0,00 INR

No products in the cart.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் – 4

 

-சுசீலா மாணிக்கம்

 

திருக்குறளின் நான்காம் அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 

பொன்றுங்கால் பொன்றாத் துணை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்து நிற்கும்.

இந்த இரண்டடிக்குறள்  என் மன விலாசத்தில் விரித்தது சோழ சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தை சரித்திரத்தில் பதித்த அருள்மொழிவர்மரை.

பொன்னியின் செல்வன் புதினத்தில் இரண்டாம் பாகத்தில் இலங்கை மண்ணிலேதான் அருள்மொழிவர்மரை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருப்பார் கல்கி அவர்கள்.

“… இவரது இடைவிடா வெற்றியின் ரகசியம் இது மட்டுந்தானா? சேனா வீரர்களுடன் எவ்வளவு பவ்யமாக இவர் பழகுகிறார்? எப்படி அவர்களை தம் அன்புக்கு வசப்படுத்தி வைத்திருக்கிறார் ! 

போர் வீரர்கள்  மட்டுந்தானா?தாம் வெற்றி கொண்ட நாட்டின் மக்களையும் எப்படி வசீகரப்படுத்தி வைத்திருக்கிறார்? சமீபத்தில் மாபெரும் போர் நடந்த நாடு என்று இதைச் சொல்ல முடியுமா? சாலைகளில் மக்கள் எவ்வளவு உல்லாசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! இரு பக்கங்களிலுமுள்ள கிராமங்களில் ஜனங்கள் எப்படி நிர்பயமாகவும் கவலையின்றியும் தத்தம் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? மக்களின் முகங்களில் பீதியின் அறிகுறியோ துயரத்தின் சின்னமோ சிறிதும் காணப்படவில்லையே? கலகலவென்று பெண்களும் குழந்தைகளும் சிரிக்கும் சப்தம் கூட அடிக்கடி காதில் விழுகிறதே!இது என்ன விந்தை !இவர் எத்தகைய விந்தையான மனிதர்… இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தன”.

பொன்னியின் செல்வனின்  அழகிய தோற்றமும், அபூர்வ குணாதிச யங்களும்  – இலங்கை நாட்டிலே அவருக்கும் மக்களுக்கும் இடையேயான அன்பு பிணைப்பும்- சிற்பங்களையும் சித்திரங்களையும் காணும் போதெல்லாம் உற்சாகம் ததும்பும் அவரின் கலாரசிக இதயமும் -காதலும் காதலை மீறிய ஆன்மீக தேடலுமாய் புதினம் முழுவதும் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் இளவரசர் அருள்மொழிவர்மர். மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளையும் கண்முன்னே காட்டும் புதிய வரிகள் தொடர்கின்றன…

அருள்மொழியும் குந்தவையும்

அவருடைய தோற்றத்தின் வனப்பை கண்டு நாட்டாரும் நகரத்தாரும் சுந்தர சோழர்என்று அவரை அழைத்து வந்தார்கள் .அதுவே அனைவரும் வழங்கும் பெயராயிற்று. அத்தகையோருக்கு பிறந்த குழந்தைகள் எல்லோருமே அழகில் மிக்கவர்கள்தான் .ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சிவிட்டார். அவர் குழந்தையாக இருந்தபோது சோழ வம்சத்து ராணிமார்கள் அவரை முத்தமிட்டு முத்தமிட்டுக் கன்னம் கனியச் செய்துவிடுவார்கள். எல்லோரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகிய குந்தவை.

தம்பியின் முகத்தைத்தமக்கை அடிக்கடி உற்று நோக்குவாள். விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல் அவர் தூங்கும்போது கூட நாழிகைக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பாள்.” இந்த பிள்ளையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது! அதை வெளிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது என் பொறுப்பு !” என்று எண்ணமிடுவாள். தம்பி தூங்கும் போது அவனுடைய உள்ளங்கைகளை அடிக்கடி எடுத்துப் பார்ப்பாள். அந்த கைகளில் உள்ள ரேகைகள் சங்கு சக்கர வடிவமாக அவளுக்குத் தோன்றும் .”ஆகா!உலகத்தை ஒரு குடை நிழலில் புரிந்திடப் பிறந்தவன் அல்லவோ இவன்!” என்று சிந்தனை செய்வாள்.”

இளவரசர் அருள்மொழிவர்மர், வந்தியத்தேவன், திருமலை

உலகத்திலேயே சிற்பக்கலையின் அற்புதம் பூரணமாக விளங்கும் வடிவங்கள் இரண்டுதான்.ஒன்று நடராஜர்; இன்னொன்று புத்தர் என்றார்.

ஆனால் நடராஜ வடிவங்களை இம்மாதிரி பிரம்மாண்ட வடிவங்களாக நம் நாட்டில் செய்வதில்லையே?”

இலங்கையில் முற்காலத்தில் இருந்த மன்னர்களில் சிலர் மகா புருஷர்கள் . அவர்கள் ஆண்ட ராஜ்யம் சிறியது. ஆனால் அவர்களுடைய இருதயம் பெரியது; அவர்களுடைய பக்தி மிகப்பெரியது; புத்தபகவானிடம் அவர்களுடைய பக்தியை இப்படிப் பெரிய வடிவங்களை அமைத்துக் காட்டினார்கள். புத்த சமயத்தில் அவர்களுடைய பக்தியை பெரிய ஸ்தூபங்களை அமைத்துக் காட்டினார்கள் .இந்த நாட்டில் உள்ள புத்தர் சிலைகளையும் விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் பார்த்துவிட்டு நம் சோழ நாட்டில் உள்ள சின்னஞ்சிறு சிவன் கோயில்களை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது!” என்றார் பொன்னியின் செல்வர்.

பொன்னியின் செல்வரும் வானதியும்

வானதி !இப்படியெல்லாம் உன் நினைவு என்னை ஆட்கொண்டிருப்பதால், உன்னை நேருக்கு நேர் பார்க்கும் போது  என் முகம் சுருங்குகிறது; புருவங்கள் நெரிகின்றன. என் வாழ்க்கையில் நான் சாதனை செய்ய விரும்பும் காரியங்களுக்கெல்லாம் நீ தடங்கலாகி விடுவாயோ என்று அஞ்சுகிறேன்…”

சுவாமி! அந்த பயம் தங்களுக்கு வேண்டாம்! தங்கள் காரியங்களுக்கு நான் தடையாக இருக்க மாட்டேன்…”

நீ தடையாக இருக்கமாட்டாய்; யாருமே தடையாக இருக்க முடியாது! மாரிக்காலத்தில் கீழ் திசையிலிருந்து புயல் கொண்டுவரும் கருமேகத் திரளை நீ பார்த்திருக்கிறாயா, வானதி! அந்த மேகத்திரளில் மழை நீர் நிறைந்திருக்கிறது. மின்னல்களும் இடிகளும் அம்மேகத்தில் மறைந்திருக்கின்றன. சண்டமாருதம் அந்த மழை நிறைந்த கொண்டலைத் தள்ளிக் கொண்டு வருகிறது. அதை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? அந்த மேகங்களின் நிலையில் நான் இருக்கிறேன். வானதி! என் உடம்பில் எப்போதும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டிருக்கிறது. என் உள்ளத்தில் ஏதோ ஒரு வேகம் இருந்து கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத மின்னல்கள் மின்னுகின்றன; காதில் கேட்காத இடி முழக்கங்கள் ஒலிக்கின்றன. புயல்களும் சூறைக் காற்றுகளும் சண்டமாருதங்களும் என்னை அழைக்கின்றன. ஏழு கடல்களிலும் மலை மலையாக அலைகள் கிளம்பி என்னை வரவேற்கின்றன. ஆயிரமாயிரம் சங்கங்களின் நாதமும், முரசுகளின் முழக்கமும், போர் யானைகளின் பிளிறல்களும் என்னைக் கவர்ந்து இழுக்கின்றன.”

இப்படி வரிகள் தோறும்  தன் வீரத்தாலும் அழகாலும் பண்பாலும் நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்ட இப்புதினக் கதாநாயகன் அருள் மொழிவர்மர் என்கிற முதலாம் இராசராச சோழன் அன்றறிவாம் என்னாது அறம் செய்தார்.

அன்று அவர் செய்த அறம் இன்றும் தமிழகத்தின் தஞ்சை மண்ணில் தமிழர் சரித்திரம் பேசி தலைநிமிர்ந்து நிற்கிறதே தஞ்சை பெரிய கோவிலாய்…

இன்றைய தொழில் நுட்பத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் சவாலாக தமிழன் சொத்தாய் பதிந்து கிடக்கிறதே அந்த தமிழன்பன் செய்வித்த மாபெரும் கற்காவியம். மாபெரும் மனித உழைப்பும் கலைஞர்களின் சிந்தனையாற்றலும் பின்னிப்பிணைந்து பொன் ஆபரணங்களில் செதுக்கப்படும் அழகிய வேலைப்பாடுகள் அப்படியே கருங்கல்லில்…

செந்தமிழ், பைந்தமிழ் ,பசுந்தமிழ், முத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், தெய்வத்தமிழ் என பலவாறாக தமிழமுதை திகட்டத் திகட்ட பருகி விட்டதால்தான் நம் கதாநாயகன் தாம் செய்துவித்த தஞ்சை பெரிய கோவிலிலும் தமிழன்னையையும் கோலோச்ச செய்துள்ளான்.

இக்கோவிலில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழ் உயிர் எழுத்துக்கள் 12 . சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி. தமிழ் மெய்யெழுத்துக்கள் 18 .கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் 216 . சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையேயான இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247.”

இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாய் கூறிவிடப் போகிறேன்.

“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை ”

என்றே நிறைவு செய்து கொள்கிறேன்.

1 COMMENT

  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதுபோலவே என்ன செய்துவிட போகிறேன் என்று கேட்டாலும் துண்டாக எழுத்து அமைந்தது சிறப்பே.

    அன்புடன்
    சரண்யா, ஸ்ரீரங்கம் ( காட்டூர்)

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...