மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் கோலம் இட்டு மகிழ்வார்கள். போடும் கோலத்தின் நடுவின் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப்பூவை பதித்து வைப்பர். மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.