மேஷம்
இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யுங்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.
அஸ்வினி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.
பரணி: உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம்.
க்ருத்திகை: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
ரிஷபம்
இன்று காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும்.வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும்.
க்ருத்திகை: சிறப்பான நாளாக இருக்கும்.
ரோகினி: அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும்.
மிருகசீரிஷம்: அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
மிதுனம்
இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
மிருகசீரிஷம்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தாமதம் உண்டாகும்.
திருவாதிரை: சீரான நிலை காணப்படும்.
புனர்பூசம்: அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கடகம்
இன்று மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும்.
புனர்பூசம்: மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.
பூசம்: குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.
ஆயில்யம்: நிதானமான போக்கு காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
சிம்மம்
இன்று உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.
மகம்: பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும்.
பூரம்: எதிர்ப்புகள் நீங்கும்.
உத்திரம்: தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கன்னி
இன்று மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம். நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.
உத்திரம்: பணவரத்து திருப்திதரும்.
ஹஸ்தம்: எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள்.
சித்திரை: பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம்
இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும்
சித்திரை: போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
ஸ்வாதி: சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்.
விசாகம்: திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
விருச்சிகம்
இன்று பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும்.
விசாகம்: மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம்.
அனுஷம்: அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
கேட்டை: குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
தனுசு
இன்று சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும்
மூலம்: இடமாற்றம் உண்டாகலாம்.
பூராடம்: கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது.
உத்திராடம்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மகரம்
இன்று பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும்.உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
உத்திராடம்: வியாபார போட்டிகள் குறையும்.
திருவோணம்: எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
அவிட்டம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கும்பம்
இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம்: உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம்.
சதயம்: வாகனங்களால் செலவு ஏற்படும்.
பூரட்டாதி: உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மீனம்
இன்று வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள். தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எபோதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.
பூரட்டாதி: பொறுப்புகள் சேரும்.
உத்திரட்டாதி: பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
ரேவதி: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7