dina palan
dina palan

20-10-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

அஸ்வினி: பணவரத்து கூடும்.

பரணி: வங்கியில் இருப்பு கூடும்.

க்ருத்திகை: மன நிம்மதி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்

இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும்.

க்ருத்திகை: பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

ரோகினி: செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மிருகசீரிஷம்: மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மிருகசீரிஷம்: அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

திருவாதிரை: குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.

புனர்பூசம்: சுபகாரியம் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

கடகம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம்: திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

பூசம்: கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.

ஆயில்யம்: கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்

இன்று மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும்.

மகம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

பூரம்: நெடு நாளைய சங்கடம் தீரும்.

உத்திரம்: எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி

இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.

உத்திரம்: மரியாதை அந்தஸ்து கூடும்.

ஹஸ்தம்: எதிர்ப்புகள் விலகும்.

சித்திரை: மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.

சித்திரை: எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

ஸ்வாதி: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விசாகம்: வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

விசாகம்: புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

அனுஷம்: காரிய அனுகூலம் ஏற்படும்.

கேட்டை: உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

மூலம்: எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

பூராடம்: பணம் வரத்து கூடும்.

உத்திராடம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

உத்திராடம்: நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.

திருவோணம்: எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அவிட்டம்: அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும்

அவிட்டம்: வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

சதயம்: தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

பூரட்டாதி: வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள்

திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

பூரட்டாதி: தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.

உத்திரட்டாதி: புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

ரேவதி: மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com