0,00 INR

No products in the cart.

நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி?

முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!

 -வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.

ந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் வைத்திருப்பது என்பது கைக்கொள்ள வேண்டிய ஒரு கலை. எவ்வாறு அதைச் செய்வது என்பதற்கு, டேவிட் ஃப்ரே (David Frey) அவர்கள், தனது சக்திமிக்க நினைவு அமைப்பு (Power Memory System) என்ற புத்தகத்தில் பல்வேறு வழிமுறைகளை கூறுகிறார்கள்.

அவர்கள் மனிதன் முக்கியமான விஷயங்களை, தற்காலிக நினைவிலிருந்து (temporary memory), நிரந்தர நினைவிற்கு (permanent memory) கொண்டு செல்ல வேண்டுமென்கிறார் டேவிட். இவ்வாறு நினைவுபடுத்துவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

 1. சேமிப்பது (Store)
 2. நினைவுகூறுவது (Recall)

இதில் இரண்டாவதில்தான் மக்கள் திணறுகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் சேமித்தபோது, சரியான ஒரு அமைப்புடன் சேமிக்கவில்லை என்கிறார் டேவிட். அந்த அமைப்பிற்குச் சக்திமிக்க நினைவு அமைப்பு என்கிறார்.

சக்திமிக்க நினைவு அமைப்பு என்பது என்ன?

ஒரு விஷயத்தினை நீண்ட காலத்திற்கு நினைவு கூற விரும்பினால், அதனை ஒரு உணர்வுப்பூர்வமான, தீவிரமான படத்துடன் உடனே சம்பந்தப்படுத்தி, பின்னர் அதனை மனதில் பல முறை நினைவு கூர வேண்டும்.

உதாரணமாக, நாம் ‘வேதம் புதிது’ படத்தின் இசையமைப்பாளர் தேவேந்திரனை நினைவு கூற விரும்பினால், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டினை அமலா, ராஜாவுடன் நீர்வீழ்ச்சி அருகே அமர்ந்து, தேவ லோகத்து இந்திரன், ஆர்மோனியம் வாசிப்பதாக உடனே நினைவு படுத்திக்கொள்ளலாம். இது வேடிக்கையாக இருக்கும். மறுபடி பல முறைகள் அந்த படக்காட்சியை நினைவு கூறும்போது, இது நிரந்தர மூளையில் இது பதிவாகிவிடும். எப்போது வேண்டுமானாலும் எளிதில் நினைவுகூர முடியும்.

இவ்வாறு நினைவுகூர மேலும், பல்வேறு உத்திகளை டேவிட் கூறுகிறார். அவற்றைப் பார்ப்போம்.

 1. ஒரு ரொட்டி உத்தி (one bun technique) –  இதை ஆங்கிலத்தில் ‘ “one-bun”,
  ”two-shoe”, “three-tree”, “four-door”, “five-hive”, “six-sticks”, “seven-heaven”, “eight-gate”, nine-vine”, “ten-hen”. என்கிறார். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு படம் இணைக்கப்பட்டுவிட்டது. நீங்கள் நினைவு வைத்திருக்க வேண்டிய விஷயங்களை, இந்தப் படங்களுடன் தொடர்பு படுத்த வேண்டும். உதாரணமாக, சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி ஆகியோரை நினைவுபடுத்த, கையில் பன் (ஒன்று-பன்) வைத்திருக்கும் சிவாஜியும், ஷூ (இரண்டு – ஷூ) அணிந்த எம்ஜிஆரும், மரத்தின் (மூன்று- மரம்) அருகே ஜெமினியும் நிற்குமாறு படத்தை உருவாக்கி, மனதில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
 2. கதை மூலமாக எந்த ஒரு விஷயத்தினையும் கதையாக பார்க்கும்போது, கோர்வையாக எளிதில் நினைவு கொள்ளமுடியும். ராமாயண கதாபாத்திரங்களை நாம் எளிதில் நினைவுகூறுவது இப்படித்தான். கும்பகர்ணன் என்றவுடன், ராவணனின் தம்பி என்று எளிதில் நினைவு கூறுவது இப்படித்தான். நீங்கள் சுற்றுலா சென்று வந்தவுடன், சென்று வந்ததை, கண்ணால் கண்டதை, ஒரு கதை போன்று வேறு ஒருவருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இடங்கள் எளிதில் நினைவில் இருக்கும்.
 3. இடத்துடன் தொடர்புபடுத்தி; உங்களுக்கு தெரிந்த ஓர் இடத்துடன் தெரியாவதற்றை தொடர்புப்படுத்த, எளிதில் நினைவுகொள்ளமுடியும். உதாரணமாக, சுதந்திரப் போராட்ட வீரர்களை உங்களுக்குத் தெரிந்த இடத்துடன் தொடர்புபடுத்துங்கள். உதாரணமாக, உங்களது வீட்டினை எடுத்துக் கொள்வோம்.வீட்டில் நீங்கள் நுழைகிறீர்கள். அப்போது, கூடத்தில் சோபாவில், காந்தி, நேரு, வல்லபாய் படேல் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சமையலறை அருகே, அம்பேத்கார் நின்றுகொண்டு, ராஜாஜியுடன் ஏதோ சம்பாஷிக்கிறார்.

4. முகத்தின் அங்கங்கள் மூலமாக; இதனையே, வீட்டிற்கு பதிலாக, முகத்தின் அங்கங்கள் எனவும் தொடர்பு படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, காந்தியும், நேருவும் இரு கண்களில் அமர, வல்லபாய் படேல் மூக்கில் அமர்ந்து, பேசிக் கொண்டிருக்கிறார். இரண்டு காதுகளிலும் அம்பேத்காரும், ராஜாஜியும் நின்று கொண்டு, அளவளாவுகின்றனர்.

5. உடலின் அங்கங்கள் மூலமாக; முகத்தின் அங்கங்களுக்கு பதிலாக, உடலின் அங்கங்களுடன் தொடர்புபடுத்தி நினைவுகொள்ளலாம். உதாரணமாக, இரு தோள்களில் காந்தி, நேரு அமர, தலையில் வல்லபாய் படேல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இரு கைகளிலும், ராஜாஜியும், அம்பேத்காரும் அமர்ந்து அளவளாவுகின்றனர்.

6. முதல் எழுத்துகள் வாயிலாக (acronyms) ஆங்கிலத்தில் KISS என்று சுருக்கத்திற்கான முதல் எழுத்துக்கள் வாயிலாக கூறுவார்கள். KISS – Keep It Simple Stupid. முட்டாளே எளிமைப்படுத்து என்று அர்த்தம். இவ்வாறு முதல் எழுத்துக்கள் வாயிலாக, ஒரு கருத்தினை உள்வாங்கிகொள்ளலாம்.

7. வாக்கியங்கள் வாயிலாக– ஒரு வாக்கியத்தின் மூலமாக, விஷயத்தினை நினைவு கூறுவது. உதாரணமாக:

ராகு காலத்தினை நினைவு கூர, திருவிழா சமயங்களில் வெளியே புகுந்து விளையாட செல்லுதல் ஞாயமன்று என்ற வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்து மூலம், ராகுகால நேரங்களை நினைவில் வைத்திருக்கலாம்.

 • திருவிழா – திங்கட் கிழமை – காலை 7.30 முதல் 9.00 வரை
 • சமயங்களில் – சனிக் கிழமை – காலை 9 முதல் 10.30 வரை
 • வெளியே – வெள்ளிக் கிழமை – காலை 10.30 முதல் 12 வரை
 • புகுந்து – புதன் கிழமை – நன்பகல் 12 முதல் 1.30 வரை
 • விளையாட – வியாழக் கிழமை – மதியம் 1.30 முதல் 3 வரை
 • செல்லுதல் – செவ்வாய்க் கிழமை – மதியம் 3 முதல் 4.30 வரை
 • ஞாயமன்று – ஞாயிற்றுக் கிழமை – மாலை 4.30 முதல் 6 வரை

8. நினைவு கூர வேண்டிய சொற்களின் பாட்டு மூலமாக– ஒரு பாட்டில் நினைவுகூர வேண்டிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

பாரதிதாசனின் பின்வரும் பாட்டின் மூலமாக, எந்த ஒரு பயணத்திற்கும் நாம் தயார் செய்து கொள்ளலாம்.

சோப்பு சீப்பு கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணை
பாட்டரி விளக்கு தூக்கு கூஜா தாள் பென்சில் தீப்பெட்டி கவிகை சால்வை செருப்பு கோவணம் படுக்கை காப்பிட்ட பெட்டி ரூபாய்
கைகொள்க யாத்திரைக்கே…

 1. ஏற்கனவே உள்ள பாட்டுடன், நினைவு கூர வேண்டிய சொற்களை இணைத்த பாட்டு மூலமாக – நமக்கு பிடித்த பாட்டில், ஒரு வரி பாடலும், அடுத்த வரியில் நினைவுகூர வேண்டிய விஷயங்களை பாடலாக பாடும்போது, அந்த விஷயங்கள் எளிதில் நினைவு இருக்கும்.

அம்மா இங்கே வாவா
காந்தி நேரு படேலு ஊஊ
ஆசை முத்தம் தாதா
அம்பேத்கார் ராஜாஜி ஈ ஈ

10. உருப்போடுதல் ; ஒன்றை திரும்பத் திரும்ப உரு போடுவதன் மூலமாக நினைவு கொள்ளுதல்.

உதாரணமாக, கணக்கு வாய்ப்பாடுகள் போன்றவற்றை உருப்போடுதல் மூலமாக, நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.

இவ்வாறு பல வழிகள் மூலமாக, நாம் எளிதில் விஷயங்களை நினைவு வைத்துக் கொள்ளமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, நினைவு கொள்ளவேண்டும் என்ற ஈடுபாடு முக்கியம். ஈடுபாடு இல்லாவிட்டால், எளிதில் நினைவு கொள்ளமுடியாது. மேலும், நினைவுகூர வேண்டிய விஷயங்களை எங்காவது எழுதி வைத்தலும் நலம்.  ஒரு வேளை நாம் மறந்துவிட்டால், அதன் மூலமாக, மறுபடி நினைவு படுத்திக்கொள்ளலாம்.

4 COMMENTS

 1. மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டுரை. பல பத்திரிக்கைகள், நம் மங்கையர் மலர் – இவற்றில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலமும் நம் நினைவாற்றலைப் பெருக்கலாம் என நினைக்கிறேன்.

 2. இந்த ஒரு கட்டுரைக்கே ஒரு வருட சந்தா வசூல். அருமையான, அனைவருக்கும் தேவையான விஷயத்தை எளிய நடைமுறைகளோடு விளக்கிய கட்டுரை. அருமை. எழுதியவருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி.

 3. ஆமாம். அடிக்கடி விஷயங்களை நினைவுகூறுவதால், அவை மனதில் ஆழமாகத் தங்கும். தங்களது ஊக்குவிப்பிற்கு நன்றி.

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
வெங்கடராமன் ராமசுப்ரமணியன் மென்பொருள் துறையில் மூத்த கட்டமைப்பு நிபுணராக வேலை செய்து வருகிறார். மின்னணுவியல் பொறியியலில் இளங்கலையும், வணிக மேலாண்மையில் முதுகலையும் மற்றும் மனித மேம்பாட்டிற்கான யோகாவில் முதுகலையும் பயின்றவர். தனிமனித நிதி ஆர்வலர். கதைகள், தனிமனித நிதியில் கட்டுரைகள், எழுதியுள்ளார். தமிழார்வம் காரணமாக நிரல் மொழியில் டுவிட்டரில் திருக்குறளை பதிவிட்டுள்ளார்(https://twitter.com/thirukuralfull). பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். உலகளாவிய தமிழ் கோராவில் தொடர் பங்களிப்பு காரணமாக சான்றாண்மை விருது பெற்ற நான்காவது நபர் இவர்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...