-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..படங்கள்; பிள்ளை."சபாவுல என்னோட கச்சேரிக்கு கூட்டம் வரணும்னா என்ன செய்யணும்யா?"."சபா கேன்டீன்ல உங்க கச்சேரியை வச்சுக்குங்க பாகவதரே!".—————————————————-."தோசை என்னப்பா இவ்வளவு சின்னதா இருக்கு?"."பொடி தோசை வேணும்னு நீங்க தானே சார் சொன்னீங்க!".—————————————————-."தலைவர் தினமும் ஜிம்முக்குப் போய் உடம்பைக் குறைத்துக்கொள்ள ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கார்?"."குண்டர் சட்டத்துல போலீஸ் கைது செய்துடுவாங்களோன்னு பயந்துக் கிட்டுத்தான்!".—————————————————-."எதுக்கு தலைவரே கண் டாக்டரை பார்க்கப் போகணும்னு சொல்றீங்க?"."என் பார்வையே சரியில்லைன்னு மகளிரணித் தலைவி சொல்றாங்கய்யா!".—————————————————-."அடுத்த தேர்தல்ல நாமதான்யா ஜெயிப்போம்!"."அதுவரை நம்ம கட்சி இருக்கணுமே தலைவரே!".—————————————————-." கட்சி மீட்டிங்குக்கு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது?"."தலைவர் பேச மாட்டார்னு சொல்லி அழைச்சுகிட்டு வந்தோம்!".—————————————————-."தலைவர் வீட்டுக்கு ரெய்டு நடத்த வந்த சிபிஐ அதிகாரிகள் ஏன் ரெய்டு நடத்தாம திரும்பிப் போயிட்டாங்க?"."தலைவர் ஆளும்கட்சி கூட கூட்டணில சேர்ந்துட்டார்னு தகவல் கிடைச்சுதாம்!".—————————————————-."நான் சுயசரிதை எழுதப்போறேன்யா!"."வேண்டாம் தலைவரே, சுயசரிதைக்கு விபரம் சேகரிக்க எத்தனை போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் நீங்க போவீங்க?".—————————————————-."எல்லா ரவுடிங்களையும் போலீஸ் பிடிக்கப் போறாங்களாம்யா!"."அதுக்கு நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க தலைவரே?"."நம்ம கட்சி ஆபீஸ்ல ரெய்டு நடத்துவாங்களே!"