
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.
மகம்:இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.
பூரம்:இன்று எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:இன்று உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வம் புரளும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9