0,00 INR

No products in the cart.

வங்கி முதலீடு – தனியார் நிறுவன முதலீடு: எது சிறந்தது?

கருத்து யுத்தம்!
முகநூல் வாசகியர்களின் பதிவுகள்!

வங்கி முதலீடே சிறந்தது!

ரசு வங்கி முதலீடு மட்டுமே சிறந்தது. தனியார் நிறுவனங்களுகளிடம் ஆரம்ப காலத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் விதத்தில் செயல்பட்டு போகப்போக ஷேர் மார்க்கெட் முதலீட்டில் பங்கு போட்டு நம் தொகை முழுதாக முதிர்வு அடையும் நிலையில் திவாலாக கூடும். தனியார் வங்கிகள் இணைவு மசோதாவில் எப்போதும் ஆகலாம். குறைந்த வட்டியாக இருந்தாலும், அதிக பாதுகாப்பு, நமக்கு பிறகும் நம் சந்ததியினர் கூட தொடரலாம் என்ற நிலை… அரசு வங்கி முதலீடே சிறந்தது.
– ஸ்ரீவித்யா பிரசாத்

சில தனியார் நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசம் செய்கின்றன. தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் நம்பகத் தன்மை உள்ளவை என்று சொல்ல முடியாது. மாறாக வங்கி முதலீடுகள் நம்பத்தகுந்தவை. பாதுகாப்பானவை. வங்கி முதலீடே சிறந்ததாகும்.
– லலிதா பாலா

ங்கியில் முதலீடு செய்தால், டயத்துக்கு வட்டி வந்துரும். இது உரிய நேரத்தில் செலவு திட்டத்திற்கு கை கொடுக்கும்.
-கோமதி சிவாயம்

ஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசை, தேசிய வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது. நம் குழந்தைகளையும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும். செய்தித்தாள்களில், எத்தனை தனியார் வங்கிகள் திவால் ஆன கதை எல்லாம் படிக்கிறோம். சிந்தித்துச் செயல்படுவோம்.
-ஜெயா சம்பத்.

ணம் பாதுகாப்பாக இருக்க வங்கி முதலீடு மட்டுமே பெஸ்ட்!
– சரஸ்வதி துரைசாமி.

நிறைய தேவைகளையும், ஆசைகளையும் நிறைவு செய்ய உதவும் சிறு முதலீடுதான் வங்கி முதலீடு எனலாம்.. தனி மனித உழைப்பின் சிறு முதலீடாகவே இந்த வங்கி முதலீடு இருக்கும்…
– சத்தியபானு , சிவகங்கை.

ங்கி முதலீடு நல்லது… குறுகிய கால நீண்ட கால சேமிப்பு திட்டம் இங்கேயும் உண்டு… சிந்தித்து நமக்கேற்ற சேமிப்பில் முதலீடு செய்யலாம். தனியாரிடம் கொடுத்து ஏமாற வேண்டாமே.
-கவி செளமி

ரசு வங்கியானால் அரசாங்கம் உத்திரவாதம். அரசு மற்றும் தனியார் வங்கியில் நாம் செய்யும் முதலீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு (இன்ஷுரன்ஸ்) உத்திரவாதம் உண்டு. தனியார் நிறுவனங்கள் வட்டி அதிகம் கொடுத்தாலும் நம் முதலீட்டுக்கு உத்திரவாதம் கிடையாது. அரசு வங்கிகளில் பிரச்னை வந்தாலும் அரசு தலையிட்டு சரிசெய்து நம் பணத்தை திரும்பப் பெற வழி செய்யும். பணம் சம்பாதிப்பதை போன்று அதை நல்ல வழியில் முதலீடு செய்து திரும்பி பெறுவதும் மிக முக்கியம்.
-ராதிகா ரவீந்திரன்

திருச்சியில் இருந்தபோது ஒரு தனியார் நிறுவனத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்று எண்ணி பணத்தைப் போட்டு அது முடிந்து திருப்பிக் கொடுக்காமல் அதை நாங்கள் கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போட்டு வாங்கினோம். இந்த மாதிரியான அல்லல்கள் இல்லாமல் நம்முடைய பணம் டெபாசிட் செய்த காலம் முடிந்தவுடன் எளிதில் கிடைக்க வங்கியில் முதலீடு செய்வதுதான் சிறந்தது.
– உஷா முத்துராமன்

த‌னியா‌ர் நிறுவன‌ங்க‌ள் அதிக வட்டி என ஆசை காட்டி அதல பாதாளத்தில் தள்ளி விடும். நம் கனவுகளையும், நினைவுகளையும் அக்கரைப் பச்சையாக இழுத்து கானல் நீராக செய்வதும் உண்டு.
– வாணி கணபதி

திக வட்டிக்கு ஆசைப்பட்டுத் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தால், திடீரென்று அவர்கள் நடையைக் கட்டிவிட்டால், அப்புறம் போட்ட பணமும் போய் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும். எனவே, குறைந்த வட்டி கிடைத்தாலும் வங்கிகளில் முதலீடு செய்வதே சிறந்தது.
– ஆர். பிருந்தா, மதுரை

ஷ்டப்பட்டு உழைந்த பணம் அல்லவா..பத்திரமாக, பாதுகாப்பாக அதே சமயம் அவசரமாக பணம் தேவையென்றாலும் எடுத்துக் கொள்வதற்கு ஏற்றது அரசாங்க வங்கியில் முதலீடு செய்வதே சிறந்தது.
-சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்

ட்டி தொட்டி எல்லாம் இயங்கும் வங்கியில் போட்ட பணத்துக்கு உத்தரவாதம் உண்டு. குறைந்த வட்டி என்றாலும் நிறைந்த நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானமாக அந்த வட்டியும் பயன்படும். மொத்தத்தில் பணம் பத்திரமாக இருக்கும். வயதான காலத்திலும் பயமின்றி வாழ வங்கி முதலீடு சிறந்தது.
– ஜெயலட்சுமி

ங்கி முதலீடே சிறந்தது! சில வருடங்களுக்கு முன்னர், வங்கிகளை விட சற்றே அதிக வட்டி என்று ஈர்க்கப்பட்டு, ஒரு பிரபல நிறுவனம் ஒன்றில் ‘நன்கு பாதுகாக்கப்பட்ட (secured) முதலீடு’ ஒன்றைச் செய்தேன்! என் சக்திக்கு மீறிய தொகை! சென்ற வருடம் மே மாதம் முதிர்வடைந்தது! இன்று வரை முதலும், கடைசி வருட வட்டியும் வரவில்லை. கொரோனா காரணமாக தாங்கள் கடன் கொடுத்தவர்கள், தங்களுக்குக் கடனைத் திருப்பித்தரவில்லை என்று மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டார்கள்! கமிட்டி என்ற பெயரில் கல்கத்தாவில் பெரிய மனிதர்கள் சிலர் எங்கள் பணத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டபடி எங்கள் பணத்தை எப்போது திருப்பித் தரலாம் என்று டிஸ்கஷனில் இருக்கிறார்கள்!
– க குமார்

சில தனியார் வங்கிகள் நம்பகத்தன்மை உடையவைதான். ஆனால் அதன் தலைமை இறந்துவிட்டால் ஆட்டம் கண்டு விடும். பின் போராடித்தான் பணத்தைப் பெறவேண்டும். அது மட்டுமல்ல அரசாங்க வங்கியில் போடுவதால் ராமாயணத்தில் அணிலின் ‌பங்கு ‌போல நம் பங்கும் அரசுக்கு உதவியாக இருக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல நாம் அனைவரும் அரசு வங்கியில் பணம்‌ போட்டால் அரசு பல நல்ல காரியங்களில் அதை இல்லையா? ஏதோ நம்மாலான தேச சேவை.
-ராஜலக்ஷ்மி கெளரிசங்கர்

னியார் நிறுவனங்கள் அதிக வட்டி தருவது என விளம்பரங்கள் தருவது ஒரு மாயயை. அதனை நம்பினால், மன அமைதி, முதலீடு பணம், நேரம், என இழப்பு அதிகம். வங்கி வட்டி விகிதம் சற்று குறைவு என்றாலும், ரிசர்வ் பேங்க் உத்தரவாதம் நிம்மதியான வாழ்கை சூழ் நிலை நிச்சயம் நிலவும்.
– கணபதி காந்தி

ம் பணத்திற்கு பாதுகாப்பு என்பது வங்கியில் மட்டுமே கிடைக்கும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தெரியாத தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது ஆபத்தானது. வட்டியை விடுங்கள் முதலுக்கே மோசமாகிவிடும். கஷ்டப்பட்டு சம்பாதித்து சிறுக சிறுக சேமித்த பணம் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். நம்பகத்தன்மையை வைத்துப் பார்க்கும்போது வங்கி முதலீடே சிறந்தது.
– கே.எஸ். கிருஷ்ணவேணி, சென்னை

பாதுகாப்பு கருதி வங்கி முதலீடு செய்வதே நல்லது. 5 லட்சம் வரை காப்பீடு இருப்பதால், வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினர் பெயரிலும், மூன்று நான்கு லட்சங்களா பிரித்து போடுவது சிறப்பு. மொத்த சேமிப்பையும் ஒரே இடத்தில் டெபாசிட் செய்யாமல் தங்க நகைகளிலும் ஒரு பகுதி முதலீடு செய்யலாம். அவைகளை அணிந்தும் மகிழலாம், அவசர தேவைக்கும் உதவும். இதனால், ஒன்றில் இழப்பு ஏற்படினும் மற்றது கை கொடுக்கும்.
-ஜெயகாந்தி மகாதேவன்

த்து வருடங்கள் முன்பு நாங்கள் தனியார் வங்கியில் போட்டு நாங்கள் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல கடைசியில் அதனை எடுத்து அரசு வங்கியில் போட்ட பின்தான் நிம்மதி. வட்டிக்கு ஆசைப்படாமல் அரசு வங்கியில் போடுவதே சிறந்தது.
-எஸ். மாரிமுத்து

ரசு வங்கிகளில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்றே கிடைக்கும் கலாக்காய் மேலானது. தனியார் நிறுவன முதலீடு என்பது நாளை கிடைக்கும் பலாக்காய். வங்கி முதலீடு என்பது இன்றே கிடைக்கும் கலாக்காய். எது பெட்டர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..
-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்

ரசு வங்கிகளில் பணத்தை போட்டுவிட்டு ரசீது, பாஸ்புக் வாங்கி விட்டால் பயம் இல்லாமல் இருக்கலாம். இரண்டு வங்கிகளில் டெபாசிட் பண்ணி இருந்தால் வங்கி நெருக்கடிகளின்போது ஒரு கதவாவது திறந்திருக்கும். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தால் தினமும் அதை நினைத்து பயந்து மனநிம்மதியும் போய்விடும். தேனிக்கள் தேனை சேமிப்பது போல் நாம் சேமித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது வங்கி முதலீடே.
-கலைமதி சிவகுரு

ரு பழமொழி சொல்வார்கள் ‘அரைக்காசுக்கு உழைத்தாலும் அரசாங்கத்துக்கு உழைக்கனும்’ என்று. அதாவது உழைத்ததற்கு சம்பளம் உறுதி. வெயிலோ, மழையோ முதல் தேதியானால் சம்பளம் ‘டான்னு’ வந்துடும். எக்காரணம் கொண்டும் சம்பளத்தில் கை வைக்க மாட்டார்கள். அத்தகைய நம்பகத்தன்மை வாய்ந்தது அரசு வங்கி முதலீடு. அதனால் ‘அரைக்காசு’ முதலீடு செய்தாலும் அரசு வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். அரசு வங்கியில் முதலீடு செய்வது நம் வீட்டில் பணம் இருப்பது போல. தனியார் வங்கியில் முதலீடு செய்வது அடுத்தவர் வீட்டில் இருப்பது போல.
-ஜானகி பரந்தாமன், கோவை.

தனியார் நிறுவன முதலீடே சிறந்தது!

ங்கி முதலீடு சிறந்ததுதான். ஆனால் லாபமும் வேண்டுமே. வங்கிகள் நாளுக்கு நாள் வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே போகின்றனவே. அதனால் பாதுகாப்பு, லாபம் இரண்டையும் கருத்தில் கொண்டு பாரம்பரியமான, பல ஆண்டுகளாக நன்றாக இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீடென்றால் ரிஸ்க் இருக்காது.
-ஹேமலதா சீனிவாசன்

ரிரு தனியார் வங்கிகள் ஏமாற்றியது உண்மைதான். அதற்காக எல்லோரும் அப்படிதான் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு. அரசு வங்கியில் நமது முதலீட்டுக்கு சொற்ப வட்டிதான். நம்பகமான சில தனியார் வங்கிகள் நல்ல வட்டி கொடுக்கிறார்கள். அதில் முதலீடு செய்வது நல்ல லாபம் கிடைக்கும்.
-நம்பிராஜன்

ணவீக்கம் காரணமாக வருடாவருடம் வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து கொண்டே செல்வதை பார்க்கையில் தனியார் வங்கியில் முதலீடு செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், முதலீடு செய்யும் முன்பாக அவர்கள் விதிமுறைகள், இத்தனை வருடமாக நல்ல நம்பகத் தன்மையோடு நடந்து இருக்கின்றார்களா, வங்கியின் செயல்திறன், அவர்களது ஆண்டு அறிக்கை, சேவை என அனைத்தையும் ஆராய்ந்து கொள்வது மிகவும் அவசியம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏதும் அறியாமல் முதலீடு செய்யக்கூடாது.
– பானு பெரியதம்பி, சேலம்

ங்கி முதலீடு பாதுகாப்பானதாக இருப்பினும் அதில் குறைந்த லாபமே கிடைக்கும்… தனியார் முதலீட்டில் முதலீடு செய்பவர்கள் அது நம்பகமானதா என்பதை விசாரித்து தங்கள் பணத்தை முதலீட்டு செய்வதன் மூலமும், தெரிந்த தனியார் கம்பனிகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்து சைலன்ட் பார்ட்னர்ராக இருப்பதன் மூலமும் அதிக லாபத்தை ஈட்டலாம்.
-தாமரை செல்வன்

பொதுவான கருத்து!

சிறிய அளவிலான முதலீடுகளை தனியார் நிறுவனங்களிலும், பெரிய முதலீடுகளை வங்கிகளிலும் சேமிக்கலாம். தனியார் நிறுவனங்களின் ‘ மார்க்கெட் நிலவரங்களை அடிக்கடி கவனித்து வர வேண்டும். தனியார் நிறுவனங்களில் நம்முடைய சேமிப்புகளை, ஒரே முதலாக போடாமல், சிறிது சிறிதாக ‘Split’ செய்து போட வேண்டும். வங்கிகளில் இப்படி செய்யத் தேவையில்லை.
சி.எஸ். ஜானகி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...