spot_img
0,00 INR

No products in the cart.

மறுபடி காணக் கிடைக்குமா ராதா கல்யாணம்?

லண்டனிலிருந்து கோமதி.

இங்கிலாந்தில் நவம்பர் மாத இறுதி மற்றும் டிசம்பர் மாதம் விழாக்காலமாக களைகட்டத் தொடங்கிவிடும்..சிலருக்கு கிறிஸ்துமஸ், பலருக்கு இதையொட்டி வரும் விடுமுறை, அலுவலகத்தில் சிறப்பு விழாக்கள், இன்னும் சிலருக்கு அந்த மாதத்துக்கே உண்டான குளிர் மேல் காதல்.. என காரணங்கள் ஏராளம்!

ஆனால் இங்கிலாந்துவாழ் இந்தியர்களான எங்களுக்கு கடந்த 2019-ம் வருடம் நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் நிகழ்ந்த “ராதா மாதவ கல்யாணம்” என்பது மறக்க முடியாத, மீண்டும் இன்று வரை காணக்  கிடைக்காத ஒரு அரிய நிகழ்வாக இருக்கப் போகிறது என்று அப்போது எங்களுக்கு எள்ளளவும் தெரியவில்லை. அதன்பிறகுதான் உலகெங்கும் கொரோனாவின் கோரதாண்டவம் தலைவிரித்தாடத் தொடங்க, இன்றுவரை ஓயவில்லையே?!

அந்த வகையில் 2019-ல் நடந்த அந்த ராதா கல்யாணம் வைபவத்தை இன்றும் இங்கு நாங்கள் பலரும் மீண்டும் மீண்டும் அசை போட்டு புளகாங்கிதம் கொள்கிறோம்.. மீண்டும் காணக் கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் அந்த வைபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

அந்த வருடம் இங்கிலாந்தில் ஆகஸ்ட்மாதம்  முதல் வாரத்திலேயே  இந்த வைபவத்துக்கான அறிவிப்பு வந்தது.  இவ்விழாவை உடையாளூர் திரு. கல்யாணராமன் அவர்கள் நடத்தி வைத்து சிறப்பிப்பார் என்று அறிவித்ததுமே எங்கள் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இதற்காக இங்குள்ள இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து ‘ராதா மாதவ கல்யாண நிர்வாகக் குழு’ அமைக்கப்பட்டு, இந்நிகழ்வு வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி திரட்டல், திரு. கல்யாணராமன் குழுவினரின் பயண ஏற்பாடு, அவர்கள் தங்குவதற்கு இடவசதி, அரங்க ஏற்பாடு, மேடை அலங்காரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றும் திட்டமிடப்பட்டு, அதற்காக அசாதாரணமாக உழைப்பு மேற்கொண்டனர். இதற்காக ஒரு புலனக்குழு (வாட்ஸ்அப் குரூப்) அமைக்கப்பட்டு அதில் இணையுமாறு பல தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். “சாதி இரண்டொழிய வேறில்லை” என பறைசாற்றிய பாரதியின் வரிகளுக்கேற்ப – இங்கிலாந்து வாழ் இந்தியர் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இதில் இணைந்து செயலாற்றியதை கண்கூடாகக் கண்டுகளித்தோம்.

ராதாகல்யாணம் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக நவம்பர் முதல் வாரத்திலேயே லண்டனில் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின. குறிப்பாக சீதா கல்யாணம் பிர்மிங்கஹாமிலும், “துளசி விவாஹ்” என்றழைக்கப்படும் துளசி கல்யாணம் ஆக்ஸ்போர்டிலும், “சாஸ்தா கல்யாணம் ” ஹாரௌவிலும் நிகழ்ந்தேறின. இவை அனைத்திலும் திரு. உடையாளூர் கல்யாணராமன் குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் லண்டனில் நடைபெற இருந்த மகா உற்சவமான “ராதா மாதவ கல்யாணத்தை ” ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்”

என்ற ஆண்டாளின் கூற்றிற்கிணங்க குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாது, மாதவனை தரிசிக்கும் அந்தத் திருநாளும் வந்தது

நவம்பர் 23-ம் தேதி காலை 9 மணிக்கு “தோடாய மங்களம்” என்னும் சம்பிரதாய பஜனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. குரு கீர்த்தனை மற்றும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம், மற்றும் அஷ்டபதி பாடல்களை உடையாளூர் கல்யாணராமன் குழுவினர் அருமையாகப் பாடினர். நிகழ்ச்சி நடந்த பிரமாண்ட அரங்கம் பலவித பூக்களால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டு, மணமேடையில் கிருஷ்ணர், ராதாவின் சிலைகள் தத்ரூபமாக மணமகன் மணமகள் கோலத்தில் காட்சியளித்தனர். அருமையான, மிகவும் ருசியான குளிருக்கு ஏற்ற சூடான மதிய உணாவிற்குப் பின் பல பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

அனைத்து காலை நிகழ்ச்சிகளும் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் இளம் சிறார்களைக் கொண்டும் அரங்கேறியது. பரதநாட்டியம், குச்சிப்புடி, இசைக் கச்சேரி என இங்கிலாந்தில் டிசம்பர் சீசன் போன்று களைகட்டியது. இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்த நடனக்குழூவானது லண்டனில் நாட்டியம் பயின்ற இளம் பெண்களைக் கொண்டு கிருஷ்ணனின் வரலாற்றை நடனம் மூலம் அற்புதமாக நடத்திக் காட்டினர். மேலும் திரு. உடையாளூர் கல்யாணராமனிடம் கீர்த்தனைகள் பயின்ற பெண்கள் தங்கள் பாடல் திறனை அற்புதமாக அரங்கேற்றினர். “இங்கிலாந்தில் மார்கழி” என்று கூறும் விதமாக கலைநிகழ்ச்சிகள் அமைந்தன என்றால் அது மிகையல்ல.

அந்நாளின் இறுதி அம்சமாக “டோலோத்ஸவம்” என்னும் “ஊஞ்சல் உற்சவத்துடன்” நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. திரு. உடையாளூர் கல்யாண ராமன் குழுவினர் பாடிய அஷ்டபதியும், அவை ஒவ்வொன்றிக்கும் அவர் அளித்த விளக்கமும் அருமையிலும் அருமை. ராதை கிருஷ்ணரை எதிர்நோக்கி இருத்தல், தன்தோழியிடம் கிருஷ்ணன் குறித்த நேரத்தில் வராததைக் கூறும் பரிதவித்தல், மற்ற கோபியர்கிருஷ்ணனிடம் காட்டிய காதலைக்கண்டு அவளது கோபம் இப்படி அவர் வர்ணித்தவிதம் அந்தக் காட்சிகளை நம் கண்முன்னேதத்ரூபமாக கொணர்ந்துவந்தது. ஜீவாத்மா, பரமாத்மாவோடு ராதாகிருஷ்ணனை ஒப்பிட்டு அவர்கூறிய விளக்கத்தை அனைவரும் மெய் மறந்து ரசித்தோம்.

நவம்பர் 24-ம் தேதி! மழையைப் பொருட்படுத்தாமல் அதிகாலையிலிருந்தே அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பித்துவிட்டன. அன்று காலை சரியாக 8 மணிக்கு உஞ்சவர்த்தி மற்றும் சங்கல்பம் முடிந்தவுடன் காலைச் சிற்றுண்டி திருநெல்வேலி அல்வாவுடன் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அடுத்த நிகழ்ச்சியாக திரு.கல்யாணராமன் குழுவினரின் திவ்ய நாம சங்கீர்த்தனம். “விழி கிடைக்குமா அபாயக் கரம் கிடைக்குமா?” என

கிருஷ்ணனை மனமுருகி பாடி அவர் அழைத்த விதம், அங்கு அமர்திருந்த அனைவரின் கண்களையும் பக்தியால் குளமாக்கியது. ராதா மாதவ திருமணத்திற்காக வைக்கப்ட்ட சீர் வரிசை, அதை அனைத்து பெண்டிரும் மடிசாரில் மண்டபத்திற்குள் கொணர்ந்து வந்த விதமும் அழகோ அழகு.  “முத்துக் குத்தல்” என அறிவித்ததும் அனைவரும் ஆனந்தக் களிப்பில் ஆர்ப்பரித்தனர். சிறுமியர் அழகாக உரலின் முன் நின்று கும்மி அடித்ததைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்கள் பக்தியை அழகான நடனத்துடன் உற்சாகமாக வெளிப்படுத்தினர். “ராதே ராதே ராதே கோவிந்தா” என்றும் “ஜானகி ரமணா சீதாராம்” என்றும் திரு.கல்யாணராமன் அவர்களின் பாடலுக்கேற்ற நடனம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

திருமண விழாவின் முத்தாய்ப்பாக மதிய விருந்து பிரசாதத்துடன் வாழை இலையில் பந்தியிட்டு பரிமாறப்பட்டது. அதிலும் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. . ஒரு குறிப்பிட்ட பந்தியின்போது எரிவாயுவின் காரணமாக பரிமாறுவதில் சிறு தாமதம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த அனைவரும் பசி  மறந்து, இறைவனின் நாம சங்கீர்த்தனம் பாடி தங்களை பக்தியில் ஈடுபடுத்திக் கொண்ட விதத்தை காண கண் கோடி வேண்டும். அதன் பின் தாம்பூலம் வழங்கி அனைவரையும் வழி அனுப்பி வைத்தனர்.

இத்தகையதொரு திருமண விழாவை, பக்தி மார்க்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்கட்டிய ராதா மாதவ நிர்வாகக் குழுவினருக்கும் உள்ளுர் தன்னார்வலர்களுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் ஈடாகாது. இவ்விழாவுக்கு தொலைவிலிருந்து பிர்மிங்கஹாம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் பேருந்துகள் ஏற்பாடு செய்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தது வியக்க வைத்தது.

உலகை உலுக்கி வரும் இந்த கொரோனா தாக்கம் நீங்கி, மீண்டும் இங்கிலாந்தில் இதுபோன்ற அரிய நிகழ்வு காணக்கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்கும் இங்குள்ளது.

இங்கிலாந்தில் நடந்த ராதா கல்யாணம் நிகழ்ச்சியின் சிறிய சில வீடியோ பதிவுகளை காணுங்கள்..

Other Articles

Stay Connected

263,924FansLike
1,888FollowersFollow
2,640SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

ஆடம்பரமாய் ஆரம்பி என்றார் என் கணவர்! ஸ்ருதி அஸ்வின் சேகர் பேட்டி!

0
நேர்காணல்: சாருலதா ஆடை வடிவமைப்புத் துறையில் காலடி எடுத்து வைத்து, படிப்படியாக உயர்ந்து, இன்று மிகப்பெரிய வெற்றி பெற்று, கம்பீரமாக வலம் வருபவர் ஸ்ருதி அஸ்வின் சேகர். பிரபல நாடகக் கலைஞரும் அரசியல்வாதியுமான திரு....

பிக்பாஸ் வேறொரு உலகம். எனக்கு சரிப்படாது: இன்ஸ்டா சென்சேஷன் கண்மணி ராதிகா!

0
பேட்டி: ஜிக்கன்னு கண்மணி ராதிகா.. சன் டி.வி செய்தி வாசிப்பாளர்.. வசீகரிக்க வைக்கும் அந்தச் சிரிப்புக்கு இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பாலோயர்ஸ்… 100-க்கு மேற்பட்ட போலி ID-க்கள்! இன்ஸ்டாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் கண்மணி, நேயர்களின்...

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் – 2022

1
கணிப்பு : ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய...

மூக்குத்தி அம்மன் படத்தில் இசையமைக்க முழு சுதந்திரம் கிடைத்தது!

0
நேர்காணல்: சாருலதா. தமிழ்த் திரைத்துறையின் இளமையான, திறமையான, வெற்றிகரமான இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷணன். இவர் ஒரு தேர்ந்த பாடகரும்கூட! மெரினா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளரான கிரிஷ் கோபாலகிருஷ்ணனுடன் கல்கி இணைய...

மிளகாய் தூள் போட்டு பிரியாணி செஞ்சேன்…செம காமெடி ஆச்சு!

0
-நேர்காணல்: சேலம் சுபா. “மேடம் ஷாட் ரெடி” குரலைக் கேட்டதும் “கொஞ்ச நேரம் இருக்கியளா நா போயிட்டு வாரேன் ..” கொஞ்சும் வெள்ளந்திக் குரலில் சொல்லி சென்றார்  தீபா சங்கர் . சினிமாவிலும் சரி.. சின்னத்...