– ஜி. விஜயலெட்சுமி, கும்பகோணம்
போயே போச்சு!
செல்போன் வந்தாலும் வந்துச்சு.
கையில் கடிகாரம் கட்டினது போச்சு.
கால்குலேட்டர் போச்சு.
கடிதம் எழுதறது போச்சு.
கேமரா போச்சு.
காலண்டர் போச்சு.
ரேடியோ, டேப்ரெக்கார்டர் போச்சு.
சிடி போச்சு.
அலாரம் வைக்கும் கடிகாரம் போச்சு.
நிம்மதி போச்சு.
எல்லாத்துக்கும் மேலே ரீசார்ஜ்
செஞ்சு, செஞ்சு கையில் இருக்கிற
காசும் போச்சு!
நாம் நாமில்லை!
பிரச்னை இல்லாவிட்டால்
அவன் மனிதன் இல்லை.
சண்டைகள் போடாவிட்டால்
அவர்கள் கணவன் மனைவி இல்லை.
அன்பைப் பொழியாவிட்டால்
அவர்கள் பெற்றவர்கள் இல்லை.
தொல்லைகள் தராவிட்டால்
அவர்கள் பிள்ளைகள் இல்லை.
நம்மை புரிந்து கொண்டால்
அவர்கள் உறவினர்கள் இல்லை.
நம்மை புரிந்து கொள்ளாவிட்டால்
அவர்கள் நண்பர்கள் இல்லை.
மனிதர்களை கஷ்டப்படுத்தாவிட்டால்
அவன் கடவுள் இல்லை.
இவற்றை அறியாவிட்டால்
நாம் நாமில்லை!