தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமானார் நடிகை லட்சுமி மேனன். பின்னர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கும்கி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற படங்களைத் தேர்வு செய்து நடித்தார். அதேநேரம் அவர் கிராமத்து வேடங்களில் மட்டுமே அதிக அளவில் கொடுக்கப்பட்டது. சுமார் நான்கு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல், திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு விக்ரம் பிரபு ஜோடியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தவர். தற்போது அவர் கைவசம் 2 தமிழ்படம் மற்றும் ஒரு மலையாளப்படம் உள்ளது.
இந்நிலையில். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் சமயத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.