0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

படங்கள்: பிரபுராம்

“தலைவருக்கு சீட் கிடைக்கலியாம்!”

“அதனால தேர்தல்ல நிக்க முடியலியா?””

“இல்லய்யா! பஸ்சுல உட்கார சீட் கிடைக்கல!”
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

………………………………………………………………………….

“நிஜமாகவே போருக்கு போறேன்னு குரல் கொடுத்துக் கொண்டே கிளம்புகிறாரே மன்னர்!”

“இத்தனை நாளும் போருக்குப் போவதாக சொல்லிவிட்டு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்வாராம்.”
– எஸ். பவானி, திருச்சி

…………………………………………………………………………..

“இவ்வளவு வருஷம் அரசியலில் இருந்தும் தன் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்கிறாரே தலைவர்!”

“நல்லா கவனிங்க… தன் பெயரில் இல்லைன்னுதான் சொல்கிறார்.”
– எஸ். பவானி, திருச்சி

………………………………………………………………………….

“தலைவருக்கு பசி பொறுக்காதே, பின்பு எப்படி நாளைக்கு விரதம் இருக்கப் போவதாக சொல்கிறார்?”

“மெளன விரதம் இருக்க சாப்பிட தடையில்லையே…”
– எஸ். பவானி, திருச்சி

………………………………………………………………………….

“புழலைப் பார்த்தவன்னு எதிர்க்கட்சிக்காரன் சொல்றான். நான் திகாரையே பார்த்தவன் என்று அவன்கிட்ட சொல்லுங்கய்யா…”

“எதற்கெல்லாம் போட்டி போடுவது என்ற விவஸ்தை இல்லையா தலைவரே!”
– எஸ். பவானி, திருச்சி


………………………………………………………………………….

“கீழ்ப்பாக்கம் போகணும்னா எந்த ஆட்டோகாரனும் வர மாட்டேன்கிறானே!”

“முதலில் உங்க கிழிஞ்ச சட்டையை மாத்திட்டு கேளுங்க சார்.
– எஸ். பவானி, திருச்சி

………………………………………………………………………….

“நான் போரில் ஜெயித்த மாதிரி பாடச் சொன்னால் புலவர் முடியாது என்கிறார் அமைச்சரே…”

“புலவர் என்றால் கொஞ்சம் பொய் பேசுவாங்கதான். அதற்காக அண்டப்புளுகு, ஆகாச புளுகெல்லாம் சொல்ல மாட்டாங்க மன்னா.”
– எஸ். பவானி, திருச்சி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...