0,00 INR

No products in the cart.

சிவராத்திரி பிரசாதங்கள்!

– ரேவதி பாலு, சென்னை

ஹா சிவராத்திரி விரத நாள் என்பதால் அநேகம் பேர் முழு பட்டினி இருந்து, பூஜை செய்து, இரவு கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். சிலர் பால், பழம் மட்டும் உண்டு விரதம் இருப்பார்கள். முழு பட்டினி இருக்க முடியாதவர்கள் சிவனுக்கு பூஜை செய்யும்போது சில பிரசாதங்களை நைவேத்தியம் செய்து அதையே ஆகாரமாக உட்கொள்வார்கள். அவை சிவனுக்குகந்த பிரசாதங்களாகவும் இருக்க வேண்டும், விரத நாட்களில் சாப்பிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில பிரசாதங்கள்:

பயத்தம் பருப்பு பாயசம்

இதை பயத்தங்கஞ்சி என்றும் சொல்வார்கள்.
தேவையானவை:

தேவையானவை: பயத்தம் பருப்பு – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
பொடி செய்த ஏலக்காய் – ஒரு ஸ்பூன்
காய்ச்சிய பால் – அரை கப்
நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை: முதலில் வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நன்றாகக் களைந்து விட்டு குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு கல் மண் போக வடிகட்ட வேண்டும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் சுத்தமான வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு சிறிது கெட்டியானதும், வெந்த பயத்தம்பருப்பைப் போட்டு நன்றாக கலக்க வேண்டும். இறக்கி வைத்து பாலை ஊற்றி பொடி செய்த ஏலக்காய் போட்டால் பாயசம் ரெடி. அந்த காலத்திலிருந்தே குடும்பத்தில் பெரியவர்கள் விரத நாள் அன்று சாப்பிடும் முக்கிய உணவாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பயறில் புரத சத்தும், வெல்லத்தில் இரும்பு சத்தும் இருப்பதால் விரதம் இருப்பவர்கள் சோர்வடையாமல் நல்ல தெம்பை கொடுக்கக் கூடிய சிறந்த உணவு இது.

வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு

தேவையானவை: சர்க்கரை வள்ளிக்கிழங்கு – அரை கிலோ

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி ரெண்டு மூன்றாக வெட்டி சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்ததும் தோலை நீக்கி விட்டு, துண்டு துண்டாக வெட்டி சிவனுக்கு பிரசாதமாகப் படைப்பார்கள். கார்போஹைட்ரேட் சத்துள்ள இதுவும் விரதம் இருப்பவர்களுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடியது.

அரிசிமாவு வெல்லக் கொழுக்கட்டை

தேவையானவை:  அரிசி மாவு – ஒரு கப்
வெல்லம் – அரை கப். பொடி செய்த ஏலக்காய். அரை ஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தைத் தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றி சூடாக்கி கல் மண் போக வடிகட்ட வேண்டும். இந்த வெல்லக் கரைசலை திரும்பவும் அடுப்பில் ஏற்றி நன்றாக கொதித்ததும் கீழே இறக்கி வைத்து அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு நன்றாகக் கரண்டியால் கிளறி மூடி வைத்து விட வேண்டும். ஆறியதும் ஏலப்பொடியைப் போட்டு கையால் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துப் பிசைந்து நீள வாட்டில் உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் உகந்த இந்த பிரசாதம் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் ஏற்றது.

பஞ்சாமிர்தம்

தேவையானவை: வாழைப்பழம் – 1
பேரீச்சம்பழம் – 4
கல்கண்டு – சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்

செய்முறை: பஞ்சாமிர்தம் என்றாலே ஐந்து பொருட்களைக் கொண்டு செய்யப் படுவது. கனிந்த வாழைப்பழத்தை வில்லைகளாக வெட்டி, பேரிச்சம்பழத்தை கொட்டைகளை நீக்கி துண்டு துண்டாக வெட்டி, இவற்றுடன் கல்கண்டு நாட்டுச் சர்க்கரை, தேன் ஊற்றி இவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து வைத்தால் பஞ்சாமிர்தம் ரெடி. சிவன் கோவிலில் சிவராத்திரி அன்று அபிஷேகத்திற்கே உபயோகிக்கும் பஞ்சாமிர்தம் நம் வீட்டிலும் சிவனுக்கு நைவேத்யம் செய்து ஆகாரமாகவும் உண்ணலாம். நல்ல சக்தியைக் கொடுக்கக் கூடியது.

 

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...