மரணம் – எல்லாருக்கும் வரும்; ஆனால் இறக்க யாரும் தயாரில்லை!
உணவு – எல்லாருக்கும் வேணும்; ஆனால் விவசாயம் செய்ய யாரும் தயாரில்லை!
நீர் – எல்லாருக்கும் அவசியம் வேணும்; ஆனால் நீர்வளம் பாதுகாக்க யாரும் தயாரில்லை!
பால் – எல்லாருக்கும் தேவை; ஆனால் கறவை இனம் வளர்க்க யாரும் தயாரில்லை.
நிழல் – அவசியம்… மிக அவசியம்; ஆனால் தன் வீட்டு முன்னால் மரம் வளர்க்க யாரும் தயாரில்லை.
மருமகள் – எல்லாருக்கும் தேவை; ஆனால் அவளை முறைப்படி பேணி வளர்த்துத் தர யாரும் விரும்பவில்லை சிசுவிலேயே… (ஸாரி எழுத மனம் வரவில்லை)
பெற்றோர் – பாலூட்டி, சீராட்டி, படிக்க வைத்து, கல்யாணம் செய்து, செட்டில் ஆக்கும் வரை வளர்க்கத் தாய் – தந்தை வேண்டும்; ஆனால் அதே பெற்றோரை அவர்கள் தளர்ந்தபோது பாதுகாக்க யாரும் தயாரில்லை!
என்னவோ தோன்றியது; எழுதிவிட்டேன்…
நிஜம்தானே கண்மணீஸ்?
கடைசி வரிகளுக்கும் இந்த அண்மை செய்திக்கும் தொடர்பு இருக்கிறது அன்பு உள்ளங்களே…
கேரள மாநலத்திலுள்ள ஆலப் புழையைச் சேர்த்தவர் ஜோசப். 80வயதான இவருக்கு 6 பிள்ளைகள் .அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஜோசப் மனைவி லீலா (75) புற்று நோயால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாக இருக்க.. ஜோசப் பால் அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை.
பிள்ளைகள் கண்டு கொள்ளாத நிலையில் மனம் உடைந்த முதியவர். மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு..தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார் .
சுயநலமான பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததற்கு இந்தப் பரிசு கூட கிடைக்கலைன்னா எப்படி?!!
அன்பு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
உங்களது எழுதும் ஆர்வதை ஊக்குவிக்கவே, நாங்கள் எங்கள் இதழில் நீங்கள் அனுப்பும் பதிவுகளை பிரசுரிக்கிறோம்.
நீங்கள் அனுப்பும் கதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் அது உங்கள் சொந்த கற்பனையில் உதித்ததாக இருக்க வேண்டும். உங்களுடைய எழுத்தார்வத்தையும், எழுத்தாற்றலையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சிறு சிறு அனுபவங்கள் முதல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வரை எந்த படைப்பானாலும் அது உங்கள் படைப்பாக இருக்க வேண்டும். பிற இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இருந்து நகலெடுக்கப்பட்ட பதிவுகளை தயவுகூர்ந்து எங்களுக்கு அனுப்ப வேண்டாம்!
அப்படிச் செய்வது பத்திரிகை தர்மத்திற்கு புறம்பானது. அதை பிரசுரிக்கும் படி அனுப்புவது உங்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி, முறையல்ல.
நல்ல ரசனை மிகுந்த வாசகர்களே எந்த ஒரு பத்திரிகைக்கும் பலம். உங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி!
தன்னை ஆளாக்கிய பெற்றோர்களை அவர்களின் முதிர்வு / இயலாத காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை. பெற்றோர்களின் நிலமை தானே நாளை இவர்களுக்கும்?
ஆ. மாடக்கண்ணு
பாப்பான்குளம்
ஆலப்புழை சேர்ந்த ஜோசப் அவர்களின் கதை மனதில் பாரமாக இறங்கியது. ஒரு வார்த்தையில் நீங்கள் கூறிய அவ்வளவும் நூற்றுக்கு நூறு உண்மை. என்ன செய்வது பாசம் ,உண்மையான அக்கறை ஆகியவை போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது .நமக்கு ஏற்றுக்கொள்ளத்தான் இன்னும் மனம் வரவில்லை. முதுமையில் தனிமை மிகவும் கொடுமையானது . இதனை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு பெற்றோரிடம் அன்பை, பாசத்தை காட்ட மறக்கக்கூடாது.
எந்த பயனும் இல்லாதவர்கள் இனிமேலாவது பயனாளியாக அப்பாஅம்மாவுக்கு இருக்க “ஒரு வார்த்தை” பயனளிக்கட்டும். அனு மேடத்துக்கு ” அட்வான்சு.” குடியரசு தின வாழ்த்துகள்.
து.சேரன்
ஆலங்குளம்
“ஒரு வார்த்தை” ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியதாய் அமைந்து ,”நெத்தியடியாய் “அனைவரின் மனதிலும் வலம் வந்து கொண்டிருக்கும் என்பது திண்ணம். ஜோசப்,லீலா தம்பதிகள் பற்றிய தகவல் கண்ணீரை வரவழைத்தது.வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை அனைவரும் உணர வேண்டும்..