0,00 INR

No products in the cart.

மன்னவன் பிறப்பு நாய்தான்!

-சுசீலா மாணிக்கம்

விஞர் கண்ணதாசன் தான் வளர்த்த சீசருக்காக ‘அன்பிற்குரிய சீசர்’ என ஒரு கவிதை படைத்திருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.
‘அன்னையே உன்னைக் கேட்டேன்
அடுத்தொரு பிறவி உண்டேல்
என்னை நீ நாயாக பெற்று
இத்தலைக் கடனை தீர்ப்பாய்
தன்னையும் உணர்ந்த தன்னை
தழுவிய கையும் காக்கும் மன்னவன் பிறப்பு நாய்தான்
மனிதனாய் பிறப்பதல்ல’
மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு அக்காலத்திலிருந்து இன்று வரை எள்ளளவேனும் மாறாததாய் இருக்கிறது.மனிதன் மேல் அவைகள் காட்டும் மேலோங்கிய நன்றியும் விசுவாசமும் எப்பொழுதும் ஒன்றேதான். தன் எஜமானனுக்காக கண நேரமும் யோசிக்காமல் தன் உயிரையே தாரைவார்க்கும் தன்மைகொண்டவை. பண்டைய தமிழர்கள் இல்லங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுடன் குறைந்தது இரண்டு நாய்களாவது இருக்கும். காலப்போக்கில் சமுதாய வழக்கங்கள்,
குடும்ப வாழ்க்கை முறைகள் என அனைத்தும் மாறி கிட்டத்தட்ட நாட்டு நாய்கள் என்பதை மறந்துவிட்ட ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றின் சந்ததிகளைத் தழைக்கச் செய்து இன்றும் அவற்றைப் பேணிப் பாதுகாத்து தங்கள் பிள்ளைகளைப் போன்று வளர்த்துவரும் பெரு மக்களும் ஒரு பக்கம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

துரை மாவட்டம் வலையங்குளம் அருகே எலியார்பத்தி கிராமம். திரு. வீரா ராம் மற்றும் அவர் மனைவி சர்மிளா வீரா ராம் எனும் இளம் தம்பதியினர் வீட்டில்தான். நம் பண்பாட்டு சின்னங்கள் மறைந்து விடாமல் இளம் தலைமுறையினரும் ஆர்வம் காட்டி வருவது மிகுந்த பெருமையடைய வைக்கிறது. ஜல்லிக்கட்டு காளைகள், ரேக்ளா காளைகள், நாட்டு நாய் பண்ணை, முட்டு கிடா, சண்டை சேவல் என அனைத்தையும் ஒரே இல்லத்தில் பராமரிப்பதே சர்மிளா வீரா ராம்தான்.

“எனக்கு திருமணமாகி இங்க வந்தப்புறம்தான் எனக்குள்ள இருந்த ஆர்வம் அதிகமாச்சி. எங்க மாமனார் நாட்டு மாடுகளை பாதுகாக்க கிடை மாடுகள் வைத்திருந்தாராம். 15 வருடங்களுக்கு முன் சுமார் 300 கிடைமாடுகள் இருந்தன. அதனால என் கணவருக்கும் நாட்டுமாடுகள் மேல ஆர்வம் அதிகம். ஜல்லிக்கட்டு மாடுகள்ள ‘மறை’னு ஒரு ஸ்பீடு காளை. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிவாசல்ல பிடிபடலை.

‘சீனி’ குத்துற காளை. பாக்குறப்பவே தெறிக்கவிட்டுடும். கன்னி நாய்கள் கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கின்றன” என்றவர் நாட்டு நாய்கள் பற்றிய விவரங்களை அடுக்கிக் கொண்டே போகிறார். உலகில் 350க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய இனங்கள் ஆறு. அதில் தமிழ்நாட்டில் மட்டுமே 4 இனங்கள். அவைகள் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம்.

கன்னி இனம்

ந்தக் காலங்களில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் புகுந்த வீடு செல்லும் மணமகளுக்குச் சீதனமாக கொடுக்கப்பட்டதாலும் கன்னி ஆடு எனும் ஆட்டின் நிறத்தை ஒத்து இருந்ததாலும் இப்பெயர் பெற்றது. வேட்டையில் கில்லாடி. எஜமான விசுவாசம் அதிகம். இவை சாதாரணமாக கருப்பு பழுப்பு நிறத்திலிருக்கும். பாதங்களிலும் மார்பிலும் சிறிது வெண்மை நிறம் கலந்திருக்கும். க்ரீம் நிற ‘பால் கன்னி’களும் உண்டு.

சிப்பிபாறை

துரை அருகே உள்ள சிப்பிபாறையில் அரச குடும்பத்தினரால் விரும்பி வளர்க்கப்பட்டது. இவை இளம் மஞ்சள் நிறம் சாம்பல் நிறக் கோடுகள் கொண்டவை. வேட்டைக்கு வல்லவன். தன்னை வளர்ப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானது.உடல் முடிகள் குட்டையாகவும் மென்மையாகவும் இருப்பதால் நமது நாட்டின் வெப்பத்தைத் தாங்க வல்லது. சேலம் மாவட்டம் சித்த நாயக்கன்பட்டி, கம்மாளப்பட்டி போன்ற மலைக்கிராமங்களில் காட்டுவிலங்குகள் மற்றும் திருடர்கள் தொல்லை அதிகம். பகலிலும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உண்டு. இக்கிராம மக்களின் உயிர் காக்கும் தோழன் இந்த சிப்பிபாறைதான். பொதுவாக கன்னியும் சிப்பிபாறையும் ஒரே உடலமைப்பையும் குணாதிசயங்களும் கொண்டிருக்கும்.

கோம்பை

வேட்டைக்குச் சிறந்தது என்றாலும் பண்ணை காவலுக்கு மிகவும் ஏற்றது.
காட்டு விலங்குகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பணியை செவ்வனே செய்யும். மிகுந்த வீரமும் போர்க்குணமும் நிறைந்தது. உடல் மண் சிவப்பு நிறத்திலும் மூக்கும் வாயும் கருமை நிறத்திலும் இருக்கும். மருதுபாண்டியர்கள் கோட்டை காவலிலும் படைகளிலும் கோம்பை நாய்கள் இடம்பெற்றிருந்ததாக ஒரு வரலாற்றுப் பதிவும் உண்டு.

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதியில் அதிகம் காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. பார்வை கூர்மை அதிகம். அன்னியர்களை எளிதில் நம்பாது. ஆக்ரோஷம் சற்று அதிகம் என்றாலும் காவலில் கெட்டி. எக்காரணம் கொண்டும் தன் எஜமானனை மாற்றிக்கொள்ள சம்மதிக்காது. வெள்ளை நிற உடல் மடிந்து தொங்கும் காது, இளஞ்சிவப்பு மூக்குடன் தங்க நிற கண்கள் என உருவமைப்பு கொண்டவை.

தற்போது நமது நாட்டு நாய்கள் காவல் துறையிலும் கோலோச்ச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் பதிவுசெய்கிறார் சர்மிளா. “வெளிநாட்டு நாய்களை விட நமது நாட்டு நாய்களை வாங்கி நமது பாரம்பரியத்தை காப்போம்” என்ற வேண்டுகோளையும் விடுக்கிறார்.
சேவல் சண்டை, கிடா முட்டு போன்ற பந்தயங்கள் தடை செய்யப்பட்டு விட்டாலும் அவற்றை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அவைகளையும் அரவணைத்து வளர்த்து வருகிறார்கள்.

“எங்க வீட்டுல எந்த விசேஷம் என்றாலும் இவங்க எல்லார் கூடயும்தான் கொண்டாடுவோம்” என அவர் கூறும்போது பேசாம நாமளும் கிராமத்திலேயே பிறந்து இருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. இதுதான் கிராமத்தின் வெற்றி. நம் பண்பாட்டின் வெற்றி. கலாச்சாரத்தின் வெற்றி. அந்த இளம் தம்பதியரை மனதார வாழ்த்துவோம்.

1 COMMENT

 1. இளம் தம்பதியினரின் அருமையான பிராணிகள் வளர்ப்பு பாராட்டுக்குரியது.
  எங்கள் வீட்டு செல்லப் பிராணி ஜெர்மனிஸெப்பேர்டு என்னை
  இரண்டு முறை அறியாமல் தெரியாமல்
  செய்த நகக் கீறலுக்கு ஊசி பாே ட்டுள்ளே ன்.ஆனாலும் எனது ” நூட்டா” ((நாயின் செல்லப்பெயர்)மீது பாசம் குறை யவில்லை.
  தற் பாே தும் செ ல்லம் தான் .
  து.சே ரன்
  ஆலங்குளம்

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...