மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். ‘பீடு’ என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி, ‘பீடை’ என்றானது. அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி, வரும் தைத்திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இதுதான். – தொகுப்பு: ஆர். ஜெயலட்சுமி.