dina palan
dina palan

17-10-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று நிர்பந்தத்தின் பேரில் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய வேண்டி இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள்

உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப் பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்மிக பணிகளில் கவனம் செல்லும்.

அஸ்வினி: எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும்.

பரணி: பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

க்ருத்திகை: எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

ரிஷபம்

இன்று புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து தாமதப்படலாம். எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து செய்வது வெற்றியை தரும். வீண் செலவை குறைப்பது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்யப் போய் அதனால் அவச் சொல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளை கவனமுடன் செய்வது நல்லது. பயன்தராத முயற்சிகளை கைவிடுவது நன்மை தரும். வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த பணியினை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் செய்கை கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கவனம் தேவை. குடும்பம் தொடர்பான காரியங்களை பொறுப்பாக செய்வது நல்லது. அடுத்தவரை நம்பி எதையும் விடாமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

க்ருத்திகை: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

ரோகினி: கௌரவம் உயரும்.

ம்ருகசீரிஷம்: விரும்பிய பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்

இன்று மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த

குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

ம்ருகசீரிஷம்: வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

திருவாதிரை: கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

புனர்பூசம்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்

இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் வியாபார விரிவாக்கம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்க பெறுவீர்கள். வராது என்று எண்ணியபணம் வந்து சேரும்.

புனர்பூசம்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.

பூசம்: பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்: குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வாழ்க்கை துணையினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர வழியில் வேண்டிய உதவி கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மன தைரியம் கூடும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சமூகத்தில் மரியாதை உயரும். பணவரத்து பலவழிகளில் இருக்கும் அதே நேரத்தில் செலவும் வரும். வாக்கு வன்மையால் புகழ் கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும். புதிய நபர்களை நம்பி எதையும் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

மகம்: தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பூரம்: உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்கும்.

உத்திரம்: துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி

இன்று எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி அமையும். அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். உறவினர்களுடன் சுமூகமான போக்கு காணப்படும். அவர்களால் நன்மையும் உண்டாகும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல் தரும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சிற்றின்பம் கிடைக்கும். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலை காணப்படும்.

உத்திரம்: எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

ஹஸ்தம்: தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை: பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்

இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள். பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

சித்திரை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.

ஸ்வாதி: வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம்: மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்

இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம். தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விசாகம்: எதையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

அனுஷம்: கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

கேட்டை: எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

தனுசு

இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

மூலம்: சக ஊழியர் களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பூராடம்: எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

உத்திராடம்: மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது. கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

உத்திராடம்: குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம்.

திருவோணம்: பணவரத்து அதிகரிக்கும்.

அவிட்டம்: மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

அவிட்டம்: வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

சதயம்: முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

பூரட்டாதி: பணவரத்து திருப்திதரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மீனம்

இன்று திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள் . சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், பாதிப்பை உண்டாகாமல் காப்பாற்றப்ப்டுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

பூரட்டாதி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்திரட்டாதி: பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.

ரேவதி: நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com