0,00 INR

No products in the cart.

நம்மாழ்வார்!

ரேவதி பாலு

வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாகத் தோன்றினார். இவர் வாழ்ந்த காலம் 9ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனர் என்பவரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

குழந்தைகள் பிறந்தவுடன் உச்சந்தலையில் இந்த பூமியிலிருந்து வரும் ‘சடம்’ என்னும் காற்று பட்டவுடன் முன் ஜென்ம நினைவுகள், தொடர்புகள் அனைத்தும் மறந்து போய்விடுமாம்.  இந்தக் காற்று முதன் முதலில் உச்சந்தலையைத் தீண்டுவதாலேயே பிறந்தவுடனேயே அந்தக் குழந்தை மாயையில் சிக்கிக்கொள்ளுமாம். அதனால்தான் பச்சிளங்குழந்தை அழுவதாகச் சொல்வார்கள். ஆனால், நம்மாழ்வாரின் பிறப்பே ஒரு மகா அதிசயமாகக் கருதப்படுகிறது. இவர் அழவும் இல்லை. பால் குடிக்கவும் இல்லை. இந்த விநோதத்தைப் பார்த்து அனைவரும் திகைத்துப் போனார்கள்.  பிறந்த அந்த கணத்திலேயே இவர் இக்காற்றை மிகுந்த கோபத்துடனும் மிக்க வலிமையுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதால் ‘சடகோபன்’ என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். மற்றக் குழந்தைகளிலிருந்து மாறுபட்டு இருந்ததால் ‘மாறன்’ என்னும் பெயராலும் அழைக்கப்பட்டார். திருவரங்கனே தன் அன்பன் சடகோபனை ‘நம்மாழ்வார்’ என்றழைக்க அவருக்கு அப்பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

ஒரு குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாள் இருக்கும்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குப் பசிக்காதா? ஆகாரம் இல்லாமல் உடல் மெலியாதா? ஆனால் குழந்தை மாறனுக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை.  அவர் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருந்தார்.  அழவில்லை.  பேசவில்லை. பால் குடிக்கவில்லை. இயற்கை உந்துதல்கள் ஏதுமில்லை. அப்படியே வளர்ந்தார்.  ஞானத்தில் ஒளிர்ந்தார்.

பெற்றோர் அவரைத் திருக்குருகூர் கோயில் வாசலில் விட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.  கோயிலுக்கு எதிரே இருந்த ஒரு புளியமரத்திற்கு தவழ்ந்து சென்றது அந்தக்  குழந்தை. அந்த மரத்தின் அடியில் உள்ள பொந்தில் 16 ஆண்டுகள் தவம் இருக்கிறது!

இப்பேர்ப்பட்ட மாறனின் ஞான ஒளியை அயோத்தியில் ஒருவர் காண்கிறார். அது எங்கிருந்து வருகிறது என்று தேடிக்கொண்டு அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வந்தார். அவர்தான் மதுரகவி ஆழ்வார்.

அங்கே புளியமரத்தடியில் மாறன் தவத்திலிருந்தார். அவர் மேனியிலிருந்து எழும் ஞான ஒளியைப் பார்த்து மதுரகவி ஆழ்வார் மெய்சிலிர்த்துப் போனார். 16 ஆண்டுகளாக தவத்தில் இருந்த நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு சிறு கல்லை விட்டெறிந்து எழுப்பி கண் விழிக்கச் செய்தார். பிறகு அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்
               எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”

துரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைத்தான்.  அது அறிவற்ற பொருளல்லவா?  இந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர் பிறக்கிறது.  அதுதான் அந்த உடலை இயக்குகிறது. உடம்பில் உயிர் சென்று சேருகிறது என்றால் அது பிறக்கிறது என்று அர்த்தம். அப்போது அது எதை அனுபவித்துக் கொண்டு எங்கே இருக்கும் என்று மதுரகவி ஆழ்வார் கேட்டார்.

16 ஆண்டுகள் மௌனமாக தவம் புரிந்துகொண்டிருந்த மாறன் முதன் முறையாக வாய் திறந்து அவருக்கு பதில் சொல்கிறார்.

“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.”

அத்தைத் தின்று என்று எதைச் சொல்கிறார்?  ஒருவன் பிறக்கிறான் என்றால் அதன் காரணம் அவன் செய்த வினை.  அந்த கர்ம வினைகள் தீரும்வரை அவன் அந்த உடலிலேயே கிடக்க வேண்டியதுதான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் மாறனின் அறிவையும், மேதாவிலாசத்தையும் பார்த்து வியந்து போன மதுரகவி ஆழ்வார் அவரையே தன்னுடைய ஆசிரியராக ஏற்றுக்கொண்டார்.

திருமாலை பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் பாடியிருந்தாலும் அவர்களுள் நம்மாழ்வாரின் பாடல்கள் தனித்துவமானவை.  நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் திருமாலின் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர் இவர்.

இடைப்பட்ட 600 ஆண்டு காலத்தில் பல ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்பிரபந்தங்கள் வழக்கிலில்லாமல் போனதாகவும், திரு நாதமுனிகள் தம் தவ முயற்சியால் நம்மாழ்வாரை யோகநிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களுக்குப் புத்துயிர் அளித்துப் பெருமாள் கோயில்களில் இசைக்க வைத்ததாகவும் கூறுவர்.

இவர் எழுதிய நான்கு ஒப்பற்ற நூல்கள்; திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. இந்த நூல்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையானவை என்பது பெரியோர்களின் வாக்கு.

கிருஷ்ணபக்தியிலேயே மூழ்கிப்போன நம்மாழ்வார், தான் உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கிருஷ்ணனே என்று கூறுவாராம்.

வைணவத்தில் நம்மாழ்வாரை ஆன்மாவாகவும் மற்ற ஆழ்வார்களை உடலாகவும் கருதுவதுண்டு. இவர் 37 திருக்கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் கோயில்களில் சாதிக்கப்படும் ‘சடாரியை’ இவரின் திருவருளாக எண்ணி பக்தர்கள் போற்றுகிறார்கள். இவர் ஆழ்வார் திருநகரியில் வைகுண்ட ஏகதசியன்று முக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

பண்டிகை சமையல்!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி ஆடிக் கூழ்: தேவை: பச்சரிசி – 100 கிராம், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு – 400 கிராம், வெல்லம் – 500 கிராம், நெய்...

ஆலமரம் தரும் அற்புத மருந்துகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... - இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் ஆலமரம் பெரிதும் மருத்துவப் பயனுடைய மரம். தனித்தும் மருந்துகளோடு இணைந்தும் செயல்படும். இலை, பூ, பால், பழம், மர பட்டை, விழுது, வேர் என முழு மரமும்...

கவிதை!

0
-ச்ஜேஸூ, ஜெர்மனி செயற்கை உரம்! முடிச்சுக் கயிற்றின் முத்த உறவு விடுபட உற்சாகத் துள்ளலுடன் தாய்மடி மோதி பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி! இடையிடையே தாயின் நாவருடல் இதமான சுகம் தர மீண்டும் மடி கிறக்கம் தேடியோடுகிறது கன்று! சற்று நேரத்தில்- இளைத்த வயிறு ஊதிய பலூனாய் பெருக்கிறது யூரியா தின்று கொழுத்த பாலக்கீரை போலவே!

ஜோக்ஸ்!

0
படங்கள்: பிள்ளை   “கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு வந்த தலைவர்கிட்ட குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!” “என்னாச்சு?”” “‘நோபால்’ன்னு பேர் வச்சிட்டார்.” - சி.ஆர். ஹரிஹரன், கேரளா ****************** “நான் சுயசரிதை எழுதலாம்னு இருக்கேன்யா!” “வேண்டாம் தலைவரே... போலீஸ் வீடு தேடி...

சப்த கன்னியர் வழிபாடும் பலன்களும்!

2
 - அரிமா சிவ. எம்.கோ. வாழப்பாடி  ஆடி சிறப்பு. ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு அதில் அம்மனின் அருள் வடிவங்களாக சக்தியின் அம்சங்களாக விளங்கும் சப்த மாதாக்கள் வழிபாடும் சிறந்த ஒன்றாகும். இந்த ஆடி மாதத்தில்...