0,00 INR

No products in the cart.

மத்தாப்பு மகிழ்ச்சியில் மிருணாளினி!

பேட்டி : ராகவ் குமார்

டிக் டாக் மூலமாக தமிழ்நாட்டின் இளைஞர்கள், இளைஞிகளிடம் புகழ் பெற்ற மிருணாளினி ரவி, தெலுங்கில் ஒரு வெற்றி படம் தந்து, தற்போது சசிகுமார் உடன் எம்.ஜி.ஆர் மகன், விஷாலுடன் எனிமி, விக்ரமுடன் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். மிருணாளினி நடித்த எனிமி திரைப்படம் வரும் தீபாவளி நாளில் திரைக்கு வர இருப்பதால், அம்மணி மத்தாப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். சினிமாவில் வருவதற்கு முன்பு ஐபிஎம் சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்தவர். ஐபிஎம் நிறுவன வேலையை விட்டுவிட்டு, சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? டமால் கேள்வியை முன் வைத்தோம்.

டுமீல் பதில் : என்னதான் படித்து வேலைக்குப் போனாலும் எனக்கான, என் விருப்பத்திற்கான தேடல் இருந்ததால் நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். நான்
ஐபிஎம் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன பின், அப்பாயின்மெண்ட் ஆர்டர் வருவதற்கு ஓரிரு மாதங்கள் இருந்தன. இந்த இடைவெளியில் டப்மாஸ் செய்ய ஆரம்பித்தேன். ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்பு, படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. முதல் ஒரு வருடம் வரை எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பணிக்கு இடையூறு இல்லாமல் இருந்ததால் ஏற்றுக்கொண்டேன்.

டமால் : வேலையை விட்டு, சினிமாவிற்கு வருவதை அப்பா, அம்மா ஏற்றுக் கொண்டார்களா?

டுமீல் : எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? பயமும், தயக்கமும் நிறையவே இருந்தது. தனது மகனோ, மகளோ சினிமாவில் நடிப்பதை தமிழ்நாட்டு பெற்றோர்கள் பலரும் இன்னும் தயக்கத்துடன்தான் பார்க்கிறார்கள். அதேபோலதான், என் அம்மா, அப்பாவும். சூப்பர் டீலக்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் பேரண்ட்ஸ் கூடவே இருந்தார்கள். சினிமாவும் மற்ற பணிகள் போலதான். நாம் சரியாக இருந்தால் இங்கே எல்லாம் சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

டமால் : ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் தாவணியில் வருகிறீர்களே! உங்களுக்குப் பிடித்த ஆடை எது?

டுமீல் : நான் நடித்த தெலுங்கு படம் ஒன்றில், ஒரு பாடல் காட்சியில் தாவணி அணிந்து இருந்தேன். இதைப் பார்த்த டைரக்டர் பொன்ராம் சார், தான் இயக்கும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் கிராமப் பின்னணி கொண்ட, படம் முழுவதும் தாவணி அணியும் ஹீரோயின் கேரக்டரில் வாய்ப்பு தந்தார். நான் ஓரளவு உயரமாக இருப்பதால் சேலை நன்றாக இருக்கும் என பலர் சொல்வார்கள். எனக்கும் சேலை பிடிக்கும். நான் அடிக்கடி அம்மாவின் சேலைகளை எடுத்துத் கட்டிக் கொள்வேன். என் அப்பா கூட, ‘உன்னை விட, நம் மகளுக்கு உன் சேலை நன்றாக இருக்கிறது’ என்று அம்மாவிடம் கிண்டலாகச் சொல்வார்.

டமால் : சாப்ட்வேர் பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?

டுமீல் : நன்றாகவே சமைக்கத் தெரியும். எனக்கு ஒன்பது வயதாகும்போது தம்பி பிறந்தான். அந்த சூழ்நிலையில் அம்மாவுக்கு உதவியாக சமைக்க முடிவு செய்தேன். இன்று வரை சமைக்கிறேன். பாலக் பன்னீர், பிரியாணி என் சமையலில் சூப்பராக இருக்கும்.

டமால் : இந்த வருட தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?

டுமீல் : இந்த வருட தீபாவளிக்கு விஷாலுடன் நான் நடித்த எனிமி திரைப்படம் வெளியாகிறது. ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் தீபாவளி கொண்டாடப் போகிறேன். அது ஒரு தனி அனுபவம். இந்த வருடம் தீபாவளிக்கு மத்தாப்பு, பட்டாசு எல்லாம் ஆடியன்ஸ் கை தட்டல்கள்தான்.

டமால் : குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள்?

டுமீல் : பெங்களூரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள் நிறையவே இருக்கிறது. இருந்தாலும், நான் காலேஜில் படித்த வருடங்களில் குடும்பத்தினருடன் எங்கள் சொந்த ஊரான புதுச்சேரியில் கொண்டாட எண்ணி புதுச்சேரியில் பல உறவினர்களுடன், குறிப்பாக தாத்தா, பாட்டியுடன் கொண்டாடினோம். என்னதான் தீபாவளிக்கு விதவிதமா டிரஸ் பண்ணினாலும், சொந்த பந்தங்களுடன் தீபாவளி கொண்டாடுவது தனி சுகம்தான். போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடித்ததை மறக்கவே முடியாது.

டமால் : டிக் டாக் நிறைய குடும்பங்களில் பிரச்னை ஏற்படுத்துவதாகவும், பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நல்லது இல்லை எனவும் சொல்லப்படுகிறது. டப் மாஸ், டிக் டாக் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் என்ற முறையில் இதற்கான உங்கள் கருத்து?

டுமீல் : இரண்டு தண்டவாளங்களில் பயணிக்கும் ரயிலில் ஏறினால் ஊர் போய் சேரலாம். அதே தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தால் உலகை விட்டுப் போய் விடலாம். இது ரயிலின் தவறு அல்ல. டிக் டாக் மற்றும் சமூக வலை தளங்களை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேறலாம். தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை பிரச்னையில்தான் முடியும்.

டமால் : பிட்னெஸ் டிப்ஸ்…

டுமீல் : ஜிம்மில் போய் லேடீஸ் ஹெவி உடற்பயிற்சி செய்வதில் உடன்பாடில்லை. யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் பெண்மையை இன்னமும் அழகாக்கும். நான் இப்போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுகிறேன். இது கூட என் பிட்னெஸ்க்கு முக்கியக் காரணம்.

டமால் : பிடித்த கடவுள்…?

டுமீல் : விநாயகரும் சிவனும் பிடித்த கடவுள்கள்.

1 COMMENT

  1. மிருணாளினி யின் “டமால்,” டுமீல்”பேட்டி தீபாவளிக்கு முத்தாய்ப்பாக சூப்ப ராக தேனாக இனித்த து.
    அதுவும் கண்கவர் புகைப்படங்கள் எழில் ஓவியங்களாக
    மனதில் மிதந்து பாே யின.
    து.சே ரன்
    ஆலங்குளம்

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...