனால் நல்ல வேலையில் உள்ள கணவர், வெளிநாடுகளில் வாழும் மகன்கள், மருமகள் பேரன், என்று கடமைகள் முடிந்தாலும் தன் தந்தை போல தானும் பிறருக்கு, அதுவும் படித்த இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று நாற்பத்தைந்து வயதுக்கு மேல் வீட்டில் ஜாலியாக பொழுதைப் போக்காமல் வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் துவங்கி நடத்தி வருகிறார் சென்னை அம்பத்துாரை சேர்ந்த லக்ஷ்மி .

இதிலென்ன சிறப்பு? என்று நீங்கள் நினைத்தால், அதை மாற்றிக் கொள்ளுங்கள். சாதாரண இல்லத்தரசியான இவர் வசதி வந்ததும் வீட்டுக்குள் முடங்காமல் தானே சுயமாக சம்பாதித்து தன்னால் முடிந்த சேவைகளை செய்ய வேண்டும் என்று மற்றப் பெண்களுக்கு  முன்னுதாரண மாகவும், பல பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளையும்  தந்து மகிழும் இவரை சந்தித்துப் பேசினோம்.

அழகு நிலையம், ஆன்லைன் பிசினஸ், வேலை வாய்ப்பு நிறுவனம் சேவைகள் என்று எப்போதும் பிசியாகவே தன்னை வைத்திருக்கும்
P.V. லக்ஷ்மி நம்மிடம் பகிர்ந்தவை இதோ…

“நான் பி காம் பட்டதாரி. திருமணத்திற்கு பிறகுதான் அக்கவுண்டன்ட் இந்தி எல்லாமே. இந்தி தெரியும் என்பதால் இந்தி வகுப்புகளையும் எடுத்துள்ளேன். என் திறமையை எப்போதும் அடக்கி வைக்காமல் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை முயற்சிப்பது எனக்குப் பிடித்தமானது.

திருமணமானதும் பிள்ளைகள் பிறந்து வளரும் வரை அவர்கள் நலனில் மட்டுமே கவனம் வைத்தேன். அவர்கள் ஓரளவு வளர்ந்ததும் எனக்கான நேரம் மீதம் இருக்க, அழகுக்கலையைப் பயின்றேன். எப்போதுமே நான் நேர்த்தியான முறையில் என்னை அழகாக வைத்திருக்க முயல்வேன். காரணம் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒருவரைப் பார்த்தவுடன் அவரின் கண்ணியமான தோற்றம்தான் மற்றவர்களைப் கவரும். நம்மை நாமே விரும்பினால்தான், நம் நம்பிக்கையும் உயரும். ஆகவேதான் அழகுக்கலையைத் தேர்ந்தெடுத்தேன்.

கணவருடன்…

கணவர் அரசு வேலை என்றாலும்
இருவர் சம்பாத்தியமும் இருந்தால்தானே எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?
என்னைக் கவர்ந்த பெண்மணியான
என் மாமியார் பிரேமகுமாரியின்
நினைவாக, அவரின் பெயரில்
பிரேமிஸ் பியூட்டி பார்லரை
துவங்கி வெற்றிகரமாக நடத்தினேன்.
முடிந்தவரை செயற்கையை
தவிர்த்து இயற்கையான
அழகுக்கலை
முறையைப் பின்பற்றினேன்.

நிறைய பெண்களுக்கு இந்த அழகுக்கலையைக் கற்றுத் தந்து அவர் களையும் சுயமாக பொருளாதாராம் ஈட்ட வைத்தேன். பதினான்கு வருடங்கள் கடந்தது . இன்று என் உதவியாளப் பெண்கள் மூலம் என் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை பெற்றுக் கொள்கிறார்கள். காலம் மாற மாற, நாமும் மாற வேண்டுமே! என் கவனம் ஆன்லைன் பிசினஸில் சென்றது. அதில் பெண்களுக்கான ஆடைகள், ருத்ராட்சம் போன்ற ஆன்மீகப் பொருள்களை விற்பனை செய்து புது அனுபவத்தைப் பெற்றேன். என்னிடம் தானும் இதே போல் தொழில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்ட பெண்களுக்கும் இந்த ஆன்லைன் பிசினஸைக் கற்றுத் தந்தேன்.

பெரிய மகனுக்குத் திருமணம் முடிந்ததும், இனி என்ன? என்ற ஒரு தேக்க நிலை வந்தது. இது எல்லாப் பெண்களுக்கும் வருவதுதானே? அப்போதுதான் கொரானாவினால் பெரும்பாலோர் சரியான வேலையின்றி அலைவதைப் பார்த்தேன். என் மனதில் என் தந்தை கோபாலின் நினைவு வந்தது. அவர் ராணிப்பேட்டையிலிருந்து வேலைக்காக இந்த சென்னை வந்ததுடன் எங்கள் ஊரைச் சேர்ந்த நிறைய பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்து, அவர்களை சொந்த வீடு, வசதிகளுடன் வாழ வழி வகுத்துத் தந்துள்ளார். அவரால் பலன் பெற்றவர்கள்  தந்தையிடம் வந்து கண்களில் நீருடன் நன்றி சொல்லிச் செல்வதை எத்தனையோ முறை நேரில் பார்த்துள்ளேன். எனக்கும் என் தந்தை போல் பலருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலிருந்தே இருந்தது.

நாம் நன்றாக இருப்பதுடன் நம் கடமை முடிந்து விடுவதில்லை, நம்மால் பிறரும் வாழும்போதுதான் நாம் பிறந்ததின் பயனே உள்ளது என்று என் தந்தை சொல்வது போல் அடிக்கடி தோன்றும் . ஏன் நாமே ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் துவங்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது? அதற்கான நேரம் இதுதான் என்று மனதில் ஒரு பொறி. உடனே துவங்கியதுதான் சின்னா மேன்பவர் கன்சல்டன்சி.

இதில் வேலைக்காக பதிவு செய்து கொள்பவர்களிடம் எந்தத் தொகையும் பெறுவதில்லை எனும் குறிக்கோளுடன் நடத்துகிறோம். ஜாப் போர்ட்டல் முறையில் பணி வாய்ப்பைத் தேடுவோர்க்கும் பணிக்காக தேடும் நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக  செயல்படுகிறது எங்கள் கன்சல்டன்சி. தொழில் நிறுவனங்கள் எங்களிடம் இருந்து பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும்போது அதற்கான தொகையை  அவர்களே வழங்கி விடுவார்கள். இப்போது தமிழ்நாடு முழுக்க எங்கள் கன்சல்டன்சி மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வருவது,  ‘பிறந்ததின் பயன் இதுதானோ?’ என்று எண்ண வைக்கிறது. மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்காக, பள்ளிகளுக்கு நேரில் சென்று வேலை குறித்த விழிப்புணர்வையும் தந்து வருகிறேன்.

ன்னை அதிக அளவில் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தது இந்த மாபெரும் மனிதர்களின் சந்திப்புதான். தென்காசியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் தலைவரான பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் ஐயா அவர்களையும், பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களையும் நான் சந்தித்துள்ளேன். அவர்களின் தன்னலமற்ற சேவையினால் பல ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுகின்றனர். நம்மால் சிலராவது பயன்பெற்றால் மட்டுமே நம் வாழ்க்கையின் சிறப்பு என்பதை உணர்ந்தேன். அதிலும் யாரையும் எதிர்பாராமல் சுயமாக சம்பாதித்து சேவைகள் செய்வதென்பது இன்னும் சிறப்புதானே?

ஒரு பெண் என்ன நினைத்தாலும் அதைச் செய்யும் உரிமை இன்னும் சில இடங்களில் மறுக்கப்படுவது உண்மைதான். ஆனால் எனக்கு என் கணவரும் பிள்ளைகளும் உறுதுணையாக இருப்பதும் எனக்குக் கிடைத்த வரம்தான்.” என்று அழகாக சொல்லி முடித்தார் லக்ஷ்மி. தன் தந்தையின் வழி வந்த நல்ல மகளாக அவரைப் பின்பற்றி உதவிகள் புரிவதையே தன் கடமையாக எண்ணுகிறார்.லக்ஷ்மிக்கு வாழ்த்துகளை சொல்லி விடைபெற்றோம்.

1 COMMENT

  1. இல்லத்தரசிகளின் பணி என்பது ஒரு முடிவுறா கணம்தான்.எவ்வளவு வசதி இருந்தாலும் எத்தனை வயதானாலும் சுயமாக சம்பாதித்து சிறு சிறு செலவுகள் செய்வதில் இருக்கும் மகிழ்ச்சி எதிலும் இல்லை.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...