dina palan
dina palan

10-12-2022

சனிக்கிழமை

மேஷம்

இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்  மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

அசுபதி:இன்று மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா நாட்டியம் நாடகம் சித்திரம் சிற்பம் முதலிய கலைத்துறை சம்பந்தப்பவர்களுக்கு அமோகமான வரவெற்பு ஏற்படும். பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் காலமிது. உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள்.

பரணி:இன்று சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அலைச்சல் கடுமையாக இருக்கும். ஓரிரு பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம். குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதும் நல்லதே. குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது.

கிருத்திகை 1ம் பாதம்:இன்று உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்

இன்று கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.  ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான  விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:இன்று அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு எண்ணெய் வகையறாக்கள் தோல் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.

ரோஹிணி:இன்று ஸ்பெகுலேஷன் துறைகள் அளவோடு நன்மை தரும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. கலைத்துறையினர் மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஜாதகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்

இன்று வீண் செலவு கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். எந்த வேலையை செய்தாலும் மன திருப்தி உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று தாய் மற்றும் தாய்  வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின்  கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக  இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.

திருவாதிரை:இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி  போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து  செயல்படவும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று நீங்கள் நல்லது சொன்னாலும் செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம்  நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம்  கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பல வித குழப்பங்கள் வந்து வந்து போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும்.

 புனர்பூசம் 4ம் பாதம்: இன்று சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ  தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்ப  ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது  நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூசம்: இன்று வழக்கு  வியாஜ்ஜியங்களில் வெற்றி பெற பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும்  உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில் அதிரடியாக புதிய  வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம்  கண்டு கொள்வீர்கள்.

ஆயில்யம்: இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக  இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 3, 9

சிம்மம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வாகனங்களில் செல்லும் போது  கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

 மகம்:இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.
பூரம்:இன்று பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு மரியாதை  உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில்  நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம்  அடிக்கடி உரையாடுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்:இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய்  வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்.  பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர  பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

இன்று அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல்  செய்வதில் வேகம் இருக்கும்.

 உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று சுபகாரியங்களில் கலந்து  கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம்  தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு  உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும்.
ஹஸ்தம்:இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.  மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு  வாகனம் மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த  கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி  கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

இன்று கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும்  கிடைக்கும்.

 சித்திரை 3, 4ம் பாதங்கள்: இன்று உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள் அரசுப்பணியாளர்கள் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள் விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

ஸ்வாதி: இன்று நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: இன்று வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம் நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

இன்று மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம்  நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும்.

விசாகம் 4ம் பாதம்:இன்று கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும்.
அனுஷம்:இன்று பொருளாதார சிக்கல்கள் விலகும். விவசாயிகளுக்கு புதியதோர் உற்சாகம் பிறக்கும். வியாபாரம் செழிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும். எதிலும் உஷாராக இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள்.

கேட்டை: இன்று முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும். பெற்றோர் நலம் சிறப்படையும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. தசாபுக்தி சாதகமாக இருப்போருக்கு நற்பலன்கள் விரைந்து நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9 

தனுசு

இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

மூலம்: இன்று குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். புதிய முயற்சிகளை ஈடுபடும் போது ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.

பூராடம்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.
உத்திராடம் 1ம் பாதம்: இன்று முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம்.எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது ல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்

இன்று கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.

திருஓணம்:இன்று பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம் உரிமை அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

சதயம் 4ம் பாதம்:இன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்டஎண்: 5, 6

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். புதிய நபர்களிடம்  கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.

உத்திரட்டாதி:இன்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

ரேவதி:இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com