0,00 INR

No products in the cart.

“சோ ஸ்வீட்!’’ செல்லப் பிராணிகளை கொஞ்சும் முன் சற்றே சிந்தியுங்கள்!

-மஞ்சுளா சுவாமிநாதன்

விலங்குகள், பறவைகளின் நலன் காக்கும் கால்நடை மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, வருடா வருடம் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை ‘உலக கால்நடை மருத்துவ தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இன்று (30-04-2022) அந்த தினம் அமைவதால், நமது வாசகிகளிடம் அவர்கள் வீட்டு குட்டீசும் செல்லப் பிராணிகளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பக்  கோரியிருந்தோம்.  செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து அவர்களது கேள்விகளுக்கு சென்னையை சேர்ந்த பிரபல கால்நடை மருத்துவர் பிரியா கோவிந்தன் பதிலளிக்கிறார்.

  1. பூனைகளுக்கும் நாய்களுக்கும் உள்ள ரோம முடி அதிகமாக உதிருகிறது என்பதை எப்படி அறிவது?

பொதுவாக இந்த பிராணிகள், வருடத்தில் ஒரு சில மாதங்கள் சற்று அதிகமாக  முடி உதிர்க்கின்றன.  சில குறிப்பிட்ட வகைகள் மற்றவை காட்டிலும் அதிகமாக முடி உதிர்க்கும். ஒரு பிரஷ்  வைத்து அடிக்கடி அதன் ரோமத்தை சீர்படுத்துவது முடி உதிர்வை கட்டுப்படுத்தும். பொடுகு, அரிப்பு மற்றும் வீக்கத்துடன் சேர்ந்து வரும் முடி உதிர்வு இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

  1. நாயின் மீது உண்ணி வந்தால் என்ன செய்வது?

ண்ணிகளை பாதுகாப்பாக அகற்ற தற்போது நிறைய வழிகள்  உள்ளன. பழையபாணியில் நாமே கூட கையால், அல்லது ட்டுவீசர்  வைத்து எடுத்து விடலாம். ஆனால், நிறைய இருப்பின், மருத்துவர் அறிவுரையை கேட்டு செயல்படுவது உத்தமம்.

  1. நாங்க சைவம், வீட்டில் வளர்க்கும் எங்கள் செல்ல பிராணிக்கு சைவமே கொடுக்கலாமா?

நாய்களும் சரி, பூனைகளும் சரி, இயல்பில் அசைவம் உண்ணுபவை. அந்த அசைவ உணவில் உள்ள புரதமும், இதர சத்துகளும் அவற்றின் வளர்ச்சிக்கு  இன்றியமையாதவை. எனவே, இந்த பிராணிகளுக்கும் சரிவிகித உணவு அளிப்பது முக்கியம்.

  1. சாலையில் இருக்கும் பூனை மற்றும் நாய் குட்டிகளுடன் குழந்தைகள் விளையாடுவது பாதுகாப்பானதா?

சாலையில் வளரும் பிராணிகள் பொதுவாகவே அதிகம் துன்பத்திற்கு ஆளானவை.  அவைகளுக்கு மனரீதியான பிரச்னைகள் (trauma)  அதிகம்.  எனவே அவற்றுடன் விளையாடும் போது  ஜாக்கிரதையாகத் தான் அணுக வேண்டும். குழந்தைகளை குட்டிகளோடு விளையாடமட்டும் விடாமல், அனுதாபம் காட்டவும் கற்றுக் கொடுங்கள். என்னைக் கேட்டால், சாலையில் உள்ள குட்டியிடம் விளையாடுவதைக் காட்டிலும், ஆதரவற்ற ஒரு குட்டிக்கு உங்கள் இல்லத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவேன்.

  1. ஆரோக்கியமான செல்லப்பிராணிகள் வளர்க்க சில டிப்ஸ் கொடுங்க? 

ரிவிகித உணவு, க்ரூமிங்,  உடற்பயிற்சி, இவை மிகவும் முக்கியம். நாய்களுக்கு சிறுவயதிலிருந்தே மற்ற நாய்களுடன் பழக வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பூனைகளுக்கு இது தேவையில்லை.

**********************

1. ஸ்மிருதி டிவில்லைட்டுடன். 2. ஹக்ஸியுடன் ஜனனி,3. தனது பூனையுடன் ஜனனி

இந்த ஆண்டு கால்நடை மருத்துவ தினத்தின் மையக்கருத்து, ‘Strengthening Veterinary Resilience’. உலக அளவில் கால்நடை மருத்துவர் களின் மனோநிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.  கால்நடை விலங்குகள் படும் அவதிகளை, புறக்கணிப்பை பார்க்கும் போது ‘compassionate fatigue’  என சொல்லக் கூடிய ஒரு வகை அனுதாபம் சார்ந்த அயர்ச்சி இவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதால்,  எதிர்மறை எண்ணங்களும் உருவாகின்றன. எனவே கால்நடை மருத்துவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் நிறைய முயற்சிகளை இந்த சமூகம் இந்த ஆண்டு மேற்கொள்ள இருக்கிறது. இது குறித்து மருத்துவர் பிரியா கூறியதைப் பார்ப்போம். 

ந்தியாவில் கால்நடை மருத்துவப் படிப்பு தேர்ந்தெடுக்கும் பெரும்பாலானோர் மற்ற மருத்துவ கல்லூரிகளில்  இடம் கிடைக்காமல்தான் இங்கே வருகிறார்கள். நான் படிக்கும் போது, என்னைப் போல வெகு சிலரே விலங்குகள் மீது உள்ள அன்பினால் கால்நடை மருத்துவத்தை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் விலங்குகளிடம் அதிக பாசம் உள்ள பலர் இருக்கிறார்கள். எங்களைப்  போன்றவர்களுக்கு, மனிதர்கள் விலங்குகளை துன்புறுத்துவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எங்களுக்கு எங்கள் வேலை பிடிக்கும்,  ஆனால்  எங்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் சில விஷயங்கள் எங்களை மன ரீதியாக மிகவும் பாதிக்கின்றன. இந்த மனோரீதியான பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் கால்நடை மருத்துவர்களிடம் அதிகம் தற்கொலை எண்ணங்கள் வருவதால், இந்த ஆண்டு உலக கால்நடை மருத்துவ  தினத்தின் மையக்கருத்து மருத்துவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

1. வைஜயந்தியுடன் பீச்செல், 2. மிக்கியுடன் ராதிகா, 3. மிரா மற்றும் அனன்யா

உங்களை பெரிதும் பாதிக்கின்ற விஷயங்கள் என்னென்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க…

நாய் வளர்ப்பவர் ஒருவர், அவர் வீட்டு நாயை சென்னை வெய்யிலில் மதியம் முழுவதும் வாசலில் கட்டிப் போட்டதால், கடும் நீரிழப்பு ஏற்பட்டு கவலைக்குரிய நிலையில் இன்று அழைத்து வந்திருந்தார். கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அதன் நிலையை சீர் செய்தேன். ஆனால், இன்னும் ஓரிரு நாட்களுக்கு அதன் நிலைமை  அபாயகரமானதுதான். அந்த நாயின் சொந்தக்காரர் அதனைப் பற்றி பெரிதும் கவலைக் கொள்ளவில்லை, ஆனால் எனக்கு இன்றிரவு உறக்கம் வருவது கடினம். இது என் தொழில்தான். இருந்தாலும், நாய் வளர்ப்பு பற்றிய எந்த ஒரு புரிதலும் இன்றி, சென்னை வெய்யிலை தாங்கவே இயலாத  உயர்ரக  வெளிநாட்டு நாய்களை, அதிக விலை கொடுத்து வாங்கி, முடிவில் இப்படி துன்புறுத்தும் மக்களைப் பார்த்தால் வேதனையாக உள்ளது.

அதேபோல breeders  பலர் உள்ளனர். அவர்கள் உயர் ரக நாய்களை கூண்டில் அடைத்து, வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன் படுத்துகின்றனர். அதன் குட்டிகளை அதிக விலைக்கு விற்று லாபம் தேடுகின்றனர். ஆனால், அந்த தாய் நாய்க்கு தனது முதலாளியிடமிருந்து ஒரு துளி அன்பு கூட கிடைப்பதில்லை. கூண்டில் இருக்கும் அந்த நாயின் மனம் எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கும்?

இன்னொரு அவல நிலை என்னவென்றால், கொரோனா காலத்தில், பல வளர்ப்பு நாய்கள் அனாதைகள் ஆயின. அவர்களுக்கு நல்ல குடும்பத்தைத் தேட  இங்கு பல தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்யும் அதே நேரத்தில், ஒரு சிலர், ‘எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது’ என்று எண்ணி அந்த சமயம் செல்லப் பிராணிகளை விரும்பி வாங்கினர். இப்போது அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறந்த நிலையில், ‘எங்களால் அவைகளை வளர்க்க இயலவில்லை’ என்று மீண்டும் ப்ளூ  கிராஸ்  போன்ற இடங்களில் விட்டுச் செல்கின்றனர்.

1. தனது நாய்க்குட்டியுடன் சிவகுரு, 2. ஆட்டுக்குட்டியுடன் யாழிசை

இந்த நிலையை மாற்ற, மருத்துவர்களை மகிழ்விக்க, பொது மக்கள் என்ன செய்யலாம்?

து ஒரு  சுழற்சி. விலங்குகள் சந்தோஷமாக இருந்தால், நாங்கள் சந்தோஷமாக இருப்போம். ஒரு குழந்தையை கொடுமைப் படுத்துவது எவ்வளவு தவறான காரியமோ, அதே அளவு தவறானது தான் விலங்குகளை துன்புறுத்துவதும். விலங்குகள் காப்பகத்தில் ஆதரவற்று  இருக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உங்கள் இல்லத்தில்  இடம் கொடுங்கள். ஒரு செல்லப் பிராணியை வாங்கும் முன் நிறைய சிந்தியுங்கள். வாங்கிய பின் அவைகளின் காலம் வரை அவற்றைப் பேணுங்கள். பார்த்தவுடன் ‘ சோ ஸ்வீட்! கியூட்!’ என்று கொஞ்சுவதும், அன்பு செலுத்துவதும், அனைவருக்கும் இயல்பே. ஆனால், அதைத் தாண்டி அந்த விலங்குகளின் நல்வாழ்விற்கு உதவ முயற்சி செய்யுங்கள்.

மருத்துவர் பிரியா உடனான இந்த உரையாடல் என் மனக்கண்ணை திறந்தது என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உலகத்தில் இடம் வேண்டும் என்ற உயர்ந்த விஷயத்தை பிரியா அவர்களின் மூலமாக அறிந்து கொண்டேன். சாலையில் நாம் பார்க்கும் குட்டிகளுடன் விளையாட மட்டும் செய்யாமல், மேலும் அவற்றுக்கு என்ன செய்ய முடியும்? என்று ஒவ்வொருவரும் சிந்தித்தாலே இந்த விலங்குகளின் நிலை மேம்படும் என்பதில் ஐயமில்லை. 

செல்லப் பிராணிகளைப் பற்றி சிந்திப்போம்; பொறுப்புடன் செயல்படுவோம்!

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...