dina palan
dina palan

09-12-2022

வெள்ளிக்கிழமை

மேஷம்

இன்று எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

அசுபதி: இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும், முயற்சி திருவினையாக்கும்.உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்கும்.உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.

பரணி:இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்,உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும்.சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும்.பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். கிருத்திகை 1ம் பாதம்:இன்று எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.தள்ளிப் போடுதலும் கூடாது.தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்

இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி

இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: இன்று சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். ரோஹிணி:இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.நன்மைகள் அதிகம் கிடைக்கும் .பணப்புழக்கம் அதிகரிக்கும்.எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.மதிப்பு மரியாதை சிறப்படையும்.செல்வாக்கு ஓங்கும்.குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும். மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்

இன்று குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். திருவாதிரை:இன்று பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத

பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்

இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

புனர்பூசம் 4ம் பாதம்:இன்று பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம்.சிக்கனம் தேவை.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். பூசம்:இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். ஆயில்யம்:இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மகம்:இன்று வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். பூரம்:இன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். உத்திரம் 1ம் பாதம்:இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது

தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். ஹஸ்தம்:இன்று வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைக்கடை துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது. சினிமா நாடகம் நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை தந்தை வழி உறவினர்கள் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். ஸ்வாதி:இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள்

நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். எதிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:இன்று தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

அனுஷம்:இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். கேட்டை:இன்று வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு

இன்று நீங்கள் நிதானமாக அனைத்து காரியங்களையும் அணுகுபவர். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரிய தாமதம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மூலம்:இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் ஏற்படும்.

பூராடம்:இன்று நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும். உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம். உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும். உத்திராடம் 1ம் பாதம்:இன்றைய நாள் சுமாராக இருக்கும். பொருளாதார பலம் உண்டாகும். அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும் வித்தைகள் சம்பந்தப்பட்ட படிப்புகள் சார்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வழிவகை செய்து கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சச்சரவு ஏற்படாமலிருப்பதற்கு கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று உங்கள் அந்தஸ்து சிறப்படையும். ஆதாயங்கள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும். உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம். பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும். திருஓணம்:இன்று தொல்லைகள் குறையும். எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும். அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்

இன்று கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று பெருமைகள் கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே வேளையில் அதற்குண்டான வழிமுறைகளுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். உடன் பணி புரிவோரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுமூகமான முறையில் அது மறையும். சதயம் 4ம் பாதம்:இன்று வெற்றிகள் காண்பீர்கள். செய்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள். மேலோரால் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று நலம் விளையும். பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை. மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனம் தேவை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்:இன்று மகிழ்ச்சி கூடும். வில்லங்கங்கள் அனைத்தும் விலகும். சுறுசுறுப்புடன் இந்த நாளை எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். அந்தஸ்து சிறப்படையும். உத்திரட்டாதி:இன்று உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். தென்மேற்கு மேற்கு திசைகள் நலம் தரும். ரேவதி:இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள். உங்களைவிட தனவந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வங்கியில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com