சிம்மம் - 28-12-2022
இன்று தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். சொத்து சம்பந்தப்பட்ட இனங்களில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. வாழ்க்கைத்துணை வழியில் மிகுந்த அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். .
மகம்:இன்று பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூரம்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6