dina palan
dina palan

25-11-2022

வெள்ளிக்கிழமை

மேஷம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

அசுபதி: இன்று வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது.
அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள்.அலைச்சல்கள் வரலாம்.

பரணி: அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.

கிருத்திகை 1ம் பாதம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்டஎண்கள்: 2, 5

ரிஷபம்

இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் மனக்கவலை உண்டாகும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.

ரோஹிணி: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்

இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.  எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.

திருவாதிரை: பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்

இன்று வாடிக்கையாளர்க ளிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட  குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும்  வரலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பூசம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும்.

ஆயில்யம்: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக  பேசுவது நல்லது.  உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமத மாகும். மனகவலை ஏற்படலாம்.

மகம்: சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்.

பூரம்: பணவரத்து திருப்தி தரும்.

உத்திரம் 1ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி

இன்று குழந்தைகளின்  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். சந்திரன் சஞ்சாரம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

ஹஸ்தம்: எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்

இன்று ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை  ஏற்படும்.

ஸ்வாதி: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை  தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.

அனுஷம்: இன்று எதிர்ப்புகள் நீங்கும்.

கேட்டை: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுசு

இன்று குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

மூலம்: விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

பூராடம்: வாக்கு வன்மை நன்மையை தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்

இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். சந்திரன் சஞ்சாரத்தால் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

திருஓணம்: எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்

இன்று சுகாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்

இன்று லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

உத்திரட்டாதி: அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

ரேவதி: மனகஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com