0,00 INR

No products in the cart.

வாசகர் ஜமாய்க்கிறாங்க…

பை ஒன் கெட் ஒன் ஆஃபர்

கோபத்தை வாங்கினால் ரத்தக்கொதிப்பு இலவசம்.
பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்.
வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்.
கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம்.
இது தேவையா?
அல்லது
நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம்.
உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம்.
அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம்.
நேர்மையை வாங்கினால் நித்திரை இலவசம்.
அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம்.
இது தேவையா?
எது உங்கள் சாய்ஸ்? சிந்தியுங்கள்.
இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
– டி. நிர்மலா தேசிகன், மதுரை

தலைகீழாக காட்சியளிக்கும் லிங்கம்

ந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அருகே யானமத்துருவில் உள்ள அருள்மிகு சக்தீஸ்வர் ஆலயத்தில் சிவலிங்கம் தலைகீழாக அமைந்த நிலையில் தியானிக்கிறார். அருகில் குழந்தை கார்த்திகேயனை மடியில் வைத்தபடி அன்னை உமையவள் வீற்றிருக்கிறாள். இத்தலத்தை தரிசித்தால் நீண்ட நாள் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
-கே.எஸ். கிருஷ்ணவேணி, சென்னை

வாழைத் தண்டை வெட்டிப் போடு

ரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அன்று அதை எடுத்து மசியல் செய்தார்கள். சாப்பிட்டவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லை. எப்படி சாப்பிடுவார்கள் ?

இது பெரியவாளுக்குத் தெரிய வந்தது.

சமைத்தவர் கையைப் பிசைந்துகொண்டு, “எனக்குத் தெரிந்த வரையில் நீரில் அலம்பி, புளி விட்டுக் கொதிக்க வெச்சுத்தான் பண்ணினேன். அதுக்கெல்லாம் மசியவில்லையே – அதான் மசியல் வீணாகி விட்டது!” என்றார்.

கருணைக் கடலான நம் பெரியவா சொன்னார், “கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். அதன்படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும்படி அமைந்தது.

பெரியவா வேத வேதாந்தம், முதலியன தெரிந்து சொல்வது போலவே, சமையல் கலை உட்பட அனைத்து கலைகளிலும் தேர்ந்த சர்வ சமையல் விற்பனர் என்பதற்கு இது ஒரு சிறிய நிகழ்ச்சியே சான்று.
-சுந்தரி காந்தி, பூந்தமல்லி

வெண்டைக்காய் மண்டி

வெண்டைக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இப்போது வெண்டைக்காய் மண்டி சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவை: வெண்டைக்காய் – கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை – ஒரு கப், அரிசி களைந்த நீர் – 2 கப், புளி – எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 3 (கீறியது), காய்ந்த மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 15 (உரித்தது), கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு – 10 பல், எண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை: முதலில் வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, பிறகு நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கி பரிமாறவும். சுவையான வெண்டைக்காய் மண்டி தயார்.
– ஏ.எஸ். கோவிந்தராஜன்

பாக்கெட் இட்லி மாவு…

ளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு இன்று பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி. ஸ்லோபாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை. இதன் பின்விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும் கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர் என்று ஒரு செய்தி உண்டு.

2. தாவது ஒரு நாளைக்கு 3- 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள் 12 – 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகிறது.

3.ன்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீரே பயன்படுத்தப்படுகின்றது.

4. ம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டிபயாடிக்) இது, உடம்பு, உஷ்ணம், வாய் நாற்றம், குடல் புண் (அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடை மாவில் யாரும் வெந்தயத்தைச் சேர்ப்பதில்லை.

னவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நலம்!
– பொ. பாலாஜிகணேஷ், சிதம்பரம்

நம் வாழ்க்கை நம் கையில்
 •  ‘என் செய்கை யார் மனதையும் நோகடிக்காது. நான் செய்கின்ற செயல்கள் எனக்கு நன்மை தரவில்லை என்றாலும் அடுத்தவர்களுக்கு தீமை தராது’ என உறுதி செய்த பிறகே எந்த காரியத்தையும் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.
 • போட்டி, பொறாமை, வெறுப்பு இந்த மூன்றுக்கும் மனதில் இடம் தராதீர்கள்.
 • பொருள், பணம், உதவி என்று எதையும் யாரிடமும் (எத்தனை நெருக்கமானவராக இருந்தாலும் சரி) எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பு உறவுகளை சிதைத்து விடும் .
 • உறவினர்கள் நண்பர்கள் நம்மை சுற்றி இருப்பவர்களிடமிருக்கும் நல்ல விஷயங்களை பட்டியலிட்டு பாராட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 • கோபம் மனிதனுக்கு சத்ரு. தைரியம் இல்லாதவர், தாழ்வு மனப்பான்மை கொண்டவர், தவறுகள் செய்பவர், மனோதிடம் அற்றவர், இப்படிப்பட்டவர்கள் தங்கள் குறைகளை மறைத்து தங்களை காத்துக் கொள்ளவே கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.

 • மனம் விட்டு சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். இருபத்தி நான்கு மணி நேரத்தில் தினமும் 10 நிமிடமாவது உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களிடம்(கடவுளிடம்) ஜாலியாக பேசி வணங்குங்கள்.
 • உங்கள் மனசாட்சி சொல்படி கேட்டு உங்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள் மனசாட்சி போல உற்ற நண்பன் ஒருவருக்கு யாருமே இல்லை.
 • சோம்பலை அறவே ஒழியுங்கள் இன்றுமுதல் சோம்பலுக்கு இடம் இல்லை என மன உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன வேலைகளில் உங்களை ஈடுபடுத்தி சோம்பல் அணுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகாலையில் விழிக்கப் பழகுங்கள். அதிகாலையிலேயே குளித்து வேலையை துவங்குவதால் பகல் பொழுது ஓரிரு மணி அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். மனம் டென்ஷனில் இருந்து விடுபடும்.
 • தினமும் அரக்கப் பரக்க வேலை செய்யும் உங்களுக்காக உங்கள் உடல் மன ஆரோக்கியத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள். யோகா, தியானம் , இறைவழிபாடு போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் செய்யுங்கள்.
 • இந்தப் புத்தாண்டில் இருந்து ஒரு நாளுக்கு ஒருவருக்காவது ஏதாவது ஒரு வகையில் உங்கள் சக்திக்கு ஏற்றபடி தர்மம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • எல்லாவற்றிற்கும் மேலாக உங்களிடம் இருப்பதைச் சிறப்பாக செயல்படுத்துங்கள். இல்லாததை மறந்து விடுங்கள்.
  – ஆதிரை வேணுகோபால், சென்னை

 

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...