0,00 INR

No products in the cart.

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…
பகுதி -10

ங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்… 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் “வேட்டைக்காரன் “படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதி டிஎம்எஸ் ஐயா அவர்கள் பாடிய “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்” என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய எழுச்சிமிகு பாடல்தான். சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடலிது.  மனங்களில் வெகு அழுத்தமாக பதிந்து இன்றளவும் அழியா வரம் பெற்ற பாடலிது. பகுத்தறிவு புகட்டும் நல்லபாடலிது.  தங்கத் தலைவரின் தன்னிகரற்ற பாடலிது.

கே வி மகாதேவன் அவர்கள் முற்றிலும் வேறு பாணியில் இயற்றிய பாடலிது. தமிழக மக்களின் மனதை வேட்டையாடிய மக்கள் திலகம்  நடித்த ஒரே கௌபாய் திரைப்படம் இது.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்..

 உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

சரணத்தில் திருக்குறள் கருத்துக்களை வெகு அருமையாக எளிமையான வரிகளில் சுலபமாக கவிஞர் கையாளும் விதம் வியக்கவைக்கிறது.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்” தன் உடலிலிருந்து ஒரு முடியை இழக்க நேரிட்டாலும் கவரிமான் உயிரை விட்டுவிடும் அது போல மென்மையான குணம் படைத்த மனிதர்கள் தன்மானத்துக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டால் உயிரைவிடக் கூடத் தயங்க மாட்டார்கள்.

தொடரும் சரணத்தில் முதல் வரியாக இந்த குறளின் கருத்தை எளிமையாக பாமரரும் உணரும் வகையில் ஒரே வரியில் கொடுத்திருப்பார் கவியரசர்.

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா“?

என்ற கவிஞர் அடுத்த வரியை பல்லவியோடு தொடர்பு படுத்தி இருப்பார்.

 “தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?”

எவ்வளவு அழகாக கவியரசர் தீர்க்கதரிசனத்துடன் எழுதி இருக்கிறார் பாருங்கள்.

அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவரானவருக்கு நம் தலைவரே உதாரணம்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?

பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?”

இந்த உலகத்தில் நேராக நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர் தான் இதைத்தான் திருவள்ளுவர்
“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றார்.

நம் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள் தெய்வத்திடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காதே? உனக்கு எது வேண்டும்  என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று அதுபோல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவையறிந்து வாரிக் கொடுத்தவர்தான் தலைவரும். (தெய்வத்தின் பிள்ளை அவர்)

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்

ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்

சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக் குறையாத மன்னவன் என்றும் மற்றவர் போற்றிப் புகழும் அளவுக்கு உயர்ந்திட வேண்டும். மேலும் தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பயன்பட்டு அதன்மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.. வார்த்தைகளில் எவ்வளவு ஜாலம் காட்டுகிறார் கவியரசர்.

பாடலின் இடையில் வரும்” மா”…ஹூ.. ஹா” என்ற ஏ. எல். ராகவன் அவர்களின் தாளக்கட்டு(ஹம்மிங்) அருமையாக  இருக்கும் இந்தப் பாடலின் வெற்றியில் டி.எம்.எஸ் அவர்களுடன் இவருக்கும் பெருமை உண்டு. (நாயகன் பாடுவது என்று குதிரையின் மேலே ஏறிவிட்டால் அப்பாடல் எப்போதுமே மிகவும் வேகமெடுக்கும். ஆனால் இந்தப் பாடலில் நாயகியின் மிதமான நடைக்கேற்றவாறு சாதாரணமான முறையில் அருமையாகப் பாடியிருப்பார் டிஎம்எஸ்… எம்ஜிஆர் குரலில் அப்படியே டி.எம்.எஸ் அய்யா பொருந்தி இருப்பார்.

இப்படி அன்றும் இன்றும் என்றும் உயர்ந்த கருத்துக்களின் புகலிடமாக வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் உன்னத பாடலான இந்த பாடலை கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

2 COMMENTS

  1. 1960 _70 ஏன் 80 வரை வந்த திரைப்பட பாடல்களில் மனதை பறிகொடுக்காதவர் யாரும் இல்லை.கண்ணதாசனும் வாலியும் போட்டு எழுதும் பாடல்கள் ரசிகர்களுக்காக விருந்து

  2. நல்ல ஒரு வீடியோக் காட்சி பார்த்ததுபோல் மன நிறைவு. அந்த அளவிற்கு பாடலின் விளக்கம் அரு
    மையாக கொடுக்கப்பட்டிருக்கு. ஆனால் ஒரு விஷயம் பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா என்கிற ‘ஸ்டான்ஸா ‘
    படத்தில் இல்லை என்கிற குறை ! ஆயினும் மொத்
    தத்தில் சாகாவரம் பெற்ற சூப்பர் பாடல் !

ஆதிரை வேணுகோபால்
Mrs Athirai Venugopal A successful homemaker with a passion for cooking. Athirai’s cooking recipes, supplementary cookbooks and articles are being published in leading Tamil women segment magazines. She has authored and published a cookbook titled ‘Healthy Children’s Recipes’. She has also hosted cookery shows in web channels. Athirai has her own you tube channel named ’Athirai’s Fusion Kitchen’ where she presents interesting and innovative cooking recipes & tips.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...