நவராத்திரி கோலங்கள்: நவராத்திரியில் பாடவேண்டிய ராகங்கள்: நவராத்திரி பூஜைக்குரிய மலர்கள்!

நவராத்திரி ராகங்கள்
நவராத்திரி ராகங்கள்Krupa Joseph

நவராத்திரி என்பது எல்லோரும் கொண்டாட வேண்டிய அற்புதமான பண்டிகை. குறிப்பாக பெண்களுக்கான, அவர்கள் அவசியம் வணங்க வேண்டிய பண்டிகை . நவராத்திரியின் ஒன்பது நாளும் பலவிதமான மலர்களை சூட்டி அம்மனை போற்றி ஆராதனை செய்யவேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான கோலங்களிட்டு, விதவிதமான பாடல்களுடன் அம்மனை ஆராதிக்க வேண்டும்.

அம்மனை போற்றி வணங்கும் ஒன்பது நாளுக்குப் பின்னர், இல்லத்தில் ஒரு நேர்மறை அலை (பாசிடிவ் வைப்ரேஷன் ) ஏற்படுவதை உணரலாம். நவராத்திரி நாட்களில் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்கும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மன் வீட்டில் நிறைந்திருப்பர் என்பது ஐதீகம்.

நவராத்ரி நாட்களில் தினமும் பல்வேறு கோலங்களை போட்டு அம்மனை வழிபடவேண்டும்.

நவராத்திரி கோலம்
நவராத்திரி கோலம்

முதல் நாள் அரிசி மாவில் பொட்டுக் கோலம்

இரண்டாம் நாள் கோதுமை மாவில் கட்டம் கொண்ட

கோலம்

மூன்றாம் நாள் முத்துகள் போன்ற மலர்க்கோலம்

நான்காம் நாள் அட்சதைகளாலான படிக்கட்டுக் கோலம்

ஐந்தாம் நாள் கடலை கொண்டு பறவையினக் கோலம்

ஆறாம் நாள் பருப்பு கொண்டு தேவி நாமம் கொண்ட கோலம்

ஏழாம் நாள் வெள்ளை மலர்களால் ஆன கோலம்

எட்டாம் நாள் காசுகளாலான பத்மம் (அ) தாமரைக் கோலம்

ஒன்பதாம் நாள் கற்பூரம் ஆயுதம் அதாவது வாசனைப்

பொடிகளை கலந்து கோலமிடுவது

நவராத்திரியில் கொலு வைப்பவர்கள் என்றில்லாமல் அனைவருமே இந்தக் கோலங்களை போட்டு அம்மனை வழிபடலாம்.

கோலம்
கோலம்

ஒன்பது நாட்களும் விதவிதமான ராகங்களில் பாடல்கள் பாடி

அம்மன் அரூலை பெற்று கொள்ளலாம்.

முதல்நாள் தோடி ராகம்

இரண்டாம் நாள் கல்யாணி ராகம்

மூன்றாம் நாள் காம்போதி, கௌளை ராகங்கள்

நான்காம் நாள் பைரவி ராகம்

ஐந்தாம் நாள் பந்துவராளி ராகம்

ஆறாம் நாள் நீலாம்பரி ராகம்

ஏழாம் நாள் பிலஹரி ராகம்

எட்டாம் நாள் புன்னாகவராளி ராகம்

ஒன்பதாம் நாள் வசந்த ராகம்

இந்த ராகங்களில் அமைந்த அம்மன் பாடல்களைப் பாடி வழிபடலாம். கொலு பொம்மைகளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு, இந்த ராகங்களில் அமைந்த பாடல்களைப் பாடுவதால் வீட்டில் சாந்தம் தவழும் சூழல் உருவாகும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு நறுமணமிக்க வாசனை மலர்கள் சூட்ட வேண்டும்.

 பூஜைக்குரிய மலர்கள்
பூஜைக்குரிய மலர்கள்

முதல் நாள் மல்லிகை

இரண்டாம் நாள் முல்லை

மூன்றாம் நாள் செண்பகம்

நான்காம் நாள் ஜாதிமல்லி

ஐந்தாம் நாள் பாரிஜாதம்

ஆறாம் நாள் செம்பருத்தி

ஏழாம் நாள் தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை

எட்டாம் நாள் சம்பங்கி, மருதாணிப்பூ

ஓன்பதாம் நாள் தாமரை, மரிக்கொழுந்து

நவராத்திரியின் ஒன்பது நாட்களிழும் அம்மனை மகிழ்விக்க, நறுமணமிக்க வாசனை மலர்களை சூடி, தினமும் விதவிதமாக மாக்கோலமிட்டு, அம்மனுக்குகந்த ராகங்களை பாடி போற்றி வணங்கினால், அம்பாள் மனமகிழ்ந்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை மகிழ்ச்சியோடு வழங்குவாள்.

நவராத்திரியை கொண்டாடுவோம்! அம்பாளை போற்றி வணங்குவோம்.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com