மீனம்-21-12-2022
இன்று தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. அதே வேளையில் தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. எந்தக் காரியங்களையும் நிதானமாக யோசித்து செய்வது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்:இன்று பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தாய் வழி உறவில் நன்மை வந்து சேரும்.
உத்திரட்டாதி:இன்று தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இன்று புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும்.
ரேவதி:இன்று பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியோர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளை தகர்த்து தாமதமின்றி வெற்றி கிடைக்கும். விளையாட்டில் சாதனைகளை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9