
இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
அசுபதி:சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.
பரணி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.
கிருத்திகை 1ம் பாதம்:உயர் பதவிகளும் கிடைக்க கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
ரோஹிணி: பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும்.
திருவாதிரை: பணவரத்து அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: பெற்றோர் ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
பூசம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும்
ஆயில்யம்: பெற்றோர் ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
இன்று வாழ்க்கையில் முன்னேற சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மகம்: எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும்.
பூரம்: வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
உத்திரம் 1ம் பாதம்: எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.
ஹஸ்தம்: பணவரத்து தாமதப்படும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
இன்று இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.
ஸ்வாதி: புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.
விசாகம் 4ம் பாதம்: குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அனுஷம்: விருந்தினர் வருகை இருக்கும்.
கேட்டை: மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.
மூலம்: மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.
பூராடம்: புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
இன்று எடுத்த காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.
திருஓணம்: அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மைதரும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சதயம் 4ம் பாதம்: பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
இன்று எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பூரட்டாதி 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
உத்திரட்டாதி: புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
ரேவதி: செயல் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5