தினப்பலன்
தினப்பலன்

09-11-2022

புதன்கிழமை

மேஷம்

இன்று விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

அசுபதி:இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

பரணி:தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம்.

கிருத்திகை 1ம் பாதம்:வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம்.

ரோஹிணி: தந்தை தந்தை வழி உறவினர்கள் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே நல்லவிதமான அனுகூலங்கள் உங்களை வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: சுபச்செலவுகள் நிகழும்.

திருவாதிரை:எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று அகலக்கால் வைத்தால் அவதி நிச்சயம். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு உங்களை வந்து சேரும். எதிர்காலத்திற்குத் தேவையான உபயோகமுள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு நிலம் இருந்தால் அது வெற்றி பெறும் முகநிலை உருவாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்:வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது.

பூசம்:எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ஆயில்யம்:உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்

இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும்.

மகம்:உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பூரம்:விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி

இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.

ஹஸ்தம்:தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்

இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்:முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.

ஸ்வாதி:தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்

இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.

விசாகம் 4ம் பாதம்:நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

அனுஷம்:தேவையில்லாத பணவிரையம் ஆகலாம்.

கேட்டை: காரிய அனுகூலம் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

மூலம்: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

பூராடம்:தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம்.

உத்திராடம் 1ம் பாதம்:வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்

இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் குருவின் இருப்பால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

திருஓணம்: பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: காரிய அனுகூலம் கிட்டும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்

இன்று  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

சதயம் 4ம் பாதம்:   கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மீனம்

இன்று  எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

பூரட்டாதி 4ம் பாதம்:முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: பொருளாதார வளம் மேம்படும்.

ரேவதி: தொழில் உன்னத நிலையை அடையும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com