0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே!

தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக
2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை என சாக்குபோக்கு எல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் செய்யும் முறையை பார்த்து அவர்களும் உடனே கற்றுக் கொள்வார்கள். நெற்றியில் நீங்களும், உங்கள் குழந்தைகளுக்கும் சிறு குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பழகிப் பாருங்கள். குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.
-ராஜி பார்த்தசாரதி

=======================

படித்ததில் பிடித்தது.

ஜார்ஜ் வாஷிங்கடன் மருத்துவ பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒன்று வயதானவர்களின் மூளை மிகவும் நன்றாக செயல்படுகிறது என்பதைக் கூறுகிறது. வயதான காலத்தில் இடது மற்றும் வலது பக்க மூளையின் செயல்பாடுகள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான விஷயங்களில் அதிகம் ஈடுபடச் செய்கிறது. இதனால்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட பலரும் புதிது புதிதான விஷயங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள்.

இளைஞர்களைப் போல் வேகமாகச் செயல்பட முடியாத போதிலும், வயதானவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்கிறார்கள். மற்றும் அவர்கள் குறைவாகவே எதிர்மறை உணர்ச்சிகளுக்கு உள்ளாகிறார்கள். எழுபது  வயதில் ஒரவரின் மூளை சக்தி உச்சத்தை அடைந்து, முழு அளவில் செயல்பட ஆரம்பிக்கிறது.

மூளையில் உள்ள மைலீன் (myelin) அதிகமாகி நியூரான்களை வேகப்படுத்துவதால் மூளையின் சக்தி முன்னூறு சதவீதம் அதிகமாக செயல்படுகிறது. மோன்சி உரி என்ற பேராசிரியர் வயதான மனிதர்களின் மூளை எந்தவித கஷ்டமும் இன்றி பிரச்னைகளை கையாள முடிகிறது என்று கூறுகிறார். வயதானவர்கள் மற்றும் இளைஞர்களை வைத்து செய்த ஆராய்ச்சியில் வயதானவர்களே அதிக அளவில் சரியான முடிவுகள் எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்று அறியப்பட்டது.

மூளையின் குணாதிசயங்கள்!

  1. நம் மூளையில் உள்ள ‘நியூரான்ஸ்’ அழிவதில்லை. மூளையை நாம் உபயோகிக்காவிட்டால் அவை மறைந்துவிடும்.
  2. மறதி மற்றும் திசை மாறிய எண்ணங்களைத் தவிர்க்க அனாவசியமான விஷயங்களில் அளவு கடந்து ஈடுபடுவைத தவிர்க்கவும்.
  3. ஆரோக்கியமான வாழ்க்கையில் மூளை, உடம்பு இரண்டிற்கும் வேலை கொடுப்பவர்கள், அவர்களின் முளை செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கிறார்கள்.

ஆகவே வயதைக் கண்டு அஞ்சாதீர்கள். புதியவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். பாட்டு, நடனம், வரைவது என்று பல கலைகளிலும் ஈடுபடலாம். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நண்பர்கள், உறவினர்களோடு உரையாடுங்கள். பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள். அது ஆபத்தானது. எல்லா நன்மைகளும் எனக்காக காத்திருக்கிறது என்றே எண்ணி வாழுங்கள்.
-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்

=======================

கால்வண்ணம்!

விசுவாமித்திர முனிவருடன் ராமபிரானும், தம்பி லட்சுமணனும் வனவாசம் செல்லும்போது வழியில் கிடந்த கல் ஒன்றின் மீது ஸ்ரீராமபிரானின் கால்கள் படவே கல் உருமாறி பெண்ணாக மாறிவிட்டது. சப்தரிஷிகளில் ஒருவரான கெளதம முனிவரின் தர்மபத்தினி அகலிகைதான் கல்லிலிருந்து பெண்ணுருவாய் மாறி வந்தவள். இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு கணவரால் ‘கல்லாகக் கடவாய்’ என்று சபிக்கப்பட்டு வருடங்கள் பல உணர்வற்ற ஜடப் பொருளாய் இருந்தவள். ஶ்ரீ ராமரின் பெருங் கருணையால் சாபத்திலிருந்து மீட்கப்பட்டாள்.

தவறு செய்தவர்களெல்லாம் தண்டனை ஏற்றாலும், செய்த பாவத்தின் தன்மையால் அவர்களை சமூகம் மன்னிக்குமே தவிர முழுமையாக ஏற்பதில்லை. ‘தவறு செய்தவன்’ என்ற முத்திரை பதித்து விடுகின்றனர். தண்டனைக்கு உட்பட்டவள் என்று விலகி நிற்கிறார்கள். அகலிகை உயிர்பெற்று பிரகாசமாய் புதிய பொலிவுடன் தேவ கன்னிகை போல  இருப்பதைக் கண்டு முனிவர் விசுவாமித்திரர் “ராமா! சாபத்திலிருந்து மட்டும் அகலிகையை நீ மீட்கவில்லை, உனது பாதம் பட்டதால் அவள் செய்த பாவத்திலிருந்தும் மீட்கப் பெற்றாள். அந்தப் பாவம் நீங்கப் பெற்றதன் பொலிவை அவளது முகத்தில் காண்கிறேன்! என்னே உனது மகிமை! கைகளினால் ஒரே அம்பினால் அசுரர்களை வீழ்த்தியபோது உனது கைவண்ணம் அங்கு கண்டேன். உனது கால்வண்ணம் இங்கு கண்டேன்” என்று கண்ணீர் மல்க ராமபிரானைனக் கட்டித் தழுவினார்.
-ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி

=======================

யார் பைத்தியம்?

ரு ஞானி ஏதும் செய்யாது இருந்தார். அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர். அந்த ஞானி சொன்னார், “எனக்கு கடவுளிடம் எந்த வியாபாரமும் இல்லை. நம்மைக் காப்பாற்ற வேண்டுமா? மூழ்கடிக்க வேண்டுமா? என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை. திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன். ஆகவே, மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது. எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ, மரணத்தைப் பற்றி மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்?” என்று.

இதுதான் வாழ்க்கை. நமது கையில் ஒன்றும் இல்லை. வேண்டும்
என்றால் முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் அதற்கு தகுந்த பலனை இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதாவது கடமையை
செய்ய இறைவனிடம் பலனை ஒப்படைத்து விட வேண்டும். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டால். வாழ்க்கை எப்போதுமே டென்ஷன் இல்லாமல் இருக்கும்.
நான் என்ற எண்ணத்தையும்,
எனது, எனக்கு என்ற உணர்வையும் உள்ளத்திலிருந்து அகற்றுங்கள்.
-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...