வாலிப கவிஞர் வாலியின் பிறந்த தினம்!

வாலி
வாலி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீனிவாசன் அய்யங்கார் பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931ல் பிறந்தவர் ரங்கராஜன் என்கிற வாலி். திரையிசையில் தனது இளமை குன்றாத பாடல் வரிகளில் அனைவரையும் வசப்படுத்தியவர். இவர்எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் எத்தலைமுறையினரையும் கவர்பவை. எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை இவர் பணிபுரியாத இசையமைப்பாளர்களே இல்லை எனலாம்.

வாலி
வாலி

எம்.ஜி்.ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை இவரது பாடல் வரிகளுக்கு வாயசைக்காத நடிகர்களே இல்லை. ஆயிரக்கணக்கான பாடல்களை அநாயாசமாக எழுதியுள்ள வாலிப கவிஞர் அவர். அவரின் தற்கால பாடல்களில் கூட இருபது வயது இளைஞனாய் இளமையை, குறும்பை ஆங்காங்கே தெறித்து வைத்திருப்பார்.

இவர் சிறுகதை, கவிதை என பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதியவற்றில் அம்மா', 'பொய்க்கால் குதிரைகள்', 'நிஜ கோவிந்தம்', 'பாண்டவர்பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்' ஆகியவை முக்கியமானது. இவர் முதன் முதலில் துவங்கிய நேதாஜி என்கிற கையெழுத்து ப்ரதியை வெளியிட்டவர் திரு.கல்கி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி - எம்.ஜி்.ஆர்
வாலி - எம்.ஜி்.ஆர்

வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல், சங்கர் மற்றும் சூர்யா பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுவாழ்த்துரை வழங்கினர்.

வாலி பத்மஸ்ரீ விருதினை 2007 ஆண்டு பெற்றவர். 1973-ல் 'இந்திய நாடு என் வீடு'.. என்ற 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசியவிருதை மறுத்தவர். வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கானமாநில அரசின் விருது பெற்றவர்.

வாலி அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் என்றுமே மறையாது. அவரின் ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் காற்றில் மிதந்துகொண்டேயிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com