0,00 INR

No products in the cart.

முதியவர்களைத் அதிகம் தாக்கும் ‘டிமென்ஷியா’

– ஜெனிபர் டேனியல்

லகளவில் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பரபரப்பான காலை பொழுதும், மன அழுத்தம் கொடுக்கும் நாட்களும் நமக்கு அதிகப்படியான குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஒரு சாவியை அல்லது ஆவணத்தை நீங்கள் தவறான இடத்தில் வைத்துவிட்டு மறந்திருக்கலாம். காலைப் பொழுதில் அவசரமாக அதை தேடும்போது கிடைக்காது. இதனால் நேற்று நடந்த நிகழ்வுகளை யோசிக்க வேண்டியிருக்கும். இதை ஒரு பெரிய நியாபக மறதி பிரச்னையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஒரு சாதாரண பிரச்சனையாகும். உலகில் உள்ள அனைவருக்கும் இந்த மாதிரியான நியாபக மறதி பிரச்னைகள் ஏற்படுகின்றன.

டிமென்ஷியா

நினைவுகள், சிந்தனை, நடத்தை, கற்றல் திறன், மொழி மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை பாதிக்கும் ஒரு நோய்தான் டிமென்ஷியா. இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதித்தாலும், வயதுடன் தொடர்புடையது அல்ல. உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் 10 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிமென்ஷியா பெரும்பாலும் 60 -70% பேரிடம் அல்சைமர் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. காரணம் அல்சைமர் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் பலவிதமான நோய்கள் மற்றும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் டிமென்ஷியா ஏற்படுகிறது.

முதியவர்களைத் தாக்கும் டிமென்ஷியா

ந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பிறரைச் சார்ந்து வாழக்கூடிய நிலை ஏற்படுகிறது. டினெம்ஷியா உடல்நிலை, மனநிலை, சமூக நிலை மற்றும் பொருளாதார நிலைகளை பாதிக்கும். இது பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ளக்கூடியவர்கள், குடும்பம் மற்றும் சமூகம் என பெரிதளவில் பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

டிமென்ஷியா ஒவ்வொரு நபரிடமும் வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டுகிறது. மேலும் பாதிப்பின் அளவும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலர் ஒரே நிலையில் நீண்ட நாட்கள் இருப்பார்கள். சிலருக்கு ஒரே நேரத்தில் பலவிதமான அறிகுறிகள் தென்படும்.

எல்லோருக்குமே இந்த முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலையில்தான் தொடங்குகிறது. அறிவாற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் எதுவும் இருக்காது. மனதின் செயல்பாடு இயல்பாகவே இருக்கும்.

மூன்றாவது நிலையில் டிமென்ஷியா அல்லது அல்சைமர் அறிகுறிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கண்கூடாகப் பார்க்கமுடியும். இந்த நிலை அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஞாபக மறதி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுதல், வாகனம் ஓட்டுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

பெரும்பாலான மூத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தேதிகளை மறப்பது, பொருட்கள் வைத்த இடத்தை மறப்பது போன்றவை. ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவாலான காரியம். தினசரி மருந்து, மாத்திரைகள் எடுக்கவும் உணவைச் சாப்பிடவும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கண்காணித்து பராமரிக்க முன்வருவது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிதும் உதவும். மாறிவரும் வாழ்க்கை முறையில் தனித்துவிடப்படும் முதியவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதுபோன்ற முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பவர் ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கக்கூடிய சில விஷயங்களை செய்தாகவும் வேண்டும்.

டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் நடைமுறையில் இருக்கும் மருந்துகள் நல்ல பலனை தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒருவர் இந்த நோயால் தாக்கப்படுகிறார் என்கிறது அந்த அமைப்பு.

ஆய்வு சொல்வதென்ன?

லான்செட் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட புதிய ஆய்வின்படி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அடுத்த 30 ஆண்டுகளில், டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் குறையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிமென்ஷியாவின் எண்ணிக்கை வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 3 மடங்கு அதிகரித்து 150 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் என்ற எண்ணிக்கையை தாண்டும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே அன்புடன் நடத்தவேண்டும். மேலும், அவர்களிடம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். இது நோய் மோசமடையாமல் தடுக்கும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுப்பது அவசியம். அறிகுறிகள் அதிகமாகும் நேரத்தில் மருத்துவ உதவியை நாடவும். அவர்களின் செயல்பாடுகளால் எரிச்சல், கோபம் வந்தாலும் அதை அவர்களிடம் காட்டாமல் இருப்பது மேலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்கவும் உதவும்.

2 COMMENTS

  1. “டிமென்ஷியா” நோயால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகளால் எரிச்சல்,கோபம் வந்தாலும் அவர்களிடம் காட்டாமல் இருப்பது நல்லது என்ற வரிகள்தான் பாராட்டிற்குரியது. முடிந்தவரை முதியோர்கள் பல இதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை ஞாபகப்படுத்தி பூர்த்திசெய்து பழகினால் மறதி நம்மை நெருங்காது.மறதியா… எனக்கா…நோ…நோ….என சொல்லுவீர்கள்.

  2. டிமென்ஷியா நோயின் ஆரம்ப
    நிலையிலேயே அவர்களுடைய பொருட்கள்
    எல்லாம் ஒரே இடத்தில் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். அன்றாடம் உள்ள குறிப்புகளை ஒருவரின் உதவியோடு
    டயரி போட்டு எழுதி விட்டால் சிறிது எளிதாக இருக்கும்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காப்பாற்றிய ஓர் மன்னிப்பு!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் அரசனின் ஓர் மன்னிப்பு அவனது சாம்ராஜ்யத்தையே காப்பாற்றியது. அவனது சாம்ராஜ்யம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றிலேயே, அந்த மன்னனின் மன்னிப்பு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. என்ன பீடிகை போடுகிறீர்கள்....

  சிஸேரியனுக்கு ஒரு செக்!

-ஜி.எஸ்.எஸ். ஒரு அறுவை சிகிச்சையைத் தடுக்க முடியும் என்றால் அதைத் தவிர்ப்பதுதானே இயல்பு, புத்திசாலித்தனம்.   ஆனால் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது சிசேரியன் அறுவை சிகிச்சை. 'டாக்டர், என் பெண் பிரசவ வலியை தாங்க மாட்டா. ...

ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்

0
 பார்வை - ரமணன்   அண்மையில் உச்ச நீதிமன்றம்  ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும்  பேரறிவளானை விடுதலை செய்திருக்கிறது. இதில் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள், சிலர்  வெறுப்படைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறவர்கள் “தாமதமாகவேனும் நீதி வென்றது”  என்ற கருத்தையும், வெறுப்புற்றவர்கள்  “முன்னாள் பிரதமரை...

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...