0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ந்த இரண்டு மாத பெண் சிசுவுக்கு ‘குஷி’ன்னு பெயர் வைக்கலாம் கண்மணீஸ்… பெயரிலாவது ஆனந்தம் இருக்கட்டுமே! தூக்க மருந்து கலந்த பாலைக் குடிச்சுட்டு, சுளீர் வெயில் முகத்தில் அறைஞ்சாலும், வாய் பிளந்து, ஆடாமல் அசையாமல் குஷி தூங்குகிறாள். வாடகைக்கு வாங்கி வந்த அதைக் காட்டிக் காட்டி பிச்சை எடுக்கும் பெண், குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது சம்பாதித்துக்கொண்டு போவாள்!

இப்ப… குஷிக்கு மூணு அல்லது நாலு வயசு! நேரடியாகவே பிச்சை எடுக்க அனுப்பி விடுவார்கள். மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இதற்கென பெரிய நெட்வர்க்கே இயங்குகிறதாம்!

குஷிக்கு இப்ப என்ன வயசு ஆறு? எட்டு?… அப்ப, பிக்பாக்கெட் அடிக்க, கடைகளில் திருட, அல்லது கடைத்தெருக்களில் சாட்டையால் அடித்துக்கொண்டு, கம்பி மேல் நடக்க… எப்படியோ, அந்தப் பெண் பெற்றோருக்கோ, வளர்ப்பவருக்கோ வருமானம் ஈட்டித் தரணும். இல்லைன்னா மிரட்டி அடிப்பார்கள்.

குஷி வளர்ந்து, பத்து, பனிரெண்டு வயதாகும்போது, ஆந்திராவில் உள்ள செங்கல் சூளைக்கோ, கர்நாடகத்தில் உள்ள பால் பண்ணைக்கோ மொத்தமாக விலைப்பேசி கொத்தடிமையாக அனுப்பப்படுவாள். அங்கே அவருக்கு நடக்கவிருக்கும் சித்ரவதைக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் யாருக்கும் பொறுப்பும் கிடையாது. சாட்சியும் கிடையாது, கடவுளைத் தவிர!

குஷி இப்போது டீனேஜ் பொண்ணு… வயசு பதினாலு! தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு லேபிள் ஒட்டவோ, பாத்திரக் கடையில் பேக்கிங் வேலைக்கோ அனுப்பப்படுவாள். அவளே கொஞ்சம் சூட்டிகையாக இருந்தால், சினிமா உலகில் துணை நடிகையாகவோ, கும்பலில் ஆடும் டான்ஸராகவோ ஆகலாம்! அவளது சம்பாத்யத்தில் வீடே உட்கார்ந்து சாப்பிடும்.

குஷிக்குத் திருமண வயதாகிவிட்டது. உறவிலேயே அதிக வயசுக்காரருக்கோ, ஊதாரிக்கோ, குடிகாரனுக்கோ கட்டிக் கொடுத்து… நரகக் குழியில் தள்ளுவார்கள். அவள் மறுபடியும் வேலைக்குப் போவாள். தாயாராக்கப்படுவாள். குழந்தைகளுக்காகவே சாகாமல் இருப்பாள்.

குஷிக்கு 50 வயதாகிவிட்டது. இப்போது அவளுக்கு அழகு இல்லை; ஆனால் ஆரோக்கியம் மிச்சமிருக்கிறதே. ‘சரக்’ என்று ஒரு பக்க கிட்னியையோ, ஒரு துண்டு கல்லீரலையோ, வெட்டி காசாக்கிக் கொள்ள வேண்டியதுதான்! அவளது குடும்பப் பின்னணி அறிந்து, வலை வீச ஆளா இல்லை?

இப்போது குஷிக்கு உடல் நலமும் சீர் கெட்டுவிட்டது. பூ கட்டி வியாபாரம் செய்கிறாள். நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறாள். அவள் சம்பாதிக்கும் முந்நூறு, நானூறைக்கூட அடாவடியாகப் பிடுங்கிச் செல்ல, குடும்பத்து உறுப்பினர்கள் உள்ளவரை, குஷி ஓடித்தானே ஆகணும்!

அதற்குப் பின் குஷி… என்ன ஆனால் என்ன? எப்படிச் செத்தால் என்ன?

இரண்டு மாத கைக்குழந்தையிலிருந்து, ஆயுள் உள்ளவரை அவளை உறிஞ்சிக் குடிக்க எத்தனை எத்தனை ஒட்டுண்ணிகள்!

டடா! நம்ப ‘குஷி’க்கு 16 வயது ஆகும்போது என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே! நடுவுல கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு நட்புகளே…

பூப்பெய்திய இளம்பெண் அல்லவா? குஷியை எப்படி பயன் படுத்திக்கணும்னு இந்தச் சமூகத்துக்குத் தெரியாதா என்ன?

டீக்கடை மாதிரி, தெருவுக்கு நாலு வந்துவிட்டதே, நவீனக் குழந்தையின்மை சிகிச்சை மையம். அதற்கெல்லாம் அவளது அம்மாவே ஒரு ரவுண்டு அழைத்துச் செல்வாள். அவர்களும் அந்த ஏழைப் பெண்ணிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள கருமுட்டைகளை அடிக்கடி எடுத்துக்கொண்டு, சில ஆயிரம் கொடுத்து அனுப்புவார்கள். அதுவும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்…

இதனால் ‘குஷி’க்கு கருப்பை வீக்க நோய் ஏற்படலாம். புற்று நோய் வரலாம். ஹார்மோன் ஊசிகளின் அளவு மீறினால், உயிருக்கே ஆபத்து ஆகலாம்… யாருக்கு கவலை? எப்படியோ, புரோக்கர்களும், மருத்துவர்களும் பிழைத்தால் போதுமானது!

“பெண் என்று வந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி” என்று பாடினார் பாரதியார். ‘பீழை’ என்றால் ‘pain’ துன்பம்! அந்தத் துன்பம் எப்படியிருக்கும்? அதுவும் ஏழைப் பெண்களின் வலியும் வேதனையும் எப்படியிருக்கும்?

கருமுட்டை தானம் பெறுவதற்காக, பெற்றோராலும், கருத்தரிப்பு மையங்களாலும் மிரட்டி, சுரண்டப்பட்ட 18 வயது நிரம்பாத ஈரோடு சிறுமி பல காலமாகத் தொடர்ந்து அனுபவித்தாளே, அந்தத் துன்பம் போல இருக்குமோ?

3 COMMENTS

  1. ஒரு வார்த்தை படித்தேன். குஷியின் வாழ்க்கையை படிக்கும் போது மனம் பதைபதைக்கிறது. பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகளை பார்க்க முடியவில்லை அதுவும் ஏழைப் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டியதில்லை.
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

  2. நீங்கள் எவ்வளவு துயரத்தோடு எழுதி இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது மேடம். இறைவா…இதற்கும் ஒரு முடிவை உன்னாலன்றி வேறு எவரால் செய்ய முடியும்?
    கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி 620017

  3. படிக்கும் போதே பதற்றமாக இருக்கிறதே.பயத்தில் உதறல் எடுக்கிறது.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

ரொம்ப நாளாச்சே கதை சொல்லி! லெட் மி ஸே எ குட்டி ஸ்டோரி. ஜப்பான் நாட்டில் நடந்த கதை இது! ஓர் இளவரசனுக்கு முடி சூட்டும் விழா நடக்கப் போகிறது. பட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடி,...

ஒரு வார்த்தை!

ஸ்ரீமதி, சரளா, ரம்யா, சிவகாமி, யோகலட்சுமி என்ன அழகான பெயர்கள்! இளவயசு பெண்கள்? என்ன ஆச்சு, இந்தச் சிறுமிகளுக்கு... தமிழக மக்கள் விக்கித்தும் துக்கித்தும் போயிருக்கின்றனர்! இளமை கொலுவிருக்கும் இளம் குருத்துக்கள் தற்கொலை செய்து...

பண்டிகை சமையல்!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி ஆடிக் கூழ்: தேவை: பச்சரிசி – 100 கிராம், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு – 400 கிராம், வெல்லம் – 500 கிராம், நெய்...

நம்மாழ்வார்!

-ரேவதி பாலு வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாகத் தோன்றினார். இவர் வாழ்ந்த காலம்...

ஆலமரம் தரும் அற்புத மருந்துகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... - இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் ஆலமரம் பெரிதும் மருத்துவப் பயனுடைய மரம். தனித்தும் மருந்துகளோடு இணைந்தும் செயல்படும். இலை, பூ, பால், பழம், மர பட்டை, விழுது, வேர் என முழு மரமும்...