0,00 INR

No products in the cart.

பறவைகளின் எண்ணிக்கை குறைவது ஏன்?

-மஞ்சுளா சுவாமிநாதன்

“மார்ச்-4, சர்வதேச வன விலங்குகள் தினம்” 

“அண்ணே! நம்ம இந்த வன விலங்குகள் தினம் கொண்டாடுறோமே,  இது அந்த வன விலங்குகளுக்குத் தெரியுமா?”

“டேய் சும்மா இருடா! எனக்கு தினமும் ஷோ பண்ண ஏதாவது content வேணும்ல…  நம்ம வன விலங்குகள  தொந்தரவு செய்யாம  இருந்தா, அதுவே நாம அதுகளுக்கு செய்யற  பெரிய நன்மை.”

 ————-

வானொலியில் இந்த நகைச்சுவையை(?) கேட்டு எனக்கு சிரிப்பு வரவில்லை. சிந்திக்கத்தான் தூண்டியது. வன விலங்குகளைக் காட்டிலும், நான் பார்த்து வளர்ந்த குருவிகளும்,  பிற பறவைகளும் தற்போது சென்னையில் காண  முடியவில்லையே? என்ற எண்ணம்தான் தோன்றியது.  இது குறித்து என் நண்பர் உமேஷ் மணியை தொடர்பு கொண்டேன்.   அவர் ‘Madras Naturalist Society’ என்ற ஓர் லாப நோக்கற்ற  அமைப்பைச்  சேர்ந்தவர். பறவைகள் கவனிப்பவர், இயற்கை ஆர்வலர்,  வன விலங்குகள்,  குறிப்பாக பறவைகளை அதிகம் படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்.

உமேஷ் கூறியதைப் பார்ப்போம்
“மனுஷங்க காட்டை அழிச்சிட்டு இருக்கோம், அதனால வன விலங்குகள் அழியத்தான் செய்யும். ஆனால், சாதாரணமா நம்ம பார்க்கக் கூடிய மீன்கொத்தி, மரங்கொத்தி போன்ற பறவைகள் நகர்ப்புறங்களில், குறிப்பா சென்னையில்  குறைஞ்சு போச்சு.  

இன்று பறவைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது அதனுடைய வாழ்விட சீரழிவுதான். நாம் வளர்ச்சி என்ற பெயரில் பெரிய பெரிய கட்டடங்களை கட்டுகிறோம், நீர் நிலைகளை அசுத்தம் செய்கிறோம், பறவைகளின் வாழ்விடமான  மரங்களை வெட்டுகிறோம்,  அடர்ந்த புல் வெளிகளை குப்பை மேடுகளாக  ஆக்குகிறோம், இந்த காரியங்களின்  நேரடி பாதிப்பு பறவைகளுக்குத்தான்.

நான் சென்னையில் எண்பதுகளில் இருந்தே இருக்கிறேன். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டன. இவைகளிலிருந்து  வெளிப்படும் புகையும்,  சத்தமும்,  இதனால் அதிகரிக்கும் வெப்பமும் பறவைகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. பல நில பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. ஆயிறக்கணக்கான நீர் நிலைகள் சுருங்கி மற்றும் அழிந்தே விட்டன.

இந்தக் காரணங்களால், வீட்டுச் சிட்டுக்குருவி மட்டுமின்றி, வாத்துகள்,  ஈப்பிடிப்பான்கள்,  மரங்கொத்திகள்,  வானம்பாடிகள்… இவ்வளவு ஏன்?  நாம் சிறுவயதில் பெரும் அளவில் காணும் ஓணான்களின்  எண்ணிக்கை கூட கணிசமாக குறைந்துவிட்டது.

சென்னையில் வன பகுதிகளான  Theosophical Society, IIT campus, Guindy National Park  மற்றும் ஒரு சில கல்லூரி வளாகங்களில் மட்டுமே இந்தப் பறவைகளைக் காண முடிகிறது. இங்கு பொது மக்கள் கட்டுப்பாடுகளுடன்  அனுமதிக்கப் படுகிறார்கள்.

நான் கவனிக்கும் இன்னொரு மாற்றம் என்னவென்றால், சென்னையில் இப்போது  முன்பைக் காட்டிலும், காகங்களும், புறாக்களும், பருந்துகளும்  அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பொதுவாக காடுகளில் அதிகம் காணப்படும் அண்டங்காக்காக்கள்  இப்போது நகரத்தில்  அதிகமாகத் தென்படுகின்றன. இந்த மாற்றம் நல்லதல்ல. அதுவும் குறிப்பாக புறாக்கள் நோய்களை பரப்பக் கூடியவை, அவைகளின் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக உள்ளது.

இந்த கொரோனா  நோய்த் தொற்று காலத்தில், ஊரடங்கு காரணமாக பறவைகள் எண்ணிக்கை ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்புவதை என்போல ஆர்வலர்களால் உணர முடிகிறது.  ஆனால், இப்போது நம்  வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் மற்ற  உயிரினங்களுக்கும்  இந்த பூமி சொந்தம் என்ற பொறுப்புடன் வளர்ச்சி அடையவேண்டும்”  என்று விரும்புகிறேன்.

இதுகுறித்து Stella Maris கல்லூரியில், விலங்கியல் துறை HOD ஆக இருக்கும் திருமதி. கல்பனா ஜெயராமன் கூறியதாவது

“நான் என் மாணவிகளுடன் எங்கள் கல்லூரி வளாகத்தில் பறவைகள் பார்ப்பேன். ஒரு சில வலசைப் பறவைகள் இங்கே வருவதை அறவே நிறுத்திவிட்டன.

மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் கணிசமான பறவைகள் உண்டு. அதுவும் hoopoe எனப்படும் கொண்டலாத்தி பறவைகள் இங்கே அடிக்கடி பார்க்க இயலும். ஆனால், சமீப காலமாக அவை வருவதில்லை. காரணம், நாம் பூங்காக்களை அழகு படுத்துகிறோம்  என்ற பெயரில், புல்வெளிகளை  சம தரையாக்கி விடுகிறோம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு மரங்கள், பூக்கள் என நடுகிறோம்.  இதன் விளைவு, பறவைகள் வராமல் போவது.

ஏன் என்று யோசிக்கிறீர்களா? அந்துப்பூச்சிகள்/ இதர பூச்சிகள்  முன் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக  இருக்கும். இவை, தற்போதைய சூழலில் இரவு வெளிச்சம் அதிகமான காரணத்தால், அழிவுக்கு ஆளாகியுள்ளன.  மேலும் நாம் பயன்படுத்தும் இரசாயன பூச்சிக்கொல்லிகளும் பூச்சிகளை அழிக்கின்றன . இது வெறும் பூச்சியின் அழிவாக நாம் காண இயலாது, இது ஒரு ECO SYSTEM ன் அழிவு. ஏனெனில் பூச்சிகளே  பறவைகளின் முக்கிய உணவு.”

பறவைகள் எண்ணிக்கை முன்போல அதிகப்படுத்த இயலுமா? என்ற கேள்விக்கு இருவரும் பொதுவாக கூறிய விஷயங்கள்

“நிச்சயமாக முடியும்! ஆனால், அதற்கு  அரசின் ஏகோபித்த முயற்சியும் தேவை. காட்டுப் புதர் மண்டிக் கிடக்கும் காலி  நிலங்கள், நீர் நிலைகள், அவற்றை ஆங்காங்கே அழியாமல் பாதுகாக்க வேண்டும். சாலைகள் தோறும்  இரு புறமும் நம்மூர் மரங்களான வேம்பு, ஆலமரம், அரச மரம், புன்னை மரம், மா மரம்  போன்றவற்றை நட வேண்டும். பூங்காக்களில், இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாமும் நமது பங்கிற்கு பூஞ்செடிகள், பழவகைகள் ஆகியவற்றை நமது வீடுகளில் நடலாம். இவ்வாறு செய்வதன்  மூலம், உணவு பற்றாக்குறை ஏற்படாமல் பறவைகள் சந்தோஷமாக இருக்கும். இதுவே அவை மீண்டும் அதிக அளவில் பெருக  வாய்ப்பளிக்கும்.”

வலசைப் பறவைகள்  ஆண்டிற்கு ஒருமுறை தங்கள் வாழ்விடத்தைத் தேடி பறந்து வருகின்றன. அப்போது, சென்ற வருடம் அது தங்கியிருந்த அதே மரத்தைத்  தேடி வருகிறது என்றும், அங்கே அந்த மரம் இல்லையெனில்  வீடற்று  போகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு முறை நாம் வசிக்கும் வீடு, அடுத்த முறை அவ்விடத்தில் இல்லையென்றால், நாம் அடையும் அதே அளவு வருத்தத்தையும், மன உளைச்சலையும் அந்த சிறு பறவை சந்திக்க நேரிடுகிறது. 4 – 5 வருடம் வாழும் ஒரு சிறிய பறவை, வீடற்று,  அதனால் அதன் இனப் பெருக்கம் தடைப்பட்டால்?  மேலும் பறவைகள் எண்ணிக்கை குறையத்தான் செய்யும்.

இந்த மரத்தின் இலைகளால் நிறைய  குப்பை சேருகிறது, என்று ஒரு மரத்தை, அல்லது அதன் கிளையை  வெட்டும்போது இனி சிந்திப்போம்.  

2 COMMENTS

  1. பறந்து, பறந்து எங்கும் திரியும் பறவை
    வாழ்க்கையை வளப்படுத்துவோம்.அருமை
    யான கட்டுரை.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...