0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று! 

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
உக்ரைனில் மாணவர்களை மீட்ட பெண் விமானி

கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயதான பெண் விமானி மகாஸ்வேதா சக்ரவர்த்தி, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவித்த 800 மாணவர்களை  மீட்டு சாதனை படைத்துள்ளார். இவர் மத்திய அரசின்  “ஆபரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ், 6 விமானங்களை இயக்கி, முக்கியப் பங்காற்றி, பெண்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தனியார் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். உத்தர பிரதேசம், அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான ‘இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான்’ அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பயிற்சி பெற்றவர்.

பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு 6 விமானங்களை இயக்கி மாணவர்களை மீட்க உதவியுள்ளார்.

ஒரு நாளைக்கு 13 – 14 மணிநேரம் ஏர்பஸ் ஏ320 விமானத்தில் பறக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் கவலையில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது, தனக்கு எந்த சிரமமும் பொருட்டாக இருக்க வில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்ட மத்திய அரசின் “வந்தே பாரத்” திட்டத்திலும் விமானங்களை இவர் ஓட்டியிருக்கிறார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதிலும்.,தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மூலம் கொண்டு சென்றதிலும் ஒரு விமானியாக அயராது பணியாற்றியிருக்கிறார்.

 டாக்டரேட் பெற்று விஞ்ஞானியான நடிகை! 

ஸ்டெம்செல் பையாலஜியில் (Stem cell biology) பி.ஹெச்டி வாங்கியிருக்கிறார் நடிகை வித்யா ப்ரதீப்.

தமிழில் தவம், பசங்க-2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம், தலைவி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். நாயகி சீரியலிலும், பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளின் ரியாலிடி ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார்.

சங்கர நேத்ராலயாவில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். ஸ்டெம் செல் பயாலஜி எனப்படும் உடலின் செல் வகைகள், அவற்றின் தன்மைகள் குறித்த ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானியாகி விட்டார் இந்த அழகிய நடிகை.

பிளாஸ்டிக் வேஸ்ட்டிலிருந்து எரிபொருள் கண்டுபிடித்த பெண்மணி!

பொதுவாக, தாவர, மற்றும் உயிரினங்களின் கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருள் (Bio fuels) எடுக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டு வருவது நமக்குத் தெரியும்.  ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மலிவாக எரிபொருள் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு இளம் பெண்.

அவர், எகிப்தைச் சேர்ந்த அஸ்ஸா அப்தெல் ஹமித் பயாத். என்பவர். பள்ளி மாணவியாக இருந்த போதே, வேஸ்ட் பொருட்களில் இருந்து எரிபொருள் தயாரிப்பதில்  ஆர்வம் கொண்டிருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட உயிரி எரிபொருள் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே அதற்கு மாற்றாகவும், விலை மலிவாகவும் பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்.

பின்னர், கெய்ரோவில் உள்ள எகிப்திய பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கால்சியம் பெண்டோனைட் எனப்படும் பிளாஸ்டிக்கை உடைக்கப் பயன்படும் புதிய வினையூக்கியை (Catalyst) கண்டுபிடித்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த வெப்பநிலையில் வைக்கும்போது, அது மீத்தேன், புரொப்பேன் மற்றும் ஈத்தேன் போன்ற வாயுப் பொருட்களாக உருமாறி, அவற்றை எளிதாக உடைத்து எத்தனாலாக (உயிரி எரிபொருள்) மாற்றப்படும். இது ஏற்கனவே உள்ள பிற கண்டுபிடிப்புகளை விட மிகவும் மலிவாக எரிபொருளை உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...

 ‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

 பகுதி -2 -ஜி.எஸ்.எஸ். ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.  ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி.  ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள்...

பாட்டொன்று கேட்டேன்…

இது மங்கையர் மலரின் விவித பாரதி… பகுதி-3 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க இருக்கும் பாடல்... தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல் . உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள்...