0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும்.

அந்தப் பள்ளி, ஸாரி… கான்வென்ட்டின் மாணவிகள் ‘பால்ட் வின்ஸ்’ என்ற வேறொரு பள்ளி மாணவியருடன் கேங்-வார் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. யூனிஃபார்ம் அணிந்த யுவதிகள் குடுமிப் பிடிச் சண்டை போடுவதையும், மட்டைகளால் ஆக்ரோஷமாகத் தாக்கி உருள்வதையும் நாள் முழுக்க டீ.வி.களில் விலாவாரியாகக் காட்டி விவாதித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்ணின் காதலன் (அவனும் பள்ளி மாணவன்தான்!) பக்கத்துப் பள்ளி மாணவியை வெளியே கூட்டிக் கொண்டு போய்விட்டான். (ரெட்டைவால் குருவி ஸ்டைல்!) அது வாட்ஸ் அப் சேட்டில் வெளியாகிவிட, ஓர் இளைஞனுக்காக, இரண்டு மாணவிகள் அடித்துக் கொள்ளவே, கும்மாங்குத்துத் தெருச் சண்டையாகிவிட்டது. பலமாக மோதிக் கொண்டதில், மொத்த பேரும் கூண்டோடு அள்ளப்பட்டு, போலீஸ் தலையிட்டு சமரசம் செய்திருக்கிறது.

“Bring your parents tomorrow´ என்று ஒரு வார்த்தையை ஆசிரியர் சொல்லிவிட்டாலே, ஏதோ வானமே இடிந்து தலைமீது விழுந்துவிட்டது போல நடுக்கம் வந்து விடுமே… நமக்கெல்லாம்… அது அந்தக் காலம்!

இப்போது போலிஸ் வந்து வழக்குப் பதிவு செய்து, டீ.வியில் உருட்டோ உருட்டு என்று உருட்டினாலும் கெத்தாக நிற்கின்றன பிள்ளைகள்!

பெங்களூரு என்ன புடலங்காய்? இங்கே மதுரை பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து தாக்கிக் கொள்ளவில்லையா? அப்புறம் அந்த ஆவடி பெண்கள் கல்லூரியில்… வடிவேலு சொல்வது போல “என்ன அடி?”

சும்மா, ‘பேரன்டிங் சரியில்லை: பணத்துக்குப் பின்னாலேயே போய் பிள்ளைகளைக் கவனிக்கிறது இல்லை” என்றும், “டீச்சர்ஸ் மொதல்ல மாதிரி இல்லீங்க… ஸ்கூல் ஸ்டான்டர்டே போச்சு!” என்றும், பழியைத் தூக்கிப் போடாமல் கொஞ்சம் மாத்தி சிந்திச்சா என்ன?

இந்தக் காலத்துப் பெண்கள், நவீன யுகத்தின் வார்ப்புகள். விநோதமான புதிர்த்தன்மையும், வியக்க வைக்கும் எனர்ஜியும் கொண்டவர்கள். கிட்டத்தட்ட வத்திக்குச்சிகள் போல!

கடந்த மூன்று வருடமாக, லாக்-டவுன் என்பதால் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. உடற்பயிற்சியோ, மனசுக்கு ஊக்கம் தரும் மாணவிகளின் நட்போ, இணக்கமோ கிடைக்கவில்லை. திடீரென்று பரீட்சைகளும் பாடத் திட்டங்களும் தலைமேல் இறங்கிய வேகத்தை அவர்களால் தாள முடியவில்லை. அதன் வெளிப்பாடே உள்ளூர் ரெளடிகள் போல உஷ்ணமாக மோதிக் கொள்வது எல்லாம் நடக்கிறது.

அதே உத்வேகத்தை, ஆற்றலை, வேறொரு நல்ல தளத்துக்கு மடை மாற்றினால், அவர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள். இந்த சம்பவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு, ஜஸ்ட் மூவ் ஆன் கேர்ள்ஸ்! ஐ…மின் ரெளடி பேபீஸ்!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

- ஆன்மிகம். காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகள். காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய். அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள். அடுத்து புண்ணிய நதிகள்,...

முற்பகல் செய்யின்…

ஒரு பக்கக் கதைகள். ஓவியம்: சேகர்                             சிலுக்குவார்பட்டியில், முதல் பட்டதாரி வினூஷ். பெண்களில் தாமரை. சென்னையில் ஒரே...