dina palan
dina palan

29-09-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாகும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.

அஸ்வினி: வராமல் நின்ற பணம் வந்து சேரும்.

பரணி: பயணங்கள் சாதகமான பலனை தரும்.

க்ருத்திகை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

இன்று தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்திசாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.

க்ருத்திகை: பணவரத்து திருப்தி தரும்.

ரோகினி: முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மிருகசீரிஷம்: சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்

இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

மிருகசீரிஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.

திருவாதிரை: புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

புனர்பூசம்: ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கடகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

புனர்பூசம்: எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.

பூசம்: பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

ஆயில்யம்: கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

இன்று எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த வேகம் குறையும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். பார்ட்னர்கள் மூலம் தடங்கல் உண்டாகலாம் கவனம் தேவை.

மகம்: வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது.

பூரம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்திரம்: எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் தடைகளையும், தாமதத்தையும் சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தாமதமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது.

உத்திரம்: மற்றவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது நலல்து.

ஹஸ்தம்: முன்னேற்றம் காணப்படும்.

சித்திரை: எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்

இன்று மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்ப்புகள் குறையும். காரியத்தில் ஏற்பட்ட தடை,

தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள்.

சித்திரை: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

ஸ்வாதி: கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

விசாகம்: பயணங்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும்.

விசாகம்: மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

அனுஷம்: நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள்.

கேட்டை: திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3

தனுசு

இன்று எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள்.

மூலம்: நிதானமாக எதையும் செய்வது நல்லது.

பூராடம்: எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

உத்திராடம்: பயணங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று பேச்சு திறமை கை கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உத்திராடம்: தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும்.

திருவோணம்: பணதட்டுப்பாடு சரியாகும்.

அவிட்டம்: வீண்பழி நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 7

கும்பம்

இன்று கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். உங்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம்: சில்லறை சண்டைகள் சரியாகும்.

சதயம்: குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும்.

பூரட்டாதி: வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீல

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி: விருந்தினர் வருகை இருக்கும்.

உத்திரட்டாதி: உறவினர், நண்பர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

ரேவதி: நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1,2

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com