dina palan
dina palan

13-12-2022

செவ்வாய்க்கிழமை

மேஷம்

இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். 

 அசுபதி: இன்று பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.

பரணி:இன்று எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

ரிஷபம்

இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய  அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

ரோஹிணி: வீண் செலவை  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

இன்று வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள்  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

திருவாதிரை:இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல் பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

 புனர்பூசம் 4ம் பாதம்:இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

பூசம்:இன்று புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. காரிய தடை உண்டாகலாம். எதிலும் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும்.  வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

ஆயில்யம்:இன்று சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்

இன்று வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

 மகம்:இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம்.
எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.

பூரம்:இன்று குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்:இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கன்னி

இன்று கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம்.  வீண் செலவும் ஏற்படும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். 

 உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரண கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ஹஸ்தம்:இன்று வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள்  வீணாகும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

துலாம்

இன்று புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

 சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரிய தடை தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. வாழ்க்கை தரம் உயரும்.

ஸ்வாதி:இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  மனதில் தைரியம் பிறக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று வாக்குவன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்யம் உண்டாகும். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள்.

 விசாகம் 4ம் பாதம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு  சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

அனுஷம்:இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

கேட்டை:இன்று வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு

இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

 மூலம்:இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள்.

பூராடம்:இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும்.

உத்திராடம் 1ம் பாதம்:இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மகரம்

இன்று பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.

 உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

திருஓணம்:இன்று உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறைல் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளை களிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும்

தராமல் இருப்பது நல்லது.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள்.

சதயம் 4ம் பாதம்:இன்று வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். தாயார் வழி உறவினர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அகலும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மீனம்

இன்று மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

பூரட்டாதி 4ம் பாதம்:இன்று பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.

உத்திரட்டாதி:இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

ரேவதி:இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com